கொரியர்கள் பளபளப்பாக இருக்க காரணம்! ‘இந்த’ சிம்பள் பொருளை முகத்தில் தேய்ப்பார்களாம்..

Korean Skin Care Beauty Hacks : கொரியர்களின் சருமம் பார்க்கும் பாேதே கண்ணாடி போல இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவர்கள் அதை மெயின்டெயின் செய்ய எதை முகத்தில் தேய்க்கிறார்கள் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Mar 13, 2025, 01:59 PM IST
  • கொரிய ஸ்கின் கேர்
  • முகத்தில் தேய்க்கும் விஷயம்..
  • என்ன தெரியுமா?
கொரியர்கள் பளபளப்பாக இருக்க காரணம்! ‘இந்த’ சிம்பள் பொருளை முகத்தில் தேய்ப்பார்களாம்..

Korean Skin Care Beauty Hacks : இந்தியர்களான நம்மில் பெரும்பாலானோருக்கு, கொரியர்களின் உணவு முறை மற்றும் அவர்கள் அவர்களை பார்த்துக்கொள்ளும் முறையின் மீது பெரிய ஈர்ப்பு இருக்கிறது. இதற்கு காரணம், இளைசுகள் பலர் தொடர்ந்து K-Drama பார்ப்பதால் இருக்கலாம். அல்லது BTS, Black Pink என்று பெயர் வைத்த கொரிய பாடகர்கள் இந்தியாவில் பிரபலமாக இருப்பதால் இருக்கலாம். எது எப்படி இருப்பினும், கொரியர்கள் அழகான சில மனிதர்களாக இந்த உலகில் நடமாடிக்கொண்டு இருக்கின்றனர் என்பது மட்டும் உறுதி. இவர்களால் ஈர்க்கப்படும் நம்மை போன்றோரும் அவர்களின் ஸ்கின் கேரை பின்பற்ற வேண்டும் என்றும், அவர்களை போல டயட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நினைக்கிறோம். சரி, கொரியர்கள் கண்ணாடி போல தங்களது முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள முகத்தில் என்ன தேய்க்கின்றனர் தெரியுமா? இங்கு அது குறித்து பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

முகத்தில் தேய்ப்பது..

கொரிய நாட்டை சேர்ந்தவர்கள், தங்களது சருமத்தை சரியாக பராமரிக்க அனைவரையும் போல க்ளென்ஸிங், ஸ்கரப்பிங் என அனைத்தையும் பின்பற்றுகின்றனர். அது மட்டுமன்றி அவர்கள் சில எண்ணெய்களையும் முகத்தில் தேய்க்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

1.இதில் முதலாவதாக வருவது, கமேலியா எண்ணெய். இது சருமத்தை  ஈரப்பதமாக வைத்திருக்க உதவுவதோடு தலைக்கு தேய்த்தாலும் நல்ல பயனை தரும் என கூறப்படுகிறது.

2.கொரியர்கள் பயன்படுத்தும் இன்னொரு எண்ணெய், Jojoba Oil. இது, சருமத்திற்கு இயற்கை சீரம் ஆக விளங்குவதுடன், சருமத்தை மாய்ஸ்ட்ரைஸ் செய்து முகப்பருக்கள் வராமலும் தடுக்கும்.

3.கொரியர்கள் அரிசி தவிட்டு எண்ணெய்யையும் (Rice Bran Oil) உபயோகிக்கின்றனர். இதில் வயதான தோற்றம் மற்றும் முகச்சுருக்கம் அவ்வளவு எளிதில் வர விடாமல் தடுக்கும் என கூறப்படுகிறது.  அதே போல, முகத்தில் எங்காவது கருப்பான தடங்கள் தெரிந்தாலும் அதையும் இந்த எண்ணெய் வர விடாமல் தடுக்கும் என கூறப்படுகிறது.

இந்த எண்ணெய்கள் மட்டுமன்றி கொரியர்கள் பலர் டீ-ட்ரீ எண்ணெய், ரோஸ்ஹிப் எண்ணெய், ஆர்கான் எண்ணெய் உள்ளிட்டவற்றையும் உபயோகிக்கின்றனர்.

கொரியர்கள் பின்பற்றும் பிற விஷயங்கள்:

ஆயில் க்ளென்சிங்: 

ஆங்கிலத்தில் Cleansing என்றால், சுத்தப்படுத்துதல் என்று அர்த்தம் ஆகும். கொரியர்கள் வேலை எல்லாம் முடிந்து மாலை வீடு திரும்பிய பிறகு, எண்ணெயை வைத்து முகத்தில் இருக்கும் மேக்-அப், சன்ஸ்க்ரீன் உள்ளிட்ட அனைத்தையும் நீக்கி விடுவார்களாம். இது, அவர்களின் சருமத்திற்கு சரியான ஆக்ஸஜனை வழங்கும் என கூறப்படுகிறது.

சன்ஸ்க்ரீன்: 

பெரும்பாலான மருத்துவர்கள் நம்மிடம் “வெளியில் செல்லும் போது தயவு செய்து சன்ஸ்க்ரீன் போட்டுக்கொண்டு செல்லுங்கள்” என்று கூறுவதை கேட்டிருப்போம். இவ்வளவு ஏன்? ஒரு பிரபல ஹாலிவுட் நடிகரும் கூட தனக்கு சரும கேன்சர் வந்தவுடன் அனைவரும் சன்ஸ்க்ரீன் போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். கொரியர்கள் இதை செய்ய தவறுவதே இல்லை. அவர்கள், வெளியில் சென்றாலும், செல்லவில்லை என்றாலும், மழை காலத்திலும் கூட சன்ஸ்க்ரீன் உபயோகிக்கின்றனர்.

நீர்ச்சத்து:

சருமம், காய்ந்து போகாமல் இருக்க, தண்ணீர் நன்றாக குடிக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், இந்த விஷயம் தெரிந்தும் பலர் இதை செய்யாமல் இருப்பர். ஆனால், கொரிய நாட்டை சேர்ந்தவர்கள் அப்படியல்ல. அவர்கள் நன்றாக தண்ணீர் குடித்து, தங்களது சருமத்தை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்கின்றனர்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | வெயிட் லாஸ் ஆக கொரியர்கள் குடிக்கும் மேஜிக் பானங்கள்! வீட்டிலேயே செய்யலாம்..

மேலும் படிக்க | வெயிலில் சென்றாலும் முகம் கருக்காமல் இருக்க கொரியர்கள் செய்யும் விஷயம்! ரொம்ப சிம்பிள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News