IRCTC புதிய விதி: தட்கல் டிக்கெட் முன்பதிவிற்கு ஆதார் சரிபார்ப்பு அவசியம்... எளிய வழிமுறை இதோ

Tatkal Ticket Booking New Rule: இந்திய ரயில்வேயின் தட்கல் டிக்கெட் முன்பதிவு விதியில் முக்கிய மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது. ஜூலை 1, 2025 முதல், தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கான புதிய விதிகளை அமல்படுத்த IRCTC முடிவு செய்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 19, 2025, 11:33 AM IST
  • தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் மூலம் அங்கீகரிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட உள்ளது.
  • போலி முன்பதிவுகளைத் தடுக்க IRCTC எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை.
  • தட்கல் டிக்கெட் வாங்க்கும் போது மனதில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்
IRCTC புதிய விதி: தட்கல் டிக்கெட் முன்பதிவிற்கு ஆதார் சரிபார்ப்பு அவசியம்... எளிய வழிமுறை இதோ

இந்திய ரயில்வேயின் தட்கல் டிக்கெட் முன்பதிவு விதியில் முக்கிய மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது. ஜூலை 1, 2025 முதல், தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கான புதிய விதிகளை அமல்படுத்த IRCTC முடிவு செய்துள்ளது. இப்போது IRCTC வலைத்தளம் அல்லது செயலி மூலம் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாகும். இது மட்டுமல்லாமல், ஜூலை 15, 2025 முதல் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது OTP அடிப்படையிலான சரிபார்ப்பும் அவசியமாக இருக்கும்.

ரயில்வே அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தட்கல் முன்பதிவு முறையில் இந்த பெரிய மாற்றம் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஏற்கனவே தகவல் தெரிவித்துள்ளார். ஜூலை 1, 2025 முதல், IRCTC கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டு KYC சரிபார்க்கப்பட்ட பயனர்கள் மட்டுமே தட்கல் முன்பதிவு சாளரத்தின் முதல் 30 நிமிடங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்று அவர் கூறியுள்ளார். "தட்கள் புக்கிங்கில் மோசடிகளை தடுத்து, உண்மையான தேவை உள்ள சாமனிய பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்யவும் , தரகர்களைக் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறுகிறார். 

தட்கல் டிக்கெட் வாங்க்கும் போது மனதில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் 

நீங்கள் இன்னும் IRCTC கணக்குடன் ஆதாரை (Aadhaar Card) இணைக்கவில்லை என்றால், உடனடியாக உள்நுழைந்து சுயவிவரப் பகுதிக்குச் சென்று சரிபார்ப்பை முடிக்கவும். மேலும், தட்கல் முன்பதிவின் போது OTP எளிதாகப் பெற ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தட்கல் முன்பதிவில் இருக்கைகள் மிக விரைவாக நிரப்பப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே கடைசி நேர சிக்க்லை தவிர்க்க உங்கள் ஆதார் இணைப்பு மற்றும் உள்நுழைவு விவரங்களை முன்கூட்டியே தயாராக வைத்திருக்க வேண்டும்.

IRCTC கணக்கில் ஆதாரை சரிபார்ப்பதற்கான வழிமுறை

நீங்கள் இன்னும் IRCTC கணக்கில் ஆதார் சரிபார்ப்பைச் செய்யவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்:

வழிமுறை 1: IRCTC வலைத்தளம் அல்லது மொபைல் செயலியைப் பார்வையிட்டு உங்கள் கணக்கில் உள்நுழையவும்.

வழிமுறை 2: 'My Account' பகுதிக்குச் சென்று 'Authenticate User' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

வழிமுறை 3: ஆதார் எண் அல்லது மெய்நிகர் ஐடியை உள்ளிடவும்.

வழிமுறை 4: 'Verify Details' என்பதைக் கிளிக் செய்யவும்.

வழிமுறை 5: உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் ஒரு OTP வரும்.

வழிமுறை 6: பெறப்பட்ட OTP ஐ உள்ளிட்டு, ஒப்புதல் பெட்டியில் டிக் செய்து 'Submit' என்பதைக் கிளிக் செய்யவும்.

வழிமுறை 7: சரிபார்ப்பு நடைபெற்று, உங்கள் கணக்கு ஆதாருடன் அங்கீகரிக்கப்படும். 

வழிமுறை 8: சரிபார்ப்பு நிலையைச் சரிபார்க்க, 'My Account' தாவலில் உள்ள 'Authenticate User' இணைப்பை மீண்டும் கிளிக் செய்யவும்.

உங்கள் IRCTC கணக்கில் ஆதார் எண்ணை எவ்வாறு இணைப்பது?

உங்கள் IRCTC கணக்கில் உங்கள் ஆதார் எண் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்றால், அவ்வாறு செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:

வழிமுறை 1: IRCTC வலைத்தளத்தைப் பார்வையிட்டு உள்நுழையவும்.

வழிமுறை 2: 'Profile’' தாவலின் கீழ், 'Link Aadhaar' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

வழிமுறை 3: ஆதாரில் உள்ளபடி உங்கள் பெயர் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிடவும்.

வழிமுறை 4: ஒப்புதல் தேர்வுப்பெட்டியைத் தேர்வுசெய்து 'Send OTP' என்பதைக் கிளிக் செய்யவும்.

வழிமுறை 5: உங்கள் ஆதார்-இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும்.

வழிமுறை 6: OTP ஐ உள்ளிட்டு 'Verify OTP' என்பதைக் கிளிக் செய்யவும்.

வழிமுறை 7: உங்கள் KYC விவரங்கள் தானாகவே ஆதாருடன் பொருந்திவிடும்.

வழிமுறை 8: ‘Update’ என்பதைக் கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு திரையில் ஒரு பாப்-அப் செய்தி தோன்றும். அதில் “Your Aadhaar verification is successful and KYC details have been updated” என்று எழுதப்பட்டிருக்கும்.

தட்கல் டிக்கெட் முன்பதிவில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பைக் கொண்டுவருவதற்கான ஒரு பெரிய வழிமுறையாக IRCTC இந்த புதிய விதிகளை கொண்டு வர உள்ளது. இது போலி முன்பதிவுகளை தடுப்பதோடு மட்டுமல்லாமல், சாதாரண பயணிகள் சிக்கல் ஏதும் இல்லாமல் டிக்கெட்டுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும். தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, 2025 ஜூலை மாதத்திற்கு முன் உங்கள் IRCTC சுயவிவரத்தில் ஆதார் சரிபார்ப்பைச் செய்யுங்கள். 

மேலும் படிக்க | இந்திய ரயில்வே IRCTC டிக்கெட் புக்கிங்... விதிகளில் ஏற்பட்டுள்ள 3 முக்கிய மாற்றங்கள்...

மேலும் படிக்க | தட்கல் டிக்கெட் புக் செய்ய பயன்படுத்தப்பட்ட... 2.5 கோடி போலி ஐடிக்களை முடக்கிய IRCTC

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News