Japanese Techniques To Have Healthy Relationship : இன்றைய காலக்கட்டத்தில், காதலிப்பது சிக்கல் கிடையாது, காதல் உறவில் நிலையாக இருப்பதுதான் சிக்கல். அந்த உறவை நிலை நிறுத்துவது என்பது பலருக்கு கடினமான விஷயமாகி போய் விடுகிறது. இதற்கு, ஜப்பானியர்கள் சில வழிகளை பின்பற்றுகின்றனர். அது குறித்து இங்கு பார்ப்போம்.
சிறிய மோதல்களை தவிர்க்க:
எந்த உறவும் நிலைக்க வேண்டுமெனால், பேச வேண்டிய விஷயங்களை சரியாக பேசித்தீர்த்துக்கொள்வது அவசியம் ஆகும். இதை செய்யாமல் போனால், சின்னதாக வளரும் சண்டைகள் நாளடைவில் பெரிதாகி உறவில் விரிசலை ஏற்படுத்திவிடும். இதனை தவிர்க்க, ஜப்பானியர்கள் Aimai எனும் ஒரு வழக்கத்தை பின்பற்றுகின்றனர். காதலர்களாக இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள, இதனை பின்பற்றுகின்றனர். சில விஷயங்களை நேரடியாக சொல்வதாலேயே பிரச்சனை வரும். இதை, மறைமுகமாக எப்படி சொல்வது என்பதை இதில் பழக்குகின்றனர். இது, தேவையற்ற சண்டைகள் வராமல் தடுக்கலாம்.
பொறுமை-நிதானம்:
ஜப்பானிய கலாச்சாரத்தில் பின்பற்றப்படும் இன்னொரு முறை காமன். இதற்கு பொறுமை அல்லது நிதானம் என்று பெயர் இதனை ஒரு உறவில் செலுத்தி அதனை பின்பற்றினால், அதில் எழும் சவால்களை எளிமையாக தீர்க்கலாம் என கூறப்படுகிறது. சவால்களும், மாற்றுக்கருத்துகளும் ஒரு உறவில் இருப்பது பெரிய விஷயமல்ல. ஆனால், அதனை தீர்க்காமல் விட்டுவிட்டால் நாளடைவில் அதுவே ஆப்பாக முடிந்து விடலாம்.
நன்றியறிதல்:
ஜப்பானியர்களின் கலாச்சாரத்தில் இன்னொரு முறை Itadakimasu. இதற்கு அர்த்தம், வாழ்வில் கிடைக்கும் சின்ன சின்ன விஷயங்களுக்கும் நன்றியுடன் இருப்பது என்பதாகும். உணவு, உடை, உயிர் என அனைத்திற்கும் நன்றியுடன் இருக்க வேண்டும் என்பதை காண்பிக்கும் முறை இது. இதனை, காதல் அல்லது திருமண உறவிலும் கடைப்பிடிக்கலாம். ஒருவர் தனக்கு கிடைத்திருக்கும் துணையை நினைத்து நன்றியுடன் இருப்பது, அவர்களுக்கு காதலால் நன்றி சொல்வது என்பது இந்த முறையில் கடைப்பிடிக்கும் பழக்கமாகும். இதனால், அந்த உறவு மேம்படுவதோடு இன்னும் மகிழ்ச்சியானதாகவும் மாறும்.
ஸ்பேஸ் கொடுப்பது:
இந்த ஜப்பானிய முறைக்கு பெயர் மா. எந்த விஷயத்தை செய்யும் போதும் அதில் சிறிது பிரேக் எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். இது, காதல் அல்லது திருமண உறவுக்கும் பொறுந்தும். ஆரோக்கியமான உணவுகளில் கூட இப்படிப்பட்ட ஸ்பேஸ் அவசியம். இது, நமக்கு மூச்சுவிட நேரம் கொடுப்பதோடு உணர்ச்சி ரீதியாக நம்மை சோர்வடைய வைக்காமலும் பார்த்துக்கொள்ளும். இதனால், உங்கள் உறவு இன்னும் பன்மடங்காக மேம்படும். இருவரும் சில நாட்கள், தங்களுக்கு பிடித்த நடவடிக்கைகள் மட்டும் செய்வதால், கண்டிப்பாக உங்களை நீங்கள் மேம்படுத்திக்கொள்வதோடு, உறவையும் வேறு கோணத்தில் இருந்து பார்க்க முடியும்.
நல்லிணக்கம்:
இதனை இந்த ஜப்பானிய முறையில் Wa என்று குறிப்ப்பிடுகின்றனர். இதற்கு அர்த்தம், உறவில் மகிழ்ச்சி மற்றும் அமைதியை காக்க, செய்யும் சில நடவடிக்கைகள் ஆகும். இதில், பரஸ்பர மரியாதை, உணர்ச்சி ரீதியான அறிவு, உறவின் உறுதியான நிலை ஆகியவை தேவைப்படும். இருவரும் ஒருவருக்கொருவர் தியாகம் செய்யவும், புரிந்து கொள்ளவும், ஈகோவை புறந்தள்ளிவிட்டு ஒருவருக்கொருவர் நல்லிணக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இந்த நடைமுறையானது, காதலில் இருக்கும் இருவரையும் மீண்டும் இன்னும் வலுவாக சேர்த்து வைக்குமாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r









