தனிநபர் கடன் Vs கிரெடிட் கார்டு... அவசர நிதி தேவைக்கு ஏற்றதாக இருப்பது இது?

அத்தியாவசிய தேவைகள், அவசர தேவைகள் போன்றவை காரணமாக நிதி உதவியை எதிர்நோக்கும் நிலையை நம் வாழ்வில் கிட்டத்தட்ட அனைவரும் சந்தித்திருப்போம்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 28, 2025, 07:04 PM IST
  • வசரகால சூழ்நிலைகளில், தனிநபர் கடன் வாங்குவது மிகவும் எளிதான வழி.
  • நல்ல சிபில் ஸ்கோர் இருந்தால், ஒப்பீட்டளவில் குறைந்த வட்டியில் கடன் பெறலாம்.
  • கிரெடிட் கார்டுகள் எளிது என்றாலும், அதில் சுமத்தப்படும் வட்டி விகிதம் மிகவும் அதிகம்.
தனிநபர் கடன் Vs கிரெடிட் கார்டு... அவசர நிதி தேவைக்கு ஏற்றதாக இருப்பது இது?

வாழ்க்கையில், பெரும்பாலானோர் நிதி நெருக்கடியை சந்தித்து இருப்பார்கள். அதிலும் நடுத்தர வர்க்கத்தினர், இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் எனலாம். அவசர தேவைக்காக நிதி உதவியை எதிர்நோக்கும் நிலையை நாம் அனைவருமே கடந்து வந்திருப்போம். உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் நிதி உதவியை பெற முடியாத நிலையில் தனிநபர் கடன் பெரிதும் கை கொடுக்கும் உதவியாக இருக்கும் என்பது தான் உண்மை நிலை.

Add Zee News as a Preferred Source

சிபில் ஸ்கோர் அல்லது கிரெடிட் ஸ்கோர் மூலம் வட்டியை குறைக்கலாம்

நெருக்கடி அல்லது அவசரகால சூழ்நிலைகளில், தனிநபர் கடன் வாங்குவது மிகவும் எளிதான வழியாக கருதப்படுகிறது. ஒரு ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்கான காலகட்டத்திற்கு இந்த கடன் வழங்கப்படுகிறது. கடனுக்காக அங்கீகாரம் பெறுவதும் எளிதாகவே உள்ளது. நல்ல சிபில் ஸ்கோர் அல்லது கிரெடிட் ஸ்கோர் இருந்தால், ஒப்பீட்டளவில் குறைந்த வட்டியில் கடன் பெறலாம். தனிநபர் கடனை போல கிரெடிட் கார்டுகளும் ஓரளவு கை கொடுக்கும்.

தனிநபர் கடன் - கிரெடிட் கார்டு இரண்டில் எது சிறந்த தேர்வாக இருக்கும்?

மருத்துவ அவசரநிலை, திருமணம் போன்ற அதிக நிதி தேவைப்படும் இடத்தில் தனி நபர் கடன் சிறந்த தேர்வாக இருக்கும். அதே சமயத்தில், குறைந்த அளவு நிதி தேவைப்படும் இடத்தில் கிரெடிட் கார்டு சிறந்த தேர்வாக இருக்கும். உதாரணத்திற்கு விமான டிக்கெட் வாங்க போதுமான பணம் இல்லாத நிலையில், கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம். எனினும், இதனை காலாகாலத்தில் அடைக்க வில்லை என்றால், வட்டி தொகை அசல் தொகையை விட அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

கடனுக்கான வட்டி விகிதம்: ஒரு ஒப்பீடு

தனிநபர் கடன் மற்றும் கிரெடிட் கார்டு இரண்டையும் ஒப்பிடும்போது நிச்சயம் தனிநபர் கடன் மீதான வட்டி விகிதம் குறைவு என்பதை மறுக்க முடியாது. கிரெடிட் கார்டுகள் எளிது என்றாலும், அதில் சுமத்தப்படும் வட்டி விகிதம் மிகவும் அதிகம். சில சமயங்களில் 30 சதவீதங்கள் என்ற அளவில் கூட வட்டி வசூலிக்கப்படுகிறது. குறைந்த அளவில் கடன் பெற்று, அதனை ஓரிரு மாதங்களில் அடைத்து விடலாம் என்ற நிலையில் மட்டுமே கிரெடிட் கார்டை தேர்ந்தெடுக்க வேண்டும்.

சிறந்த கிரெடிட் மதிப்பெண்களால் குறையும் வட்டி

சிபில் ஸ்கோர் அல்லது கிரெடிட் ஸ்கோர் சிறப்பாக இருந்தால், வங்கிகள் குறைந்த அளவிலான வட்டி விகிதத்தில் கடன்கள் வழங்குகின்றன. எனவே சிபில் ஸ்கோர் அல்லது கிரெடிட் ஸ்கோர் சிறப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்வதால், ஒப்பீட்டு அளவில் குறைந்த வட்டி விகிதத்தில் கடனை பெறும் வாய்ப்பு உண்டு.

கடன் வலையில் சிக்காமல் இருக்க செய்ய வேண்டியவை?

பொதுவாக முடிந்த அளவு கடன் வாங்குவதை தவிர்க்க முயல்வது நல்லது. வாங்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், எந்த அளவிற்கு குறைவாக வாங்க வேண்டுமோ அந்த அளவிற்கு குறைவாக வாங்கி, சமாளிப்பதால் கடனை விரைவில் அடைத்து விடுதலை பெறலாம். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவதும், அவசர காலத்திற்காக திட்டமிட்டு சேமிப்பதும், கடன் வாங்காமல் இருக்க உதவும். வருமானத்திற்கு ஏற்றவாறு செலவு செய்யவும், சம்பாதிக்கும் பணத்தில் ஓரளவு சேமித்து முதலீடு செய்யவும் பட்ஜெட் ஒன்றை தயாரித்து திட்டமிடுவது நல்லது.

மேலும் படிக்க | PM Kisan 20வது தவணை எப்போது வருகிறது? பயனாளிகளுக்கு முக்கிய அப்டேட்

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: லெவல் 3 முதல் லெவல் 10 வரை... அகவிலைப்படி, சம்பளம் எவ்வளவு உயரும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News