Lung News Tamil : சீனாவில் ஒரு 37 வயது ஆண் பல ஆண்டுகளாக தனது பயன்படுத்திய காலுறைகளை முகரும் வழக்கத்தை கொண்டிருந்துள்ளார். இந்த விநோத பழக்கம் அவரது ஆரோக்கியத்திற்கு கடுமையான பாதிப்புகளை உருவாக்கும் என அவர் கனவிலும் நினைத்து பார்த்திருக்க மாட்டார். அந்த நபருக்கு ஏற்பட்ட பாதிப்பு மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அதாவது, அவரது காலுறைகளில் Aspergillus fumigatus என்ற தீங்குயிர் பூஞ்சை வளர்ச்சி ஏற்பட்டிருந்தது, இது அவர் முகரும் போது நேரடியாக நுரையீரலுக்குள் சென்று தொற்றை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் பாதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ச்சியான இருமல், மூச்சுத்திணறல், மார்பு வலி போன்ற அறிகுறிகளை அனுபவித்துள்ளார். இறுதியில் புல்மோனாலஜிஸ்ட்டிடம் சிகிச்சை பெற நேர்ந்தது. CT ஸ்கேன் மூலம் அவரது நுரையீரலில் பூஞ்சை தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மருத்துவர்கள் இந்த வழக்கை "Invasive அஸ்பெர்கில்லோசிஸ்" என்று அடையாளம் கண்டுள்ளனர், இது பொதுவாக கடுமையான நோய் எதிர்ப்பு குறைபாடுகள் உள்ளவர்களுக்கே ஏற்படும் நிலை ஆகும்.
இந்த சம்பவம் தனிப்பட்ட சுகாதார பழக்கங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் துணிமணிகள், குறிப்பாக காலுறைகள் போன்றவை, ஈரப்பதமான சூழலில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளுக்கு வளர்ச்சி தளமாக மாறக்கூடும். இதுபோன்ற பழக்கங்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் சாத்தியக்கூறுகள் பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.
நோயாளிக்கு ஆண்டிஃபங்கல் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு, அவரது நிலை மேம்பட்டுள்ளது. இதுபோன்ற அசாதாரணமான ஆனால் ஆபத்தான பழக்கங்களை தவிர்க்கவும், எந்தவொரு அசாதாரண சுவாச பிரச்சினைகளும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி நாடவும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அஸ்பெர்கில்லோசிஸ் என்றால் என்ன?
இது ஒரு பூஞ்சை தொற்று நோய், இது பொதுவாக நுரையீரலைப் பாதிக்கிறது. இது பெரும்பாலும் ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், ஆஸ்துமா அல்லது கேன்சர் நோயாளிகள் போன்றவர்களுக்கு தாக்கும். ஆனால் இந்த வழக்கில், ஒரு ஆரோக்கியமான நபருக்கும் இந்த பழக்கம் காரணமாக நோய் ஏற்பட்டது.
அஸ்பெர்கில்லோசிஸின் அறிகுறிகள்:
தொடர்ச்சியான இருமல்
மூச்சுத் திணறல் அல்லது சுவாசிக்க சிரமம்
இருமலில் இரத்தம் வருதல்
காய்ச்சல் மற்றும் களைப்பு
எடை குறைதல் (காரணம் இல்லாமல்)
எப்படி தடுப்பது?
அழுக்கு துணிகள் (சாக்ஸ், உடைகள்) முகர்வதை தவிர்க்கவும்.
சுத்தமான துணிகளை மட்டுமே பயன்படுத்தவும்.
நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தும் உணவுகள் (வைட்டமின் C, தேன், முந்திரி) சாப்பிடவும்.
காய்ச்சல் அல்லது தொடர்ச்சியான இருமல் இருந்தால், உடனே மருத்துவரை அணுகவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS TAMIL இதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க - மையோனைஸிற்கு தடை... தமிழ்நாடு அரசு திடீர் உத்தரவு - என்ன பிரச்னை?
மேலும் படிக்க - கல்லீரலை கடுமையாக பாதிக்கும் 5 முக்கிய பழக்கங்கள் - எச்சரிக்கை அவசியம்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ