இவ்வளவு பெரிய வீடு இருந்தும் 27வது மாடியில் வசிக்கும் அம்பானி! ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானியை தாண்டி அவரது மும்பை வீடு அனைவரது மத்தியிலும் மிகவும் பேசு பொருளாக இருந்து வருகிறது. இதனை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - RK Spark | Last Updated : Apr 27, 2025, 07:33 AM IST
  • 27வது மாடியில் வசிக்கும் அம்பானி.
  • அதுவும் இந்த காரணத்திற்காகவா?
  • தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
இவ்வளவு பெரிய வீடு இருந்தும் 27வது மாடியில் வசிக்கும் அம்பானி! ஏன் தெரியுமா?

இந்தியாவில் அம்பானியை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மத்தியிலும் பேசு பொருளாக இருப்பவர் அம்பானி தான். இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார். மும்பையின் முக்கிய பகுதியில் வசிக்கும் அம்பானி ஆன்டிலியா என்ற வீட்டில் வசித்து வருகிறார். அம்பானியை தாண்டி அவரது மும்பை வீடும் அனைவரது மத்தியிலும் மிகவும் பேசு பொருளாக இருந்து வருகிறது. பிரம்மாண்ட வசதிகளுடன் பல்வேறு தளங்களை கொண்ட இந்த இல்லத்தில் தான் அம்பானி தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | SIP Mutual fund: மாதம் ரூ.5,000 போதும்... ஓய்வு பெறும் போது கையில் ரூ.1 கோடி இருக்கும்

ஆன்டிலியா இல்லத்தில் அம்பானி தனது மனைவியுடன் 27 வது தளத்தில் வசித்து வருகிறார். இந்த வீட்டில் பல்வேறு தளங்கள் இருந்த போதிலும் ஏன் அம்பானி 27வது தளத்தை மட்டும் பிரத்தியேகமாக தேர்வு செய்தார் என்பதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி தொடங்கி அவரது மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகள் என அனைவரும் இந்த ஆன்டிலியா வீட்டில் தான் வசித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 40,000 சதுர அடி பரப்பளவில் 570 அடி உயரம் கொண்ட இந்த கட்டிடம் மும்பையில் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றாக உள்ளது. 2006 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்ட இந்த மாளிகை 2010ல் கட்டி முடிக்கப்பட்டது. இந்தியாவிலேயே அதிக மதிப்புமிக்க வீடுகளில் ஒன்றாக இந்த ஆன்டிலியா உள்ளது.

எவ்வளவு பெரிய பூகம்பம் வந்தாலும் இந்த பில்டிங்கிற்கு ஒன்றும் ஆகாது. இந்த வீட்டின் அமைப்பு தாமரை மற்றும் சூரியனை மையப்படுத்தி கட்டப்பட்டுள்ளது. இந்த மாளிகையில் 27 ஆவது மாடியில் தான் முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். 50க்கும் மேற்பட்ட பெட்ரூம்கள், 168 கார் பார்க்கிங், 9 அதிவேக லிஃப்ட், 50 பேர் ஒரே நேரத்தில் பார்க்கக்கூடிய தியேட்டர், மொட்டை மாடி தோட்டங்கள், நீச்சல் குளங்கள், ஸ்பா, சுகாதார மையங்கள், கோவில், அலுவலகங்கள் என பல்வேறு அம்சங்கள் இந்த வீட்டில் நிறைந்துள்ளது.

ஏன் 27வது மாடியில் வசித்து வருகிறார் முகேஷ் அம்பானி?

சமீபத்திய ஒரு நேர்காணலில் நீதா அம்பானி ஏன் 27வது மாடியை தேர்வு செய்தோம் என்பதற்கான விளக்கத்தை அளித்துள்ளார். மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது மும்பையில் மக்கள் தொகை அதிகமாக இருக்கும். எனவே வெளிப்புறங்களில் இருந்து வரும் தூசி மற்றும் சத்தத்திலிருந்து விலகி இருக்க 27வது மாடியை தேர்வு செய்தோம் என்று நீதா அம்பானி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு அறையிலும் இயற்கையான காற்று மற்றும் அமைதியான சூழல் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதனால்தான் இந்த தளத்தில் வசித்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க | Retirement Planning: ஆயிரங்களை கோடிகளாக்க... உங்களுக்கான முக்கிய முதலீட்டு டிப்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News