Post Office Scheme : இப்போதைய காலகட்டத்தில் வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை நீங்கள் சேமிக்க பழகிக்கொள்வது அவசியம். கொரோனா வைரஸ் பரவலின்போது தான் மக்கள் சேமிப்பின் அருமையை உணர்ந்தனர். இப்படியான நெருக்கடியில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால் பாதுக்காப்பான மற்றும் நல்ல வருவாய் கிடைக்கக்கூடிய திட்டத்தில் முதலீடு செய்வது அவசியம். அப்படியான ஒரு திட்டம் போஸ்ட் ஆபீஸில் இருக்கிறது. இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் வட்டி மூலம் மட்டும் 2 லட்சம் ரூபாய் பெற முடியும்.
7.5% வட்டி திட்டம்
போஸ்ட் ஆபீஸில் எல்லா வயதினருக்கும் ஏற்ற சேமிப்பு திட்டங்கள் உள்ளன. குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லோரும் சேமிக்க ஏற்ற வகையிலான சூப்பர் சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம். இந்த திட்டம் சேமிப்புக்கு நல்ல வருமானத்தை கொடுப்பதுமட்டுமின்றி, பாதுகாப்பான முதலீடு மற்றும் வரி விலக்கு ஆகியவற்றின் நன்மைகளும் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு பணம் முதலீடு செய்ய வேண்டும். முதலீட்டாளர்களுக்கு மத்திய அரசு 7.5 சதவீதம் என்ற சிறந்த வட்டியை வழங்குகிறது.
வெவ்வேறு கால அளவுகளில் இவ்வளவு வட்டி
டைம் டெபாசிட் திட்டத்தின் கீழ், முதலீட்டாளர்கள் வெவ்வேறு கால அளவுகளுக்கு முதலீடு செய்யலாம். இதில், 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகளுக்கு என பணம் டெபாசிட் செய்யலாம். ஒரு ஆண்டுக்கு முதலீடு செய்வதற்கு 6.9 சதவீதம் வட்டி கிடைக்கிறது, அதே சமயம் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு பணம் முதலீடு செய்வதற்கு வட்டி விகிதம் 7 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், முதலீட்டாளர்களுக்கு 7.5 சதவீதம் என்ற விகிதத்தில் வட்டி கிடைக்கிறது.
வட்டியில் இருந்து 2 லட்சம் ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
போஸ்ட் ஆபீஸின் இந்த திட்டம் மூலம் முதலீட்டாளர்கள் வட்டி வழியாக மட்டும் 2 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். முதலீட்டாளர் இந்த திட்டத்தில் 5 லட்சம் ரூபாய் ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்திருந்தால், 7.5 சதவீதம் என்ற விகிதத்தில், 5 ஆண்டு காலகட்டத்தில் டெபாசிட்டில் 2,24,974 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதை கூட்டினால், முதிர்வின் போது மொத்த தொகை 7,24,974 ரூபாய் ஆக இருக்கும். அதாவது, இந்த திட்டத்தில் நீங்கள் வட்டி மட்டும் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பீர்கள்.
வரி விலக்கும் உண்டு
டைம் டெபாசிட் திட்டத்தில், வாடிக்கையாளருக்கு இன்கம் டேக்ஸ் டிபார்ட்மென்ட் சட்டம் 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு வழங்கப்படுகிறது. இந்த சேமிப்பு திட்டத்தில் ஒற்றை கணக்கு அல்லது கூட்டு கணக்கை திறக்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு அவரது குடும்ப உறுப்பினர் மூலம் கணக்கு திறக்கலாம். குறைந்தபட்சம் 1,000 ரூபாய் மூலம் கணக்கு திறக்கலாம். வட்டி பணம் ஆண்டு அடிப்படையில் இதில் சேர்க்கப்படுகிறது. அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை, அதாவது நீங்கள் அதிக பணத்தை முதலீடு செய்ய, உங்கள் வட்டி வருமானம் அதிகரிக்கும்.
மேலும் படிக்க | போஸ்ட் ஆபீஸ் மூலம் மாதம் 40 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









