)
கூந்தல் ஆரோக்கியம் என்பது அதன் வெளிப்புற தோற்றம் மட்டுமல்ல. கூந்தல் உள்ளிருந்து வலுபெற வேண்டும். வெளிப்புற விஷயங்கள் தலைமுடியைப் பாதிப்பது மட்டுமல்லாமல், உடல் பிரச்சினைகளும் தலைமுடியின் ஆரோக்கியத்தில் மோசத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற சூழ்நிலையில், கூந்தலை உள்ளிருந்து ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்துக் கொள்ள நல்ல உணவை உட்கொள்வது முக்கியம். சருமம் மற்றும் கூந்தல் நிபுணர் மற்றும் மருத்துவர் டாக்டர் சுகன்யா நாயுடு கூந்தல் ஆரோக்கியத்திற்கான சில உணவுகளைப் பற்றி, தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் குறிப்பிடுகிறார்.
கூந்தலை உள்ளிருந்து வலுவாக்கும் உணவுகளை தவறாமல் சாப்பிடும்போது கூந்தல் உள்ளிருந்து ஊட்டம் பெறுகிறது. தலைமுடி வளர்ச்சி சீராகும். நீண்ட அழகான கூந்தலை பெறலாம். அழகிய நீண்ட, அடர்த்தியான கூந்தலை பெற, தேவையான ஊட்டச்சத்துக்கள், அதனை பெற உங்கள் உணவில் நீங்கள் சேர்க்க வேண்டிய உணவுகள் எவை என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இரும்புச்சத்து
இரும்புச்சத்து குறைபாடு என்பது தலைமுடியின் வேர்களுக்கு ஆக்ஸிஜன் சப்ளை கிடைக்காமல் இருக்க காரணமாகிவிடும். இதன் காரணமாக, தலைமுடி பொலிவை இழந்து கரடுமுரடானதாகவும் வறண்டதாகவும் தோன்ற ஆரம்பிகும். இதுபோன்ற சூழ்நிலையில், இரும்புச்சத்து குறைபாட்டை போக்க, பீட்ரூட், கீரை, வெந்தயம், மாதுளை மற்றும் பேரிச்சம்பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
புரதச்சத்து
புரதத்தைப் பெற, பருப்பு, பனீர், டோஃபு, முட்டை, முளைகட்டிய தானியங்கள் மற்றும் தினை ஆகியவற்றை ஏராளமாக சாப்பிடுங்கள். புரதம் சாப்பிடவில்லை என்றால், தலைமுடி வளர்ச்சியில் சிக்கல் ஏற்படும். தலைமுடி நன்றாக வளரவும், சேதத்தைத் தவிர்க்கவும் புரதம் தேவைப்படுகிறது.
துத்தநாகம்
பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள், பாதாம் மற்றும் வால்நட் சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு நல்ல அளவு துத்தநாகம் கிடைக்கிறது.
வைட்டமின் டி
தலைமுடிக்கு வைட்டமின் டி அவசியம். வைட்டமின் டி குறைபாடு முடி உதிர்தலை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், காலை சூரிய ஒளி உடல் படும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். முட்டையின் மஞ்சள் பகுதியை சாப்பிடுங்கள் மற்றும் காளான்களை உணவில் சேர்க்கவும்.
வைட்டமின் பி12
வைட்டமின் பி 12 குறைபாடும் தலைமுடியை பாதிக்கிறது. அதனால்தான் இந்த வைட்டமின் உணவில் சேர்ப்பது முக்கியம். முட்டை, பால் பொருட்கள், மீன் மற்றும் சிக்கன் ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் பி 12 பெறப்படுகிறது.
மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்
1. வாரத்திற்கு ஒரு முறை வெதுவெதுப்பான எண்ணெயால் தலைமுடியை மசாஜ் செய்வது நன்மை பயக்கும்.
2. தலை முடியை சேதப்படுத்தும் ரசாயன பொருட்களிலிருந்து விலகி இருங்கள்.
3. ஹேர் ட்ரையல் போன்ற அதிக வெப்பமூட்டும் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம். இது தலைமுடிக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது.
4. வாரத்திற்கு ஒரு முறை ஹேர் மாஸ்க் செய்து தடவினால், தலைமுடியை ஆழமாகப் பராமரிக்கலாம்.
5. உங்கள் தலைமுடி வகைக்கு ஏற்ப ஹேர் மாஸ்க் மற்றும் ஷாம்பூவைத் தேர்வு செய்ய முயற்சிக்கவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | இனி முடி கொட்டவே கொட்டாது.. கருவேப்பிலை, செம்பருத்தி பயன்படுத்தலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ