Skincare mistakes you should avoid: நாம் அனைவருக்கும் இளமையான மற்றும் குறைபாடற்ற சருமம் வேண்டும் என்று நினைப்போம். முக்கியமாக இது பெண்களின் கனவாகும். இதனால்தான் பெரும்பாலான பெண்கள் தங்கள் பணத்தையும் நேரத்தையும் நீண்ட காலத்திற்கு மென்மையான மற்றும் தெளிவான சருமத்தை அளிக்கக்கூடிய சரும் பராமரிப்புப் பொருட்களில் முதலீடு செய்கிறார்கள். இருப்பினும், சில நேரங்களில் நாம் தவறான தோல் பராமரிப்புகளை பின்பற்றுகிறோம், இதன் காரணமாக வயதுக்கு முன்பே முக சுருக்கங்களும் கோடுகளும் தோன்றத் தொடங்குகின்றன. சரும பராமரிப்பு தவறுகள் என்னென்ன என்பதையும் அவற்றை எவ்வாறு தவிர்க்கப்பட வேண்டும் என்பதைப் தெரிந்துக் கொள்வோம்.
இந்த தவறுகளைச் செய்வதைத் தவிர்க்கவும் | Avoid these skincare mistakes for youthful skin
மேக்கப் போட்டுக்கொண்டு தூங்காதீர்கள்:
நீங்கள் எவ்வளவு சோர்வாக இருந்தாலும், மேக்கப் போட்டுக்கொண்டு தூங்கும் தவறைச் செய்யாதீர்கள். வெளியில் இருந்து வீட்டிற்கு வந்ததும், கை, கால்களை கழுவ வேண்டும். உங்கள் முகத்தையும் சுத்தம் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனென்றால் தூசி மற்றும் மாசுபாடு உங்கள் கைகள் மற்றும் கால்களைப் போலவே உங்கள் முகத்தையும் அழுக்காக்குகிறது. மேக்கப் போடுவதால், முகத்தில் தூசி ஒட்டிக்கொள்கிறது, இந்த அழுக்குடன் நீங்கள் தூங்கும்போது, உங்கள் சருமம் சுவாசிக்க முடியாது. இதன் காரணமாக, முகத்தில் மெல்லிய கோடுகள் மற்றும் பருக்கள் தோன்ற ஆரம்பிக்கும்.
சன்ஸ்கிரீனை ஒருபோதும் மறக்காதீர்கள்:
நீங்கள் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தாவிட்டால், உங்கள் சருமம் வறண்டு போகும், இது முன்கூட்டிய சுருக்கங்கள், ஹைப்பர் பிக்மென்டேஷன் மற்றும் வறண்ட சருமத்திற்கு வழிவகுக்கும். இரவோ பகலோ எப்போதும் சன்ஸ்கிரீன் அணிந்து வெளியே செல்லுங்கள்.
உங்கள் காலை வழக்கத்தை ஒருபோதும் தவிர்க்காதீர்கள்:
எப்போதும் உங்கள் முகத்தை ஒரு ஆக்டிவ் க்ளென்சர் மற்றும் ஃபேஸ் வாஷ் மூலம் நன்கு சுத்தம் செய்து கழுவுங்கள், ஏனெனில் இது முந்தைய இரவில் பயன்படுத்தப்பட்ட கிரீம்கள் மற்றும் சீரம்களின் பாக்டீரியாக்கள் மற்றும் எச்சங்களை நீக்குகிறது, அவற்றை அகற்ற வேண்டும். இது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி சுருக்கங்களைத் தடுக்கிறது.
எக்ஸ்ஃபோலியேட் செய்ய மறக்காதீர்கள்':
இறந்த செல்களை நீக்குவதால், உங்கள் சருமத்தை உரித்தல் மிகவும் முக்கியம். இறந்த செல்கள் சருமத்தை மிகவும் வயதானதாகத் தோற்றமளிக்கச் செய்கின்றன. ஆனால் உங்கள் முகத்தை தேவைக்கு அதிகமாக எக்ஸ்ஃபோலியேட் செய்யாதீர்கள். ஏனெனில் இது உங்கள் சருமத்தையும் சேதப்படுத்தும்.
கழுத்துக்குக் கீழே உள்ள கழுத்து மற்றும் தோள்களை கவனித்து கொள்ளுங்கள்:
உங்கள் சருமப் பராமரிப்பு வழக்கத்தில் உங்கள் முகத்தை மட்டும் சேர்த்தால், அது ஒரு பெரிய தவறு. உண்மையில், முகத்துடன் சேர்ந்து, உங்கள் கழுத்திலும், கழுத்துக்குக் கீழேயும், மார்பு மற்றும் தோள்களுக்கு அருகிலும் வயதான அறிகுறிகள் தெரியும். அவற்றையும் சுத்தம் செய்து ஈரப்பதமாக்குங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | பெண்களே.. உடம்பை ஃபிட்டாக வைக்க இந்த உடற்பயிற்சிகளை செய்யுங்க!
மேலும் படிக்க | இந்தியாவில் மெல்ல அதிகரிக்கும் கோவிட் தொற்று? JN-1 Variant.... ஜாக்கிரதை!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ