Actress Sridevi Beauty Tips When She Was Young : நடிகைகள் தங்களின் அழகு கெடாமல் பார்த்துக் கொள்ள சில மாடர்ன் ஆன விஷயங்கள் இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டன. அதற்கு முன்னரே ஶ்ரீதேவி தனது அழகை பராமரித்து வந்தார். அதற்காக அவர் செய்த விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
லேடி சூப்பர் ஸ்டாராக விளங்கியவர்..
தென்னிந்திய திரையுலகை ஒரு காலத்தில் ஆண்டு வந்தவர், ஸ்ரீதேவி. இவர் பெயரை சொன்னால் தெரியாத 90s குழந்தைகளே இருக்க முடியாது. காரணம், அனைவருக்கும் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அதிக முறை சேர்ந்து நடித்த ஒரே நடிகை இவர்தான். அதுமட்டுமல்ல, 5 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 35 வயது வரை சினிமாவிற்காவே வாழ்ந்து ஒரு காலத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டார். திருமணத்திற்கு பிறகுதான், இவர் திரையுலகை விட்டு விலகினார். 2018ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக இவர் உயிரிழந்தது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
Sridevi Beauty Secrets | ஸ்ரீதேவியின் பியூட்டி சீக்ரெட்..
நாம், வெளிப்புற அழகுக்காக என்ன செய்தாலும் உள்ளிருந்தும் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே முகப்பொலிவு ஏற்படும். ஸ்ரீதேவி எப்படி தன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் ஒரு பெண்ணாக இருந்தார். ஸ்ரீதேவி உள்பட, பழைய நடிகைகள் பலர் தாங்கள் இளமையாக இருந்த போது அந்த அழகை பராமரிக்க நேச்சுரலான சில விஷயங்களையே பின்பற்றி வந்தனராம். குறிப்பாக, ரோஸ் வாட்டர், மஞ்சள், ஆல்மண்ட் ஆயில், பால் ஆகியவை அவர்களின் ஸ்கின் கேரில் தவறாமல் இடம் பெற்றிருந்ததாம்.
Sridevi Skin Care Tips | முகத்திற்கு..
ஆல்மண்ட் ஆயில், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை வைத்து அடிக்கடி முகத்திலும், வெளியில் தெரியும் இடங்களிலும் தடவி தங்களின் சருமத்தை மாய்ஸ்ட்ரைஸாக வைத்து கொள்வார்களாம். இது, அவர்களின் சருமத்தில் எளிதில் சுருக்கம் விழாமல் காத்தது. தலைக்கு எண்ணெய் வைக்கும் நாட்களில் ஆயில் மசாஜ் செய்து கொள்வாராம். இதுதான் இவரது முடி அடர்த்தியாகவும் அதிகமாகவும் வளர உதவியதாம். வயதான பின்பு கூட ஸ்ரீதேவி பெரும்பாலும் தனது முடிக்கு டை அடிக்க மாட்டாராம். அடிக்கடி மசாஜ் செய்து கொண்டு, fruit facial செய்து கொள்வாராம்.
மேக் அப்:
இப்போது இருப்பது போல, அந்த காலத்தில் மேக்-அப் பொருட்களும் கூட பெரிதாக இல்லை. அவற்றை போடுவதற்கும் நீக்குவதற்கும் எளிதாக இருக்குமாம். அதே போல இவர் எங்கு வெளியில் சென்றாலும் கண்களில் மை, ஐ லைனர், பெளடர் மற்றும் சிறிதளவு ஐ-ஷேடோ ஆகியவற்றை மட்டும் போட்டு செல்வார்களாம்.
Sridevi Diet | டயட்:
ஸ்ரீதேவி தான் இளமையாக இருந்தது முதல், வயதான போது கூட சரியான உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வாராம். ஒருமுறை நேர்காணலில் பேசிய இவர், தனக்கு வீட்டில் சமைத்த உணவுகளை தவிர வேறு எதையும் சாப்பிட பிடிக்காது என்றும் கூறியிருக்கிறார். அதே போல, உடலை சரியாக பார்த்துக்கொள்ள மற்றும் சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள நீர்ச்சத்துடன் இருப்பது அவசியம். இதனை கடைசிவரை பின்பற்றிய நடிகை ஸ்ரீதேவி, நன்றாக தண்ணீர் குடிப்பாராம்.
Sridevi Fitness Tips | உடற்பயிற்சி:
ஸ்ரீதேவி, இளமையாக இருந்த காலத்தில் ஓடியாடி விளையாடியவர். இந்த பழக்கத்தை அவர் வயதான பின்பு கூட விடவில்லை. தனக்கு குழந்தை பிறந்த பின்பும் கூட இவர், அவர்களுடன் வெளியில் விளையாடுவாராம். அதே போல, குழந்தைகள் வளர்ந்த பின்பு அவர்களுடன் சேர்ந்து டென்னிஸ் விளையாடுவாராம். ஜான்வி கபூருடன் அடிக்கடி ஜாக்கிங்கும் சென்று வந்திருக்கிறார்.
நடிகை ஸ்ரீதேவி, தனது மூக்கின் அமைப்பை மாற்றிக்கொள்ள அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அதற்கு முன்பும் பின்பும் மேற்கூறிய விஷயங்களை அவர் பின்பற்றியதாக கூறப்படுகிறது.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் ஸ்ரீதேவி பின்பற்றியவை. இதனை நீங்கள் பின்பற்றும் முன் உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | குழந்தை பெற்றாலும் பளபளனு இருக்கும் அமலா பால்..இந்த பழக்கத்தை மறக்க மாட்டாங்களாம்!
மேலும் படிக்க | 73 வயதிலும் இளமையாக இருக்கும் நடிகை!! தினமும் சாப்பிடும் ஒரே வறுத்த உணவு..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









