Love And Marital Relationship Tips : காதலில், அன்பும் மரியாதையும் அதிகம் இருக்க வேண்டியது அவசியம். உங்கள் பார்ட்னர், உங்கள் மீது பைத்தியமாக சுற்ற நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

Love And Marital Relationship Tips : எந்த உறவை எடுத்துக்கொண்டாலும் அதற்கு அடித்தளமாக விளங்குவது அன்பு, நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வு. ஆனால், இன்றைய வேகமான உலகில் அதுபோன்ற விஷயங்கள் இருப்பதாக பெரும்பாலான இளைஞர்கள் உணர்வதில்லை. இதனால், பிரேக்-அப்கள் அதிகமாகிறதோ இல்லையோ திருமணமான சில வருடங்களிலேயே விவாகரத்துகளும் அதிகமாகிறது.
உறவுகளில் வரும் சிறு சிறு சண்டைகளும் கூட பெரிய விரிசலுக்கு வழிவகுத்து விடும். இது, தம்பதிகளுக்கு இடையே பெரிய இடைவேளையையும் ஏற்படுத்தி விடும். உங்கள் உறவு, மகிழ்ச்சியாகவும் மேம்படவும் வேண்டும் என நினைத்தால் அதற்கும், உங்கள் பார்ட்னர் உங்களை பைத்தியம் போல காதலிக்க வேண்டும் என்றால் அதற்கு சில விஷயங்களை செய்ய வேண்டும். உங்களது உறவு புதிதாக இருந்தாலும், பல ஆண்டுகள் பழையதாக இருந்தாலும் அதில் இந்த டிப்ஸ்களை பின்பற்ற வேண்டும். அவை என்னென்ன தெரியுமா?
1.சின்ன சின்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்:
அனைத்து பெரிய மாற்றங்களும் சின்ன சின்ன விஷயங்களில் இருந்துதான் தொடங்கும். உதாரணத்திற்கு, உங்கள் பார்ட்னருக்கு பிடித்த உணவை குக் செய்வது, அவர்கள் செய்யும் சின்ன சின்ன சாதனைகளை பாராட்டுவது போன்றவை அதில் அடங்கும். இது, உங்கள் உறவை இன்னும் வலுப்படுத்த உதவுவதோடு, நெடுங்காலம் காதல் குறையாமலும் பார்த்துக்கொள்ளலாம் என சில ரிலேஷன்ஷிப் ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
2. வெளிப்படையாக பேசுவது:
எந்த ஒரு விஷயத்தையும் வெளிப்படையாகவும் நேர்படவும் பேசிவிட்டால் அது பாதி தீர்ந்து விடும். உங்கள் உறவின் ஆழமும், நீங்கள் என்ன பேசுகிறீர்களோ அதை வைத்து தான் தீர்மானம் செய்யப்படும். உங்கள் உணர்வுகளை வெளிப்படையாக கூறிவிடுவதோடு உங்கள் பார்ட்னர் என்ன சொல்ல வருகிறார் என்பதையும் கேட்க வேண்டும். உங்கள் மனதில் எதையும் மறைத்து வைக்க வேண்டாம், ஏனென்றால் இந்த தவறான புரிதல்கள் உங்களது உறவை பலவீனப்படுத்திவிடும். வாரத்திற்கு ஒருமுறை ஒன்றாக அமர்ந்து மனதில் இருக்கும் விஷயங்களை பேசி தீர்ப்பது நல்லது.
3. ஒன்றாக நேரம் செலவிடுதல்:
காதலர்கள் அல்லது தம்பதிகள் இருவரும் ஒன்றாக நேரம் செலவிடுவது என்பது இன்றைய பிசியான உலகில் சாத்தியமற்றதாக மாறிவிட்டது. ஆனால் இதை செய்வதால் கண்டிப்பாக உங்கள் உறவு வலுப்பெறும். உதாரணத்திற்கு ஒன்றாக அமர்ந்த ஒரு படம் பார்ப்பது, பார்க்கிற்கு செல்வது, ஒன்றாக நடை பயிற்சி மேற்கொள்வது, விளையாடுவது உள்ளிட்டவை உங்கள் உறவை வலுப்படுத்த உதவுமாம்.
4. மன்னிப்பது:
இந்த உலகில் யாருமே சரியானவர்கள் கிடையாது. உங்கள் பாட்னா மீது ஏதேனும் விழிப்புணர்வு அல்லது கோபம் இருந்தால் அதனை மன்னிக்க வேண்டும். உங்கள் மீது ஏதேனும் கோபம் இருந்தால் அதையும் மன்னித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அது குறித்தும் மன்னிப்பு கேட்க வேண்டும். இப்படி மன்னிப்பு கேட்பது உங்கள் உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்குவது போன்ற ஒரு விஷயமாகும். இது உங்கள் உறவில் ஏற்படும் டென்ஷன்களை குறைத்து இருவருக்கும் உள்ளான சம மரியாதைகளையும் அதிகரிக்கும்.
5. இன்ப அதிர்ச்சி கொடுப்பது:
பிறந்தநாள் அல்லது ஆண்டு விழா என்றில்லாமல் உங்கள் பார்ட்னருக்கு பிடித்ததை சர்ப்ரைஸ் ஆக வாங்கிக் கொடுக்கலாம். இது ஒரு வித மகிழ்ச்சியை உங்கள் உறவில் கூட்டுவதோடு, உங்கள் பார்ட்னரை ஸ்பெஷலாக உணர வைக்கும். இதனால், உங்கள் உறவு இன்னும் பல கட்டங்களை தாண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ