)
நீரழிவு நோய் அல்லது சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் இரண்டுக்குமே டயட் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இரண்டையும் டயட்டின் மூலம் சிறப்பாக கட்டுப்படுத்த முடியும். அந்த வகையில் மிகக் குறைந்த கலோரி அளவு கொண்ட ராகி மற்றும் சிவப்பு அவல் கொண்டு தயாரிக்கப்படும் ஆரோக்கியமான தோசையை தயாரிப்பது எப்படி என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம். குளூட்டன் அல்லாத, ஊட்டச்சத்தின் களஞ்சியமாக திகழும் கேழ்வரகு என்னும் ராகி மற்றும் சிவப்பு அவல் பல வகைகளில் ஆரோக்கியத்தை (Health Tips) அள்ளிக் கொடுக்கக்கூடிய உணவுகள் என்பது அனைவரும் அறிந்ததே.
சிவப்பு அவல் ராகி தோசை தயாரிக்க தேவையான பொருட்கள்
1. சிவப்பு அவல் - அரைக்கப்
2. கேழ்வரகு அல்லது கேப்பை மாவு - ஒரு கப்
3. மோர் - அரை கப்
4. உப்பு தேவையான அளவு
5. வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது)
6. பச்சை மிளகாய் - 2 அல்லது 3 (பொடியாக நறுக்கியது)
7. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி கருவேப்பிலை சிறிதளவு
8. தோசை வார்க்க கொஞ்சம் நல்லெண்ணெய்
சிவப்பு அவல் கேழ்வரகு தோசை தயாரிக்கும் முறை
முதலில் சிவப்பு அவலை லேசாக கழுவி மூன்று நிமிடம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மிக்ஸியில் ஊற வைத்த சிவப்பு அவலை சேர்த்து நைசாக அரைக்க வேண்டும். பிறகு அதில் கேழ்வரகு மாவு, மோர் தேவையான உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் தயாரிக்கும் மாவு, தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும். மாவு சிறிது நீர்க்க இருந்தால் சிறிது கேழ்வரகு மாவு சேர்த்துக் கொள்ளலாம். தோசை கல்லை அடுப்பில் வைத்து சிறிது சூடான உடன், நல்லெண்ணையை தடவி, மாவை எடுத்து தோசையாக ஊற்றி, அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி கருவேப்பிலையை தூவி, வெந்ததும் திருப்பி போட்டு, எடுத்தால் சுவையான சிவப்பு அவல் ராகி தோசை ரெடி. இதனை ஏதேனும் ஒரு சட்னியுடன் பரிமாறலாம்.
கேழ்வரகு அல்லது ராகியின் ஆரோக்கிய நலன்கள்
சிறுதானியங்களில் ராணி என்று அழைக்கப்படும் கேழ்வரகு என்னும் ராகி புரதம் மற்றும் கால்சியத்தின் சிறந்த மூலம். க்ளூட்டன் அல்லாத தானியமான இதில் இரும்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், நீரிழிவு கட்டுக்குள் இருப்பதோடு, எலும்பு ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், அரிசிக்கு பதிலாக ராகியை பயன்படுத்துவது நல்ல பலனை கொடுக்கும்.
சிவப்பு அவல் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
சிவப்பு அவல் மிகக் குறைந்த கிளைசிமிக் குறியீடு கொண்ட உணவு. இதனால் நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த உணவு. பசையம் இல்லாத உணவான இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கும் அதே நேரத்தில், உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும். ப்ரோபயோடிக் தன்மை கொண்ட சிவப்பு அவலில் இரும்புச்சத்து நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது. சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்களை கொண்ட சிவப்பு அவல், இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இதில் உள்ள வைட்டமின் பி6, நுரையீரலை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ