)
கர்நாடகாவில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சி: இயற்கை ஆர்வலர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் சாகசப் பிரியர்கள் என அனைவருக்கும் ஏற்ற சுற்றூலா தலம் ஜோக் நீர்வீழ்ச்சி. கர்நாடக மாநிலத்தில் ஷிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த பிரமாண்ட நீர்வீழ்ச்சி இந்தியாவிலேயே மிக உயரமான, செங்குத்தான நீர்வீழ்ச்சி. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் பாயும் ஷராவதி நதி, ஜெரு ஸப்பே என்ற கிராமத்துக்கு அருகே வந்த பின் ஜோக் ஃபால்ஸ் என்ற பெயர் கொண்ட நீர்வீழ்ச்சியாக அனைவர் மனதையும் குளிர்வித்து, ஹொன்னாவர் என்ற இடம் வரை ஆறாகப் பாய்ந்து, பின்னர் அரபிக் கடலில் கலக்கிறது.
ஜோக் நீர்வீழ்ச்சியின் சிறப்புகள்
சுமார் 830 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி நான்கு கிளைகளாகப் பிரிந்து அருவியாக வீழ்கிறது. முதலாவதாக விழும் அமைதியான அருவி ராஜா அருவி என்று பெயர் கொண்டது. இது 830 அடி உயரத்திலிருந்து பாறை அல்லது வனப் பகுதி என்று எந்தத் தடையும் இல்லாமல் நேராக விழுகிறது. இரண்டாவது அருவி, மலைப் பாறைகள் இடையே புகுந்து பேரிரைச்சலுடன் விழுகிறது. இந்த இரைச்சல் கர்ஜனை போன்று இருப்பதால் இதற்கு ரோரர் ஃபால் அதாவது கர்ஜிக்கும் அருவி என்று பெயர். மூன்றாவது அருவி, ஒரு பெரிய துவாரம் வழியாக அதிவேகத்துடன் விழுவதால் ராக்கெட் அருவி என அழைக்கப்படுகிறது. நான்காவது மிக நளினமாக ஒரு பெண்ணின் வடன அசைவுகளை நினைவூட்டுவதால் , 'லேடி பிளான்ச்' என அழைக்கப்படுகிறது. இங்கு சூரிய அஸ்தமனம் மற்றும் சூரிய உதயத்தின் காட்சிகள் உங்களை மயக்கும்.
ஜோக் நீர்வீழ்ச்சியை எப்படி அடைவது: ஷிமோகா (சுமார் 100 கி.மீ) அதன் அருகிலுள்ள ரயில் நிலையம். ஹெப்பால் அல்லது மங்களூர் அதன் அருகிலுள்ள விமான நிலையம் ஆகும். நீங்கள் சாலை வழியாக இங்கு வர திட்டமிட்டால், பெங்களூரிலிருந்து சுமார் 400 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அங்கிருந்து கார் அல்லது பேருந்து மூலம் பயணம் (Travel Tips) செய்யலாம்.
தங்குவதற்கான இடங்கள்
கர்நாடக சுற்றுலாவின் விருந்தினர் இல்லங்களை மலிவு விலையில் இங்கே காணலாம். ஜோக் நீர்வீழ்ச்சியைச் சுற்றி தங்குவதற்கு பல ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்களைக் காணலாம். நீங்கள் சாலை வழியாக பயணம் செய்கிறீர்கள் என்றால், மொபைல் நெட்வொர்க் குறைவாக இருக்கலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள், எனவே ஆஃப்லைன் வரைபடங்களைப் பதிவிறக்கவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ