பழங்கால ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களையும் சேகரித்து வைத்திருக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, லட்சாதிபதி ஆகும் வாய்ப்பு உள்ளது. Old is Gold என்ற பழமொழி பலருக்கு தெரிந்திருக்கும். அதனை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் ஒரு அற்புத வாய்ப்பு உள்ளது. மிக அரிய பழங்கால நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் மூலம் ஆயிரக்கணக்கில் அல்லது லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.
புழக்கத்தில் அல்லாத, கிடைப்பதற்கு அரிய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்கி வைத்துக் கொள்ள பலர் விரும்புகின்றனர். இதற்காக பெரும் தொகையை செலுத்தவும் தயாராக உள்ளனர். இதனை விற்பனை செய்ய ஆன்லைன் தளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.
உங்கள் வீட்டு உண்டியலில் அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் பாட்டி தாத்தாவிடம், உங்களை லட்சாதிபதியாகும் பழைய 20 ரூபாய் நோட்டு உள்ளதா என்பதை கண்டிப்பாக அறிந்து கொள்ளவும். ஏனெனில் அறிய வகை 20 ரூபாய் நோட்டுக்கு, ரூபாய் 4 லட்சம் வரை கொடுக்க பலர் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
அரிய வகை ரூபாய் நோட்டுகள்
உங்களிடம் இருக்கும் பழைய 20 ரூபாய் நோட்டில், 786 என்ற எண் இருந்தால் உங்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது எனலாம். 786 என்ற எண் இஸ்லாமிய மதத்தில் மிகவும் புனிதமான எண்ணாக கருதப்படுகிறது. மேலும் பலர் இதை அதிர்ஷ்டத்தை கொடுக்கும் எண்ணாக கருதுகின்றனர். அதோடு நோட்டின் நிறம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். இதற்கு நான்கு லட்சம் ரூபாய் வரை கொடுக்க பலர் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
பழைய நோட்டை விற்பனை செய்யும் முறை
உங்களிடம் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுக்களை விற்பனை செய்வது மிகவும் எளிதான விஷயம்தான். உங்களிடம் மொபைல் போன் அல்லது லேப்டாப் அல்லது கணினி இருந்தால் போதும். வேர்ல்ட் பஜார் போன்ற இணையதளங்கள் மூலம் இந்த அரிய நோட்டுக்களை வீட்டில் அமர்ந்தபடியே விற்கலாம். ஈபே போன்ற தளங்களுக்கு சென்று பதிவு செய்து, உங்களிடம் இருக்கும் பழைய ரூபாய் நோட்டின் புகைப்படத்தை எடுத்து பதிவேற்றி, விற்பனைக்கு பட்டியலிடலாம்.
மேலே குறிப்பிட்டுள்ள தகவல்கள், ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களுக்கு Zee News பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | புதிய 50 ரூபாய் நோட்டை வெளியிடும் RBI .. இனி பழைய 50 ரூபாய் நோட்டு செல்லுமா?









