கொசுக்கள் மற்றும் அவற்றால் ஏற்படும் நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள ரசாயனம் மருந்து அல்லது கொசு விரட்டி சுருள்கள்,க்ரீம்கள் என எதுவும் தேவையில்லை. இயற்கையான முறையில் கொசுக்களை விரட்டலாம்.

மழைக்காலத்தில் சிறிய பூச்சிகள் தொல்லை மிகவும் அதிகரிக்கும். குறிப்பாக இந்த காலத்தில், கொசுக்களின் தொல்லை அதிகமாகிறது. மாலை வேளை வந்தவுடன், கொசுக்கள் கூட்டம் வீட்டிற்குள் நுழைந்து நிம்மதியாக உட்கார கூட விடாது. இது தவிர, டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா போன்ற கடுமையான நோய்களின் அபாயமும் கொசுக்களால் அதிகரிக்கிறது. இந்நிலையில், கொசுக்களை விரட்டி அடிப்பது மிக முக்கியம்.
கொசுக்களை இயற்கையான முறையில் விரட்டி அடிக்க
கொசுக்கள் மற்றும் அவற்றால் ஏற்படும் நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள உங்களுக்கு கடுமையான ரசாயனம் மருந்து அல்லது கொசு விரட்டி சுருள்கள், க்ரீம்கள் என எதுவும் தேவையில்லை. இயற்கையான, பாதுகாப்பான முறையில் கொசுக்களை விரட்டலாம். இதற்கு உதவும் செடியை உங்கள் தோட்டத்தில் அல்லது பால்கனியில் வைத்தாலே போதும். இவை வீட்டிற்கு அழகை கொடுப்பதுடன், கொசுக்களைக் விரட்டி அடிக்க உதவுகின்றன.
லெமன் கிராஸ்
உங்கள் வீட்டில் லெமன் கிராஸ் என்னும் எலுமிச்சை புல் செடியை நடலாம். அதன் நறுமணம் நமக்கு எந்த அளவிற்கு நமக்கு பிடிக்கிறதோ, அந்த அளவிற்கு கொசுக்களுக்க் பிடிக்காது . அதனால் ஓடிவிடும். இது தவிர, எலுமிச்சை புல் செடியில் சிட்ரோனெல்லா எண்ணெய் (Citronella Odomus) காணப்படுகிறது. இது ஒரு இயற்கை பூச்சி விரட்டியாக கருதப்படுகிறது. சிட்ரோனெல்லா ஓடோமஸ் வாசனையை கொசுக்களைத் விரட்டுவதில் சிறப்பாக செயல்படும்.
சிட்ரோனெல்லா எண்ணெயின் நறுமணம் கொசுக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது
சில ஆராய்ச்சிகளின் முடிவுகள், சிட்ரோனெல்லா எண்ணெய் கொசுக்களை திசைதிருப்பவும் விரட்டவும் பயனுள்ளதாக இருப்பதைக் காட்டுகின்றன. ஜர்னல் ஆஃப் வெக்டர் சூழலியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, சிட்ரோனெல்லா எண்ணெயின் நறுமணம் கொசுக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக அவை மனிதர்களின் வாசனையை முடியாது. இதனால் அவற்றைக் கடிக்க முடியாது. இதனால் நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.
லெமன் கிராஸ் செடியை எங்கே நடுவது?
நீங்கள் அதை ஒரு தொட்டியிலோ அல்லது தரையிலோ நடலாம். அதே நேரத்தில், எலுமிச்சை புல் செடிக்கு அதிக பராமரிப்பு தேவையில்லை. இந்த செடி வெயிலில் நன்றாக வளரும், அதே போல் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதும். இவை அனைத்தையும் தவிர, இந்த செடி மிகவும் பார்க்கவும் அழகாக இருக்கும்.
லெமன் கிராஸின் பிற ஆரோக்கிய நன்மைகள்
எலுமிச்சை புல் கொசுக்களை விரட்டுவதற்கு மட்டுமல்லாது, ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. அதன் இலைகளிலிருந்து தேநீர் தயாரிக்கப்படுகிறது, இது செரிமானம் மற்றும் சளிக்கு நன்மை பயக்கும். இவை அனைத்தையும் தவிர, இது வீட்டின் காற்றை சுத்திகரிக்கிறது மற்றும் சுற்றுச்சூழலை புத்துணர்ச்சியால் நிரப்புகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், கொசுக்கள் மற்றும் பூச்சிகளால் தொல்லையிய அனுபவித்து வருபவர்கள், ரசாயன தெளிப்பான்கள் மற்றும் சுருள்களுக்குப் பதிலாக, வீட்டில் எலுமிச்சைப் புல் செடிகளை நடலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ