டெல்லி: ஐதராபாத் நிஜாம்களின் வைர நகைகள் கண்காட்சி

டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் ஐதராபாத் நிஜாம்களின் வைர நகைகள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

Last Updated : Feb 20, 2019, 12:12 PM IST
டெல்லி: ஐதராபாத் நிஜாம்களின் வைர நகைகள் கண்காட்சி title=

டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் ஐதராபாத் நிஜாம்களின் வைர நகைகள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

உலகின் புகழ்பெற்ற ஐதராபாத் நிஜாம்களின் நகைகள் டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் நேற்று கண்காட்சிக்காக வைக்கப்பட்டன. கடந்த 1995ம் ஆண்டு இந்த வைர நகைகள் நிஜாம் ஜூவல்லரி டிரஸ்டியிடம் இருந்து இந்திய அரசு ரூ.,218 கோடிக்கு வாங்கியதாகும்.

 

 

இந்த ஜகோப் வைர நகைகள் 184.75 காரட் எடை கொண்ட 173 கண்களை கவரும் வகையில் உள்ளன. இந்த கண்காட்சி பொது மக்களிடையே நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தினை பறைசாற்றும் வகையில் பார்வைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து வரைத்தால் அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகை , கழுத்தணிகள், பெல்ட்கள் மற்றும் கலன்கள், வளையல்கள், காதணிகள், கவசங்கள், கால் வளையங்கள், விரல் மோதிரங்கள்,  வாட்ச் சங்கிலிகள், கைவளையல்கள், பொத்தான்கள் ஆகியவை இடம்பெற்றன. இந்த கண்காட்சி மே 5 வரை காலை 10 மணி முதல் மாலை 6 வரை மட்டுமே காட்சிப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News