No Boil No Oil Food Recipes : மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவுகிறது. இதையடுத்து, இந்தியா மட்டுமன்றி பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதையடுத்து, கேஸை சேமிப்பது எப்படி என்று, அனைவரும் தேடி வருகின்றனர். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
அடுப்பில்லாத சமையல்:
அடுப்பில்லாமல் சமைக்க முடியுமா? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. நாம், பல உணவுகளை அடுப்பே இல்லாமல் சமைக்கலாம். நயன்தாரா நடித்திருந்த அண்ணபூரணி படத்தை பார்த்திருந்தீர்கள் என்றால், கண்டிப்பாக உங்களுக்கு இதைப்பற்றி தெரிந்திருக்கும். அந்த படத்தில், க்ளைமேக்ஸிற்கு முன்பாக நயன்தாராவிற்கு ஒரு கடினமான டாஸ்க் கொடுக்கப்படும். அதில், அடுப்பே எரிய வைக்காமல் சமைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கும். சிறிது நேரம் யோசிக்கும் அவர், சட்டென சில டிஷ்களை செய்வார். அவை என்னென்ன தெரியுமா? இங்கு பார்ப்போம்.
வாழைப்பூ பொரியல்:
வாழைப்பூ பொரியல் செய்ய தேவையான பொருட்கள்:
வாழைப்பூ பொடியாக நறுக்கியது - 1 கப்
தேங்காய் துருவல் - உங்களுக்கு எவ்வளவு தேவையோ அத்தனையும் எடுத்துக்கொள்ளலாம்.
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 1
உப்பு - சுவைக்கு ஏற்ப
கேரட் - 1
எப்படி செய்வது?
கொத்தமல்லியை, முதலில் பொடியாக நறுக்கி, கேரட்டை துருவிக்கொள்ள வேண்டும்.
பின்பு, ஒரு பாத்திரத்தில் அரையளவு தண்ணீர் ஊற்றி வைத்து, அதில் எலுமிச்சை சாற்றை கலந்த பின்பு, அதில் பொடியாக நறுக்கி வைத்த வாழைப்பூவை சேர்த்து 5 நிமிடங்கள் போட்டு வைக்கவும். இப்படி செய்தால், வாழைப்பூவில் இருக்கும், கசப்பு துவர்ப்பான சுவை இருக்காது.
பின்பு, 5 நிமிடங்கள் கழித்து, தண்ணீர் இல்லாமல் வாழைப்பூவை நன்றாக பிழிந்து எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும். அதனுடன் கேரட் துருவல், தேங்காய், கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து, உப்பு சேர்த்து கலந்து பரிமாறலாம்.
அவில், தயிர் சாதம்:
தேவையான பொருட்கள்:
புளிக்காத தயிர் 1 கப்
வெள்ளை அவில் 1 கப்
பச்சை மிளகாய் 1
இஞ்சி சிறு துண்டு
கேரட் துருவல் தேவைக்கேற்ப
கொத்தமல்லி சிறிதளவு
கறிவேப்பிலை கொஞ்சமாக
மாதுளம்பழம் - சிறிதளவு
உப்பு தேவையான அளவு
கருப்பு திராட்சை சிறிதளவு
செய்ய தேவையானது:
இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் உள்ளிட்டவற்றை முதலில் பொடிப்பொடியாக நறுக்கொள்ள வேண்டும்.
அவலை தண்ணீரில் நன்றாக அலசி, தண்ணீரே இல்லாமல் பிழிந்து பாத்திரத்தில் எடுத்து போட்டுக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக, இதனுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, கறிவேப்பிலை, கேரட் துருவல், கருப்பு திராட்சை, மாதுளம் பழ முத்துகள், தயிர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
நொடிகளில், அடுப்பே இல்லாமல் தயிர் சாதம் தயாராகிவிடும்.
முளைக்கட்டிய பயறு சாலட்:
தேவையான பொருட்கள்:
பாசிப்பயிறு தேவையான அளவு
தண்ணீர்
உப்பு தேவையான அளவு
கேரட்
எலுமிச்சை சாறு - அரை எலுமிச்சையின் சாறு
கொத்தமல்லி தேவையான அளவு
வெள்ளரிக்காய் - 2
முதலில் பாசிப்பயிற்றை தண்ணீரில் ஊற்றி ஒரு இரவு ஊற வைக்க வேண்டும்.
பின்பு, முளைக்கட்டிய பாசிப்பயிற்றை பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி, வெள்ளரிக்காய், துருவிய கேரட், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.
நொடிகளில் ஹெல்தியான சாலட் தயார் ஆகி விடும்.
பழ சாலட்:
டயட்டில் இருப்பவர்கள் அதிகமாக சாப்பிடும் உணவுகளுள் ஒன்றாக இருக்கிறது, பழ சாலட். இதனை செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் 1
வாழைப்பழம் 1
மாதுளை 1
திராட்சை 1 கொத்து
தேன் தேவையான அளவு
எலுமிச்சை சாறு தேவையான அளவு
காய்கறி சாலட்:
தேவையான பொருட்கள்
துருவிய கேரட்
முட்டைகோஸ்
வெள்ளரிக்காய்
பீட்ரூட்
நறுக்கிய கொத்தமல்லி
எலுமிச்சை சாறு
எப்படி செய்வது?
துருவிய கேரட், வெள்ளரிக்காய், பீட்ரூட், நறுக்கிய கொத்தமல்லி, முட்டைகோஸ் உள்ளிட்டவற்றை சேர்த்து, எலுமிச்சை சாறை கலந்து இந்த சாலட்டை தயாரிக்கலாம்.
மேலும் படிக்க | LPG கேஸ் சிலிண்டர் வேண்டுமா? உடனே இதை செய்யுங்கள். மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









