ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய, ஐஆர்சிடிசி கணக்கு வைத்திருப்பது அவசியம். சாதாரண டிக்கெட், தட்கல் டிக்கெட் என எந்த வகையான டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்றாலும், IRCTC கணக்கு இல்லாமல், இரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாது. இந்நிலையில், இந்திய ரயில்வே தட்கல் டிக்கெட் முன்பதிவு விதிகளில் நடக்கும் மோசடிகளை தடுக்க விதிகளில் முக்கிய மாற்றங்கள் செய்ய திட்டமிட்டுள்ளது.
தட்கல் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவில் நடக்கும் மோசடிகளை தடுக்க நடவடிக்கை
ஐஆர்சிடிசி கணக்கு வைட்டதிருப்பவர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. சில ஐஆர்சிடிசி ஐடிக்கள் மூலம் தட்கல் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தானியங்கி மென்பொருள் பயன்படுத்தப்படுவதை ஐஆர்சிடிசி கண்டறிந்துள்ளது. இதன் மூலம் நொடியில் டிக்கெட் புக் செய்து விடுவதால், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் காலியாகி , பல நேரங்களில் சாதாரண மக்களால் டிக்கெட்டுகளைப் பெற முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த, மோசடியை தடுக்க, கடந்த 6 மாதங்களில் ரயில்வே 2.4 கோடி போலி கணக்குகளை மூடியுள்ளது. இது தவிர, 20 லட்சம் கணக்குகள் மீதான விசாரணையும் நடந்து வருகிறது.
இந்திய ரயில்வே எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை
சாமான்ய மக்கள் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்வதில் சந்திக்கும் பிரச்சனையைக் கருத்தில் கொண்டு, ரயில்வே முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தட்கல் டிக்கெட் முன்பதிவுகளை IRCTC கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது.அதாவது, இப்போது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் கூட தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் 10 நிமிடங்களில், இந்த சாளரத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது.
ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் அட்டையை எவ்வாறு இணைப்பது?
உங்கள் ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் அட்டையை இணைக்கும் செயல்முறை மிகவும் எளிதானது.
1. முதலில், நீங்கள் IRCTC வலைத்தளத்தைத் திறந்து உள்நுழைய வேண்டும்.
2. அடுத்த கட்டத்தில், My Profile சென்று Aadhaar kyc என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இதற்குப் பிறகு நீங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் வெரிஃபை செய்ய வேண்டும்.
4. இந்த வழிமுறையில் உங்கள் ஆதாரை IRCTC கணக்குடன் இணைக்கலாம்.
போலி கணக்குகளை முடக்க நடவடிக்கை
போலி முன்பதிவைத் தடுப்பதே இந்த முடிவின் நோக்கம். ஐஆர்சிடிசியின் சுமார் 13 கோடி பயனர்களில், 1.2 கோடி பயனர்களின் கணக்கு மட்டுமே ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போது ரயில்வே மற்ற பயனர்களை விரைவில் தங்கள் ஆதாரை இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறது, இல்லையெனில் அத்தகைய கணக்குகளையும் செயலிழக்கச் செய்யலாம்.
ரயில்வே டிக்கெட் முன்பதிவுகள் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகின்றன
தினமும் சராசரியாக 2.25 லட்சம் பேர் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கிறார்கள். இந்தக் கணக்குகளில் ஏராளமானவை ஆதார் சரிபார்ப்பு இல்லாமல் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் சந்தேகத்திற்கிடமான முன்பதிவுகள் செய்யப்படுகின்றன. ரயில்வே இதுபோன்ற சுமார் 20 லட்சம் கணக்குகளை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது.
தட்கல் டிக்கெட்டுகள் எவ்வளவு விரைவாக விற்கப்படுகின்றன என்பதை உணர்த்தும் புள்ளிவிவரங்கள்
மே 24 முதல் ஜூன் 2 வரை, ஏசி வகுப்பில் மட்டும் 1.08 லட்சம் தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன. அவற்றில் முதல் நிமிடத்தில் 5,615 டிக்கெட்டுகள், இரண்டாவது நிமிடத்தில் 22,827 டிக்கெட்டுகள் மற்றும் 10 நிமிடங்களுக்குள் 67,159 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன. அதாவது, முதல் 10 நிமிடங்களில் மட்டுமே 62.5% டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. சராசரியாக, ஏசி அல்லாத வகுப்பில் தினம் 1.18 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இவற்றில், 66.4% டிக்கெட்டுகள் முதல் 10 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிடும்.
ஆஃப்லைன் டிக்கெட்டுகளுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படலாம்
ரயில்வே கவுண்டரில் இருந்து முன்பதிவு செய்யப்படும் தட்கல் டிக்கெட்டுகளுக்கு ரயில்வே விரைவில் ஆதார் சரிபார்ப்பை கட்டாயமாக்கக்கூடும். ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இது குறித்து சூசகமாகத் தெரிவித்துள்ளார், மேலும் இ-ஆதார் சரிபார்ப்பிற்குப் பிறகுதான் உண்மையான பயணிக்கு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க | தட்கல் டிக்கெட் புக் செய்ய பயன்படுத்தப்பட்ட... 2.5 கோடி போலி ஐடிக்களை முடக்கிய IRCTC
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









