நவ பஞ்சம தோஷம் படுத்தும் பாடு! பாவம் இந்த 4 ராசிகள்: இது செவ்வாய்-கேது சேர்க்கை தோஷம்
Mangal Ketu Navpanchama Dosham 2022: செவ்வாய்-கேது ஒன்பதாம் இடத்தில் இணைந்ததால் உருவாகியிருக்கும் `நவ பஞ்சம தோஷத்தால்` மன உலைச்சலுக்கு ஆளாகும் 4 ராசிகள்...
Mangal Ketu Navpanchama Dosham 2022: ஜோதிடத்தில், கிரகங்களின் இயக்கத்தை மாற்றுவது, ராசியை மாற்றுவது, ஒரே ராசியில் இணைவது என நவகிரகங்களின் இயக்கத்தால், சுபமாகவோ அல்லது அசுபமாகவோ பல தோஷங்களையும், யோகங்களையும் உருவாக்குகின்றன. தற்போது செவ்வாய் மற்றும் கேது ஆகிய கிரகங்கள் இணைவதால் நவபஞ்சம தோஷம் உருவாகியுள்ளது. அக்டோபர் 16-ம் தேதி மிதுன ராசிக்கு செவ்வாய் சென்ற பிறகு இந்த தோஷம் உருவாகியுள்ளது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, செவ்வாய் மற்றும் கேதுவின் இணைவு, வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும். தற்போது, செவ்வாய் மற்றும் கேது இணைந்ததால் உருவாகியிருக்கும் நவபஞ்சம தோஷம் 4 ராசிக்காரர்களுக்கு அசுபமானதாக இருக்கும்.
இந்த தோஷத்தால் அனைத்து ராசிகளுக்கும் மாற்றம் ஏற்படும் என்றாலும் குறிப்பாக 4 ராசிகள் மிகவும் பாதிக்கப்படும். ராசிகளில் செவ்வாய்-கேது ஒன்பதாமிடத்தின் தாக்கம் இது.
மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள்
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம தோஷம் தொல்லை தரும். இந்த நேரத்தில் மன அழுத்தத்தை சந்திக்க வேண்டியிருக்கும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலை மோசமடையலாம். கூட்டுத் தொழில் செய்பவர்கள் பாதிக்கப்படலாம். வேறு ஒருவருடன் இணைந்து கூட்டாக எந்த வேலையையும் செய்ய வேண்டாம். விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொண்டை மற்றும் மார்பு சம்பந்தமான பிரச்சனை ஏற்படலாம்.
ரிஷபம்: செவ்வாய் மற்றும் கேதுவால் உருவாகும் நவபஞ்சம தோஷம், ரிஷப ராசிக்காரர்களுக்கும் சரியில்லை. காயம் ஏற்படலாம் அல்லது நோய்வாய்ப்படலாம். வாகனங்களை ஓட்டும்போது நிதானமும் கவனமும் தேவை. தாய் மாமன் உறவு கெடலாம். வியாபாரத்தில் நஷ்டம் வரலாம். கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டும்.
கடக ராசி: ஒன்பதாம் இடத்தில் உருவாகியிருக்கும் நவபஞ்சம தோஷமானது கடக ராசிக்காரர்களை நீதிமன்றத்திற்கு செல்ல வைக்கலாம். நீதிமன்றத்தில் ஏதாவது வழக்கு இருந்தால் வாய்தா வாங்குங்கள். வழக்கு, வாக்குவாதங்கள் என எதுவாக இருந்தாலும் தோல்வியடையும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமாக இருக்கவும். வீட்டுப் பெண்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அவர்களுக்கு விபத்து ஏற்படலாம். எச்சரிக்கையாக இருங்கள்.
மேலும் படிக்க | குருவின் ராசி மாற்றத்தினால் பஞ்சமஹாபுருஷ ராஜயோகம்; அமோக வாழ்வைப் பெரும் ‘3’ ராசிகள்!
விருச்சிகம்: செவ்வாய் கேதுவால் உருவாகும் நவபஞ்சம் தோஷம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு உடல்நலக் குறைவைத் தரும். கீழே விழுந்து அடிபடவோ அல்லது விபத்து ஏற்படவோ வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் எந்த ஒப்பந்தத்தையும் இப்போதே முடிக்க வேண்டாம். கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டும்.
பரிகாரம்: செவ்வாய்-கேதுவின் நவபஞ்சம தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க, மேஷம், ரிஷபம், கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள், கேது மற்றும் செவ்வாயின் பீஜ மந்திரங்களை உச்சரிக்கவும். இது தவிர, செவ்வாய்கிழமை விரதம் இருப்பதும், அனுமான் வழிபாடும் நெருக்கடியில் இருந்து காப்பாற்றும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | மிதுனம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ