சந்திர - சூரிய கிரகணம்.. எப்போது வருகிறது, இந்தியாவில் தெரியுமா?

Surya Chandra Grahan 2025 Date And Time: இந்த ஆண்டு, 4 கிரகணங்கள் ஏற்பட உள்ளது. அவற்றில் 2 ஏற்கனவே முடிந்துள்ள நிலையில் தற்போது மற்ற இரண்டு கிரகணங்கள்எப்போது நிகழப் போகிறது என்று பார்ப்போம். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 7, 2025, 04:56 PM IST
  • இந்த வருடத்தின் இரண்டாம் சந்திர கிரகணம் எப்போது நிகழப் போகிறது?
  • இந்த வருடத்தின் இரண்டாவது சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியுமா?
  • 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் எப்போது நிகழும்?
சந்திர - சூரிய கிரகணம்.. எப்போது வருகிறது, இந்தியாவில் தெரியுமா?

Solar Lunar Eclipse 2025 Date And Time: இந்த ஆண்டு, 4 கிரகணங்கள் ஏற்பட உள்ளது. அவற்றில் 2 கிரகணங்கள் ஏற்கனவே முடிந்துள்ள நிலையில் தற்போது மற்ற இரண்டு கிரகணங்கள் எப்போது நிகழப் போகிறது என்று பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

இந்த வருடத்தின் இரண்டாம் சந்திர கிரகணம் எப்போது நிகழப் போகிறது? - When will the second lunar eclipse of the year occur?
இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி, 2025 அன்று நிகழப் போகிறது. இந்திய நேரப்படி, இந்த கிரகணம் செப்டம்பர் 8 ஆம் தேதி இரவு 9:57 மணிக்கு தொடங்கி அதிகாலை 12:23 மணி வரை நீடிக்கும்.

இந்த வருடத்தின் இரண்டாவது சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியுமா? - Will the second lunar eclipse of the year be visible in India or not?
இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் இந்தியாவில் தென்படும்.

2025 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் எப்போது நிகழும்? - When will the second solar eclipse of the year 2025 take place
2025 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் செப்டம்பர் 21 ஆம் தேதி நிகழும். இந்த கிரகணம் செப்டம்பர் 21 ஆம் தேதி இரவு 11 மணி முதல் செப்டம்பர் 22 ஆம் தேதி அதிகாலை 3:24 மணி வரை நீடிக்கும்.

சூரிய கிரகணம் - Solar eclipse
சூரிய கிரகணம் என்பது விஞ்ஞானம் முதல் ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் வரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். சூரியனை கோள்கள் சுற்றி வருகின்றன. அதேபோல் நிலாவும் பூமியைச் சுற்றிக் கொண்டே, சூரியனையும் சுற்றி வருகிறது. இவ்வாறு, சூரியன் , பூமி மற்றும் நிலா ஆகிய மூன்றும் சுற்றி வருகையில் , இருப்பிடத்திற்கு ஏற்ப வகையில் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

சூரிய கிரகணம் எப்படி ஏற்படுகிறது? - How does a solar eclipse occur?
கிரகணத்தை பொறுத்தவரையில், மறைக்கும் என்றும், இருள் என்றும் கூறப்படுகிறது. அதாவது கிரகணம் நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படும். சூரிய கிரகணத்தை பொறுத்தவரையில், சூரியன் மறைந்து காணப்படுவதால், இது, சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. கோள்கள் சுற்றிவரும் போது, சூரியனின் ஒளி பூமியின் மீது படாதவாறு, நடுவில் நிலா வந்து மறைத்துக் கொள்ளும். இதனால் சூரிய கதிர்கள் பூமியின் மீது சில மணி நேரங்கள் படாமல் இருக்கும். 

2025 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியுமா? - Will the second solar eclipse of the year 2025 be visible in India?
இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. இந்த கிரகணம் ஆஸ்திரேலியா, அண்டார்டிகா, பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலின் சில பகுதிகளில் தென்படும்.

மேலும் படிக்க | வெயிலுக்கு நடுவே மழை – இயற்கையின் சீக்கியல் விளையாட்டு..மக்களே, எச்சரிக்கையாக இருங்கள்!

மேலும் படிக்க | திருமண வாழ்க்கை கசக்காமல் இருக்க ஜப்பானியர்கள் செய்வது..! இந்த சீக்ரெட்டை கத்துக்கோங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News