National Voters Day: தேசிய வாக்காளர் தினத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டியவை

13th National Voters Day: இந்தியாவில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதுதான் தேசிய வாக்காளர் தினத்தை மத்திய அரசு கொண்டாட தூண்டியது எனலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 25, 2023, 02:36 PM IST
  • இன்று 13-வது தேசிய வாக்காளர்கள் தினக் கொண்டாட்டம்.
  • ஜனநாயகம் வலுப்பட செய்வோம்.
National Voters Day: தேசிய வாக்காளர் தினத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டியவை title=

இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஜனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளர் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந்நாளின் நோக்கமாகும்.

18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி வாய்ந்தவர். தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள். வாக்காளர் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகின்றது.

மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு லாட்டரி, இந்த பொருட்களை இனி இலவசமாக பெறுங்கள்

தேசிய வாக்காளர் நாள் வரலாறு
1950ஆம் ஆண்டு ஜனவரி 25 அன்று இந்தியத் தேர்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக 2011 இல் இலிருந்து இது பின்பற்றப்படுகிறது. சட்ட அமைச்சகத்தினால் பரிந்துரைக்கப்பட்டு, 2011 ஜனவரி மாதத்தில் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

13வது தேசிய வாக்காளர் தினம்
இந்திய தேர்தல் ஆணையம் 13வது தேசிய வாக்காளர் தினத்தை (இன்று) ஜனவரி 25, 2023 அன்று கொண்டாடுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் ஸ்தாபக நாளைக் குறிக்கும் வகையில் இந்த நாள் ஜனவரி 25 அன்று கொண்டாடப்படுகிறது. வாக்காளர்கள் தினம் என்பது இளைஞர்கள் தங்கள் நாட்டில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேசிய வாக்காளர்கள் தினம் தேசிய, மாநில, மாவட்ட தொகுதி மற்றும் வாக்குச்சாவடி அளவில் நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.

மேலும் படிக்க | Budget 2023: மாத சம்பளம் பெரும் நபரா நீங்கள்? பட்ஜெட்டில் மாஸ் அறிவிப்பு, விவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News