Nimra Khan Weight Loss Tips : பிரபல நடிகை ஒருவர், 1 வாரத்தில் 8 கிலோ வரை குறைத்திருக்கிறார். இதற்காக தான் பின்பற்றிய டயட் குறித்து அவர் தெரிவித்துள்ளார்.

Nimra Khan Weight Loss Tips : உடல் எடை அதிகரித்து இருக்கும் அனைவருக்குமே, நாம் எப்படியாவது ஒல்லியாக இருக்க வேண்டும் என்று ஒரு முறையேனும் கனவு காணாமல் இருக்க மாட்டார்கள். குறிப்பாக, கேமராவிற்கு முன் இருக்கும் நடிகைகள் எப்போதும் தங்களது எடையை சரியாக வைத்திருக்க வேண்டும் என நினைப்பர். அப்படி இல்லை என்றால், அவர்கள் வேலையில் பிரச்சனைகள் ஏற்படும்.
திரையில் தோன்றும் நடிகைகளாக இருப்பவர்கள், சரியாக டயட் இருந்து தங்களின் எடையை ஏறாமல் பத்திரமாக பார்த்துக்கொள்கின்றனர். உடல் எடை ஏறிவிட்டால் கூட, அதனை சட்டென டயட் உடற்பயிற்சி என ஏதேனும் செய்து குறைத்து விடுகின்றனர். அப்படித்தான், இங்கு ஒரு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நடிகை, தனது உடல் எடையை 7 நாட்களில் 8 கிலோ குறைத்திருக்கிறார். அது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.
நிம்ரா கான்:
பாகிஸ்தானை சேர்ந்த பிரபல நடிகையாக இருப்பவர், நிம்ரா கான். இவர், சமீபத்தில் தனது வெயிட் லாஸ் குறித்து ஒரு வீடியோவில் பகிர்ந்து கொண்டார். இந்த 34 வயது நடிகை, 7 நாட்களில் கிட்டத்தட்ட 8 கிலோ எடையை குறைத்ததாக பேசியிருக்கிறார். அது எப்படி தெரியுமா?
அவருக்கு உதவிய உணவுகள்..
உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் முதலில் தெளிவான இலக்குகளை வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறும் இவர், தன் உடல் எடை குறைப்பிற்கு உதவிய உணவுகள் குறித்தும் பேசியிருக்கிறார். 3 மணி நேரத்திற்கு ஒரு முறை ஆப்பிள் சாப்பிடுவது, 2 மணி நேரத்திற்கு ஒரு முறை கிரீன் டீ குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் இந்த நடிகை. இதனை இவர் காலை, மதியம் மற்றும் மாலை வேளை என 3 வேலைகளும், 7 நாட்களும் தொடர்ந்து செய்திருக்கிறார்.
கிராஷ் டயட்:
இந்த நடிகை இருந்த டயட்டிற்கு பெயர், கிராஷ் டயட். ஆனால், இதில் பல பிரச்சனைகள் உள்ளன. இந்த டயட்டில் இருப்பவர்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம் ஆகும். இந்த டயட்டில் புரத சத்தும் இருக்காது. அதே போல, இதை பின் தொடர்ந்தால் கண்டிப்பாக உடல் எடை குறையும். ஆனால், அதன் பிறகு சரியான டயட் இருக்கவில்லை என்றால் மீண்டும் மடமடவென வெயிட் ஏறிவிடும். அதே போல இதனால் கலோரி பற்றாக்குறையும் ஏற்படலாம்.
இதில் இருக்கும் பிரச்சனை என்ன?
இந்த டயட்டில் முட்டையின் வெள்ளை கருவையும் சேர்த்துக்கொள்ளலாம். இதில் இருக்கும் புரத சத்துகள் உங்களின் உடலில் புரதச்சத்து சேர வாய்ப்பளிக்கும். அதே போல சியா விதைகளில் ஃபைபர் சத்துகளும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்டும் இருக்கும். இதனால் செரிமானம் சீராவதுடன் இதயத்திற்கும் நன்மை பயக்குமாம்.
கிரீன் டீயில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடண்ட்ஸ்கள் உங்களின் உடலில் இருக்கும் மெட்டபாலிசத்தை அதிகப்படுத்தலாம். இருப்பினும், இந்த டயட்டில் கார்போ ஹைட்ரேட்ஸ் இல்லாததால், ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் தேவையான வைட்டமின்-மினரல் சத்துகள் இல்லாமல் போய்விடும். எனவே, இந்த டயட்டில் இருப்பவர்கள் கண்டிப்பாக இந்த பிரச்சனைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
ஹெல்தியான வெயிட் லாஸிற்கு என்ன செய்ய வேண்டும்?
ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால் முதலில் ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை டயட்டில் சேர்த்துக்கொள்வது அவசியமாகும். அதிகமாக சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, சரியான அளவில் சாப்பிடுவதை கடைப்பிடிக்க வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ