ஓட்டுனர் உரிமம் பெற இனி கல்வித்தகுதி தேவையில்லை -மத்திய அரசு

போக்குவரத்து வாகனங்களை ஓட்ட உரிமம் பெற எட்டாம் வகுப்புவரை படித்திருக்க வேண்டும் என்ற விதிமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Last Updated : Jun 19, 2019, 08:24 AM IST
ஓட்டுனர் உரிமம் பெற இனி கல்வித்தகுதி தேவையில்லை -மத்திய அரசு title=

போக்குவரத்து வாகனங்களை ஓட்ட உரிமம் பெற எட்டாம் வகுப்புவரை படித்திருக்க வேண்டும் என்ற விதிமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கு குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என்று மத்திய மோட்டார் வாகன சட்டம் 1989-ன் 8-வது விதிமுறை கூறுகிறது. இந்த விதிமுறை, கிராமப்பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய, கல்வி அறிவில்லாத, ஆனால் திறமையான ஓட்டுனர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக புகார் எழுந்தது.

சமீபத்தில், அரியானா மாநிலம் மேவாத் பிராந்தியத்தில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய ஓட்டுனர்களுக்கு இந்த கல்வித்தகுதி நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அம்மாநில அரசு வலியுறுத்தியது. அவர்களுக்கு ஓட்டுனர் தொழிலே வாழ்வாதாரமாக இருப்பதாக தெரிவித்தது.

இதை பரிசீலித்த மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், வாகனம் ஓட்டுவதற்கு கல்வித்தகுதியை விட திறமையே முக்கியம் என்று உணர்ந்து குறைந்தபட்ச கல்வித்தகுதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்ய முடிவு செய்தது. இந்த முடிவிடை தற்போது மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மத்திய மோட்டார் வாகன சட்டத்தின் எட்டாவது விதிமுறையில் திருத்தம் கொண்டு வருவதற்கான நடைமுறையை தொடங்கி உள்ளது. விரைவில், இதுதொடர்பான வரைவு அறிவிப்பாணையை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News