பெரும்பாலான மக்கள் கடவுள் நம்பிக்கையில் கோவிலுக்கு செல்வது வழக்கம், அப்படி தெய்வங்களை வழிபட செல்கிறவர்கள் கோவிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் சில்லறை, பணம், தங்கம் அல்லது வெள்ளி போன்ற ஏதேனும் ஒன்றை காணிக்கையாக போடுவார்கள்.  சாமியிடம் வேண்டிக்கொண்டு நான் கேட்டது நிறைவேறிவிட்டால் உனக்கு இதனை காணிக்கையாக செலுத்துகிறேன் என்று வேண்டி காணிக்கை செலுத்துவார்கள்.  உண்டியலில் நமது வசதிக்கேற்ப காணிக்கை செலுத்துவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், ஆனால் நாம் உண்டியலில் போடும் பணத்தை யார் வைத்திருப்பார்கள், அதனை எதற்கு பயன்படுத்துவார்கள் என்பது பற்றி நமக்கு தெரியுமா? இப்போது அதை பற்றி தான் நாம் இங்கு விரிவாக பார்க்க போகிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | அதிக பாதாம் ஆபத்தாகலாம்: ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிடுவது நல்லது


தமிழகத்தில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அனைத்து கோவில்களின் உண்டியலை திறக்கும்போதும் முதலில் அறநிலையத்துறையின் இணையாளரிடம் அனுமதி பெறுவது முக்கியமானது.  அவர் அனுமதி தந்தால் மட்டும் தான் கோவில் உண்டியலை திறக்க முடியும்.  உண்டியலில் சாவியானது துணியால் சுற்றி சீல் வைக்கப்பட்டு கோவிலின் அறங்காவலரிடமும், அந்த கோவிலின் எக்சிகியூடிவ் அதிகரியிடமும் இருக்கும்.  மேலும் உண்டியலில் உள்ள பூட்டிலும் சீல் வைக்கப்பட்டு இருக்கும், பணத்தை எண்ணுவதற்கு முன்னர் சில அதிகாரிகள் வந்து அந்த பூட்டையும், சாவியையும் சோதனை செய்வார்கள். கோவில் உண்டியலில் உள்ள பணத்தை எண்ணும்போது இதுகுறித்த அறிவிப்பு பலகை ஒன்றும் வைக்கப்படும்.  


உண்டியல் பணத்தை எண்ணும் அறை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கும், பணத்தை எண்ண வரும் தன்னார்வலர்கள், அதிகாரிகள் என அனைவரையும் முழுமையாக பரிசோதித்து, அவர்களது முக்கியமான அடையாள அட்டைகளை பெற்ற பின்னரே அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.  பணம் எண்ணும் அறையில் மொபைல் பயன்படுத்தக்கூடாது, ஒரு கோவிலின் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் பணியாளர்கள், மாணவர்கள் என இவர்களை உண்டியல் பணம் எண்ணுவதற்கு அனுமதிக்கின்றனர்.  அவர்கள் நாணயங்கள், பணங்கள் என அனைத்தையும் தனித்தனியே பிரித்து வைப்பார்கள், அந்த பணத்தை கோவிலுக்கான கணக்கு தொடங்கப்பட்டுள்ள வங்கியின் அதிகாரிகளை வரவழைத்து சரியாக எண்ணி அந்த பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.



அந்த பணங்கள் கோவிலின் மேம்பாட்டிற்கும், பக்தர்களின் வசதிக்கும் செலவிடப்படுகிறது.  மேலும் உண்டியலில் செலுத்தப்படும் நகைகளை அதிகாரிகள் சரியாக தரம்பிரித்து, எடைபோட்டு கோவில் லாக்கரில் வைத்துவிடுவார்கள்.  அதிக வருமானம் வரும் கோவில்களில் 1 மாசத்திற்குள்ளாகவும், குறைவான வருமானம் வரும் கோவில்களில் 3 அல்லது 4 மாத காலத்திற்கு இடையிலும் உண்டியல் பணம் எண்ணப்படுகிறது.  அதிலும் குறிப்பாக பசிலி ஆண்டு எனப்படும் ஜூன் மாத இறுதியில் அனைத்து கோவில்களின் உண்டியல் பணமும் எண்ணப்படுகிறது.  மேலும் உண்டியலில் போடப்படும் பணத்தை அறநிலையத்துறை என்ன செய்கிறது என்பது குறித்த தகவலை hrce.tn.govt.in இந்த இணையதளத்தில் மக்கள்  விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ-வில் பம்பர் ஏற்றம், ரூ. 40,000 வரை சம்பளம் அதிகரிக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR