அசிங்கமான மஞ்சள் நிற பற்களை போக்க இந்த வீட்டு வைத்தியம் போதும்

Home Treatment For Yellow Teeth: பற்களின் ஏற்பட்டு இருக்கும் மஞ்சள் நிறம் நமது அழகான சிரிப்பை கெடுக்கலாம். எனவே முத்து போன்ற வெள்ளை பற்களை நீங்கள் விரும்பினால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 23, 2025, 12:00 PM IST
  • வாழைப்பழத் தோலை பற்களில் எப்படி பயன்படுத்துவது?
  • வாய் துர்நாற்றத்தை நீக்கவும் உதவும்.
  • பற்களின் பளபளப்பை அதிகரிக்க உதவும்.
அசிங்கமான மஞ்சள் நிற பற்களை போக்க இந்த வீட்டு வைத்தியம் போதும்

Home treatment for yellow teeth: பரபரப்பான வாழ்க்கை முறை காரணமாக அதிகாலையில் நாம் விறுவிறுப்பாக பற்களை சுத்தம் செய்கிறோம். இந்த அவசரத்தின் காரணமாக, பலர் மஞ்சள் பற்கள் மற்றும் பற்களில் அழுக்கு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். இதிலிருந்து தீர்வு பெற நாம் சந்தையில் விற்பனை செய்யப்படும் பல ரசாயன பேஸ்ட் மற்றும் பற்களை வெண்மையாக்கும் சில பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இந்த பொருட்கள் விலை உயர்ந்தவையாகவும், பற்களுக்கு தீங்கு விளைவிக்கூடியதாகும். இந்நிலையில் எந்த ரசாயனமும் இல்லாமல் இயற்கையான முறையில் பற்களைப் சுத்தம் செய்து பிரகாசமாக்க விரும்பினால், வாழைப்பழத் தோலைப் பயன்படுத்தலாம். வாழைப்பழத் தோலில் பற்களை சுத்தம் செய்து வெண்மையாக்க உதவும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே வாழைப்பழத் தோலைக் கொண்டு பற்களைச் சுத்தம் செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.

இயற்கையான வெண்மையைத் தரும்:
வாழைப்பழத் தோலில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன, அவை பற்களின் மேல் மேற்பரப்பில் குவிந்துள்ள அழுக்குகளை சுலபமாக அகற்ற உதவுகின்றன. இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், பற்கள் பளபளப்பாகவும் வெண்மையாகவும் மாறத் தொடங்கும்.

ரசாயனம் இல்லாத பாதுகாப்பான தீர்வைத் தரும்: 
சந்தையில் கிடைக்கும் பல பேஸ்ட்கள் மற்றும் ப்ளீச்சிங் எஜென்ட் பற்களுக்கு தீங்கு விளைவிக்கும், ஆனால் வாழைப்பழத் தோல் இயற்கையானது மற்றும் எந்த பக்க விளைவுவையும் ஏற்படுத்தாது. இது பற்களின் மேல் அடுக்கை சேதப்படுத்தாமல் பற்களை வெண்மையாக்க உதவும்.

பற்கள் மற்றும் ஈறுகளுக்கு ஊட்டச்சத்தை வழங்கும்: 
வாழைப்பழத் தோலில் உள்ள தாதுக்கள் ஈறுகளை வலுப்படுத்தி, பற்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்க உதவுகிறது. இது பற்களின் மேற்பரப்பைப் பாதுகாக்கும் மற்றும் பற்களின் பளபளப்பை அதிகரிக்க உதவும்.

வாய் துர்நாற்றத்தை நீக்கும்:
வாழைப்பழத் தோல் பயன்படுத்தினால் வாயில் ஏற்படும் பாக்டீரியாவை நீக்க உதவும், மேலும் வாய் துர்நாற்றத்தை நீக்கவும் உதவும்.

வாழைப்பழத் தோலை பற்களில் எப்படி பயன்படுத்துவது?
1. ஒரு பழுத்த வாழைப்பழத்தை எடுத்து அதன் தோலை உரிக்கவும்.
2. தோலின் வெள்ளை நிற உட்புறப் பகுதியை உங்கள் பற்களில் 2 முதல் 3 நிமிடங்கள் மெதுவாகத் தேய்க்கவும்.
3. இதற்குப் பிறகு, 5 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் சாதாரண பேஸ்ட்டால் பற்களை துலக்குங்கள்.
4. இவ்வாறு தினமும் செய்வதன் மூலம், சில வாரங்களில் பற்களின் மஞ்சள் நிறம் குறைந்து, பளபளப்பாகத் தெரிய ஆரம்பிக்கும்.

தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இல்லை:
வாழைப்பழத் தோலால் பற்களைச் சுத்தம் செய்வது மலிவான தீர்வுடன் பயனுள்ள மற்றும் இயற்கையான தீர்வாகும், இதை பயன்படுத்துவதால் பற்களில் எந்த தீங்கு விளைவிக்காது, மேலும் பற்களை வெண்மையாகவும் பளபளப்பாகவும் பெறலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குழந்தை பிறப்பிற்கு பின் வெயிட் ஏறாமல் இருக்க..‘இதை’ சாப்பிடுங்க! பரிந்துரைக்கும் பிரபல நடிகை..

மேலும் படிக்க | நீங்கள் வாங்கும் தர்பூசணி உண்மையானதா? கலப்படத்தை எளிதாக கண்டு பிடிக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News