Ration Card Update 2026: கர்நாடகா மாநிலத்தில் போலி ஆவணங்கள் மூலம் உருவாக்கப்பட்ட பிபிஎல் (BPL) அட்டைகள் ரத்து செய்யப்பட்டு அவற்றை ஏபிஎல் (apl) அட்டைகளுக்கு மாற்றப்படுகின்றன. இதற்கிடையில், புதிய ரேஷன் அட்டைகள் வழங்குதல் மற்றும் விண்ணப்ப சமர்ப்பிப்பு குறித்து உணவு துறை அமைச்சர் கே.எச். முனியப்பா ஒரு முக்கியமான புதுப்பிப்பு ஒன்றை வழங்கியுள்ளார். இது தொடர்பான முழுமையான தகவலை இங்கே தெரிந்து கொள்வோம்.
ரேஷன் அட்டைகள் எப்போது வழங்கப்படும்?
உணவு மற்றும் சிவில் சப்ளை துறை அமைச்சர் கே.எச். முனியப்பா கலபுர்கியில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக மாநிலத்தில் புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களில் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என்றார். மேலும் புதிய ரேஷன் அட்டைகளுக்கான விண்ணப்ப செயல்முறை எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல்களையும் அவர் வழங்கி இருந்தார்.
நகரில் உள்ள இவான் ஏ ஷாஹி விருந்தினர் (Ivan A Shahi Guest House) மாளிகையில் பேசிய அவர், ரேஷன் அட்டையில் சில திருத்தங்கள், சரிப்பார்ப்புகள் போன்ற காரணங்களால், கடந்த இரண்டரை ஆண்டுகளாக புதிய ரேஷன் அட்டைகளை வழங்க முடியாமல் போனது, தற்போது சுமார் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கும் நிலையில், அனைத்தும் சரிபார்க்கப்பட்டு புதிய ரேஷன் அட்டைகள் விரைவில் விநியோகிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
விண்ணப்ப செயல்முறை எப்போது தொடங்கும்?
இதற்கிடையில், புதிய ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பு எப்போது நடத்தப்படும் என்று கேட்டபட்டது, இதற்கு பதிலளித்த அவர், "புதிய ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்களுக்கு முதலில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும்" என்று தெளிவாகத் தெரிவித்து இருந்தார். இந்த செயல்முறை ஜனவரி இறுதிக்குள் முடிவடையும் என்றும், அடுத்த மாதம், பிப்ரவரி முதல் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் அனுமதிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
மேலும் பேசிய அவர் இந்திரா கிட் விநியோகம் விரைவில் செய்யப்படும். வரும் ஜனவரி இறுதி அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்றார். அதனுடன் இதில் பருப்பு, சர்க்கரை, எண்ணெய் மற்றும் உப்பு ஆகியவை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்திரா கிட்டில் என்னென்ன பொருட்கள் இருக்கும்?
* துவரம் பருப்பு
* சமையல் எண்ணெய்
* சர்க்கரை
* உப்பு
ஆகியவை அடங்கும்.
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
புதிய ரேஷன் கார்டு (Ration Card) தொடர்பான அப்டேட்டுகளை மக்கள் தற்போது எதிர்நோக்கி காத்திருக்கும் இந்த நேரத்தில் அமைச்சர் வழங்கிய இந்த தகவல்கள் பொதுமக்களுக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது.
இதனிடையே புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, அதிகாரப்பூர்வ அஹாரா இணையதளத்திற்குச் (ahara.karnataka.gov.in) சென்று, உள்நுழையவும், அங்கு புதிய ரேஷன் அட்டை விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும், பின்னர் குடும்ப விவரங்கள் மற்றும் ஆதார் எண்களுடன் ஆன்லைன் படிவத்தை நிரப்பவும், இதற்கு பிறகு தேவையான ஆவணங்களைப் (ஆதார், முகவரி/அடையாளச் சான்று) பதிவேற்றம் செய்யவும், மற்றும் சமர்ப்பித்து, உங்கள் விண்ணப்பத்தைக் கண்காணிக்க ஒப்புகை எண்ணைப் பெறவும்.
நீங்கள் Grama One, CSCs அல்லது Karnataka One போன்ற மையங்களில் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம், அல்லது ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கு பயோமெட்ரிக் மையங்களுக்கு சென்றும் விண்ணப்பிக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









