நரை முடி பிரச்சனையா? கருகரு முடிக்கு இந்த வீட்டு வைத்தியம் தான் பெஸ்ட்

Home Remedies For White Hair: கண்ட கண்ட ஹேர் கலர் டையை இனி பயன்படுத்துவதற்கு பதிலாக இனி இந்த சிறப்புப் பொருளைப் பயன்படுத்தினால் போதும், 100% கருமையான கூந்தலை பெறலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 21, 2025, 01:05 PM IST
  • இயற்கையான மற்றும் பாதுகாப்பான வழி என்ன?
  • மருதாணி கூந்தலை இயற்கையாகவே வண்ணமயமாக்க உதவும்.
  • கூந்தல் மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.
நரை முடி பிரச்சனையா? கருகரு முடிக்கு இந்த வீட்டு வைத்தியம் தான் பெஸ்ட்

White Hair Home Remedies In Tamil: வயது ஏற ஏற நரை முடி பிரச்சனை தொடங்கிவிடுகிறது. இந்த மாற்றாம் பொதுவானது. இன்றைய காலகட்டத்தில், ஆரோக்கியமற்ற உணவு முறை, உணவில் ஊட்டச்சத்து குறைப்பாடு மற்றும் ரசாயன அடிப்படையிலான பொருட்களை அதிகமாகப் பயன்படுத்தால் இளம் வயதிலேயே நரை முடி ஏற்படத் தொடங்கிவிடுகிறது. அத்தகைய சூழ்நிலையில், பெரும்பாலான மக்கள் இந்த நரை முடியை மறைக்க ரசாயன சாயத்தைப் பயன்படுத்துகிறார்கள். இவை கூந்தலுக்கு பாதுகாப்பானது அல்ல. பல ஹேர் டைகளின் PPD அதாவது பாரா-ஃபீனைலெனெடியமைன் (Para-phenylenediamine) இருப்பதாகக் கூறப்படுகின்றன, இது கட்டாயம் கூந்தலை சேதப்படுத்தும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், நரை முடியைப் போக்க (White Hair Remedies) ஒரு இயற்கையான மற்றும் பாதுகாப்பான வழிமுறையை தான் இங்கு நாம் இன்று காணப் போகிறோம்.

Add Zee News as a Preferred Source

இயற்கையான மற்றும் பாதுகாப்பான வழி என்ன? | Natural Home Remedies For White Hair
இந்த இயற்கையான மற்றும் பாதுகாப்பான என்னவென்றால் ஒரு இரும்புச் சட்டியில் இயற்கை மருதாணியைப் போடவும். இதற்குப் பிறகு, மருதாணியுடன் தேயிலை இலை நீர், கற்றாழை ஜெல் மற்றும் ஒரு முட்டையைச் சேர்த்து நன்கு கலக்கவும். மருதாணியை இரவு முழுவதும் அப்படியே ஊற வைக்கவும், காலையில் தலைமுடியில் தடவவும்.

இந்த முறை தலைமுடியை இயற்கையான முறையில் கருப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

இவை எவ்வாறு கூந்தலுக்கு பயனளிக்கும்?

மருதாணி (HENNA)

மருதாணி கூந்தலை இயற்கையாகவே வண்ணமயமாக்க உதவும். மேலும் தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கும், தலையில் உண்டாகும் அரிப்பு, பருக்களை குணமாக்கும், முடியின் சீரழிவைத் தடுக்கும். எனினும் நீங்கள் பயன்படுத்தும் மருதாணி ரசாயனம் இல்லாததாக இருக்க வேண்டும்.

தேயிலை இலை நீர் (TEA LAEF WATER)

தேயிலை இலைகளில் டானின் எனப்படும் ஒரு தனிமம் உள்ளது, இது இயற்கையாகவே கூந்தலை கருமையாக்க உதவுகிறது. இது தவிர, தேயிலை இலை நீர் கூந்தலுக்கு இயற்கையான பளபளப்பை தருகிறது. இதை தொடர்ந்து பயன்படுத்துவதால், கூந்தல் மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.

கற்றாழை ஜெல் (ALOEVERA GEL)

கற்றாழை ஜெல் முடியை ஈரப்பதமாக்க உதவுகிறது. இதனால், உலர்ந்த மற்றும் சுருண்ட முடி பளபளப்பாகத் தோன்றத் தொடங்கும். இது தவிர, கற்றாழை ஜெல்லில் உள்ள வைட்டமின் ஈ, கூந்தலுக்கு நன்மை பயக்கும்.

முட்டை (EGG)

முட்டையில் உள்ள புரதம் மற்றும் பயோட்டின் கூந்தலின் வேர்களை வலுப்படுத்தி, முடிக்கு பளபளப்பைக் கொடுத்து, முடி வளர்ச்சியை ஊக்கவைக்கும். அதுமட்டுமின்றி முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், முடி உதிர்வை குறைக்கும், முடியின் பொடுகை (Dandruff) குறைக்கும்

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Bhagyashree Chair Exercises To Burn Belly Fat : 56 வயதில் தொப்பையை குறைத்த நடிகை! உட்கார்ந்து கொண்டே ‘இதை’ செய்யுங்கள்..

மேலும் படிக்க | Simran Beauty Tips: சிம்பிள் லுக் சிம்ரன் ஸ்டைல்....இந்த ஃபேஸ் பேக் வித்தையை பார்த்தீங்களா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News