)
Navaratri 2025 Day 4: நவராத்திரி பண்டிகை ஆண்டு தோறும் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் முக்கிய பாண்டிகைகளில் ஒன்றாகும். இந்த ஆண்டு நவராத்திரி (Navaratri) பண்டிகை, கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் துவங்கியது. அதேபோல் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி சரஸ்வதி பூஜையும், அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட உள்ளது. எனவே இந்த நவராத்திரி விழாவையொட்டி, கோவில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், கொலு வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
நவராத்திரி பண்டிகை 2025:
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் தேவையான தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சொர்க்கம், வீடுபேறு அடைதல் என்ற அனைத்தையும் தரக்கூடிய விரதமாக நவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அதன்படி வீட்டில் கொலு வைத்து நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் அம்மனுக்கு படைப்பது வழக்கம். 9 நாளும் 9 வகையான வாத்தியங்கள் வாசிப்பார்கள். நவராத்திரியின் முதல் நாள் அரிசிமாவில் புள்ளி கோலமிட வேண்டும். முதல்நாளில் அம்பிகையை இரண்டு வயது குழந்தையாக பாவித்து பூஜிக்க வேண்டும். அதேபோல் கொலு ஸ்தாபனம் செய்யப்படும் பூஜையறையில் மாக்கோலம் இட்டு, சந்தனம் தெளித்து மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். பிறகு கொலு படியில் கலசம் வைக்க வேண்டும்.
நவராத்திரியின் ஒன்பது நாட்கள்:
நவராத்திரியின் (Navaratri 2025) ஒன்பது நாட்களும் சக்தி தேவியின் ஒன்பது அவதாரங்களுக்கும் பூஜை செய்யப்படுகிறது. நவதுர்காவின் ஒவ்வொரு அவதாரமும் துர்க்கை தேவியின் தனித்துவத்தை பிரதிபலிக்கிறது. தமிழகத்தில் வீடுகள், கோயில்களில் வண்ணமையமான, வித்தியாசமான கொலு வைத்து நவராத்திரி கொண்டாடப்படுகிறது. நவராத்திரி 9 நாட்களும் விமரிசையாக கொண்டாடப்படும். பெண்கள் 9 நாட்களும் தங்களை அலங்கரித்து பூஜை செய்து வழிபடுவர்.
நவராத்திரி பூஜை தொடங்குவதற்கான நேரம்:
செப்டம்பர் 25 ஆம் தேதி காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரையிலான நேரத்திற்குள் நைவேத்தியம் படைத்து, நவராத்திரி பூஜையை செய்ய வேண்டும்.
நவராத்திரி பூஜை நான்காவது நாள் பூஜை, நைவேத்தியம்:
நான்காவது நாள் - கூஷ்மாண்டா
கூஷ்மாண்டா தேவி, சூரிய மண்டலத்தை இயக்குவதாக கூறப்படுகிறது. இந்த தேவி, எட்டு கைகளைக் கொண்டவளாதலால், அஷ்டபுஜா தேவி என்றும் அழைக்கப்படுகிறாள். நவராத்திரி விழாவின் 4ஆம் நாளான சதுர்த்தி தினத்தன்று 'கூஷ்மாண்டா' வடிவ துர்க்கையை வணங்குவது வழக்கம்.
கோலம்: மலர் கோலம் போட வேண்டும்.
மலர்கள்: ரோஜா பூ
நெய்வேத்தியம் : புட்டு, காராமணி சுண்டல், தயிர் சாதம் படைத்து வழிபட வேண்டும்
பாட வேண்டிய ராகம் காமபோதி ராகம்
இந்த நாளில் அன்னைக்கு மஞ்சள் நிற வஸ்திரம் அணிவித்து அலங்கரிக்க வேண்டும். நாமும் மஞ்சள் நிற உடை அணிந்து கொண்டு வழிபாடு செய்யலாம்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ