நேர்காணலில் கண்டிப்பாக கூற வேண்டியது! ‘இதை’ சொன்னால் உடனே வேலை கிடைக்கலாம்..

Powerful Tips To Crack The Interview : நேர்காணலில் கலந்து கொள்ளும் போது, சில விஷயங்களை கூறினால் கண்டிப்பாக வேலை கிடைக்கும். அவை என்ன தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Jun 28, 2025, 04:09 PM IST
  • நேர்காணலை எதிர்கொள்ள டிப்ஸ்
  • உடனே உங்களை வேலைக்கு எடுத்துக்கொள்வர்
  • அதற்கு என்ன செய்ய வேண்டும்?
நேர்காணலில் கண்டிப்பாக கூற வேண்டியது! ‘இதை’ சொன்னால் உடனே வேலை கிடைக்கலாம்..

Powerful Tips To Crack The Interview : மிடில் கிளாசில் பிறந்த அனைவருக்கும் படிப்பை முடித்த பிறகு வேலை கிடைக்க வேண்டும் என்பது ஒரு நிர்ப்பந்தமாக இருக்கும். ஆனால் பல சமயங்களில் நேர்காணலில் முதல் அல்லது இரண்டாவது ரவுண்டிலேயே, பலர் வெளியேறுவதுண்டு. இதற்கு காரணம், சரியாக பதில் சொல்லாதது, முதல் இம்ப்ரசன் சரியாக உருவாக்காதது, நிறுவனத்தின் பாலிசிக்களுடன் ஒத்துப்போகாதது என பல இருக்கலாம். இவை அனைத்தையும் தாண்டி நேர்காணலில் நாம் நல்ல அபிப்பிராயத்தை உருவாக்கி விட்டாலே, அந்த வேலை கிடைப்பது கன்ஃபார்ம் ஆகி விடும். அப்படி, முதல் பார்வையிலேயே நேர்காணல் செய்பவரை ஈர்க்க, நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

Add Zee News as a Preferred Source

நிறுவனம் குறித்து ஆராய்ச்சி செய்தல்: 

நீங்கள் எந்த நிறுவனத்திற்கு நேர்காணலுக்கு செல்கிறீர்களோ, அந்த நிறுவனம் குறித்து நன்றாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். அவர்களின் இலக்கு என்ன, சமீபத்தில் ஏதேனும் சாதனை செய்திருக்கிறார்களா, அவர்களது போட்டி நிறுவனம் எது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் எந்த தகுதி நிலைக்காக விண்ணப்பித்திருக்கிறீர்களோ அது குறித்தும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

சுய விவரம்:

நீங்கள் செல்வதற்கு முன்பாக உங்கள் சுயவிவரம் குறிப்பை அனுப்பியிருப்பீர்கள். அதில் உங்களது திறனாக இதையெல்லாம் குறிப்பிட்டிருக்கிறீர்களோ அவை குறித்து உங்களுக்கு பேச தெரிய வேண்டும். நீங்கள் ஏதேனும் சாதனை செய்து இருந்தால் அதனை சுயவிவரக் குறிப்பில் குறிப்பிடுவதோடு, கண்டிப்பாக அவை குறித்து நேர்காணலில் பேசவும் தெரிய வேண்டும். 

கேள்வி பதில்கள்: 

நேர்காணலில் என்ன கேட்கப் போகிறார்கள் என்பதை தாண்டி, உங்களைப் பற்றிய சில சாதாரண கேள்விகளும் இருக்கும். அதை நீங்கள் வீட்டிலேயே பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். “உங்களைப் பற்றி கூறுங்கள், தாங்கள் ஏன் உங்களை வேலைக்கு எடுக்க வேண்டும், உங்களது பலம் மற்றும் பலவீனம் என்ன, இன்னும் ஐந்து வருடத்தில் உங்களை எங்கு நீங்கள் பார்க்கிறீர்கள்?” போன்ற கேள்விகள் சாதாரணமானவை ஆகும். 

நீங்கள் கேட்க வேண்டிய கேள்விகள்: 

நேர்காணல் என்றால் அவர் மட்டும் உங்களை கேள்வி கேட்க வேண்டும் என்பதில்லை. நீங்களும் அவரை கேள்வி கேட்கலாம். “இந்த வேலை, எனது திறனுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும், இந்த வேலையில் இருப்பவருக்கான இலக்கு என்ன?” போன்ற கேள்விகளை கேட்கலாம். 

ஆள் பாதி-ஆடை பாதி:

உங்களுக்கு சௌகரியமாக இருக்கும் உடைகளை அணிய வேண்டும். இருப்பினும், அந்த உடைகள், நிறுவனத்திற்கு ஏற்றவாறு இருக்கிறதா, அது நேர்காணலுக்கு ஏற்படையதா என்பதை பார்த்துவிட்டு அணிய வேண்டும். 

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை:

நேர்காணலுக்கு 5-10 நிமிடம் முன்கூட்டியே சென்று விடுங்கள். கைகளை குலுக்கும் போது தன்னம்பிக்கையுடன் குலுக்க வேண்டும். பேசும் போது கண்களை பார்த்து பேசவும். தன்மையும், சாந்தமும் பேச்சில் இருக்க வேண்டும். 

நேர்காணலில் குறிப்பிட வேண்டியது:

நீங்கள் பழைய வேலையில் ஏதாவது சவாலை எதிர்கொண்டிருந்தால், அதனை எப்படி தாண்டி வந்தீர்கள், அதில் எப்படி வெற்றி கிடைத்தது என்பதை கூறலாம். இது, உங்களை அவர்கள் நிறுவனத்திற்காக எடுக்க வேண்டும் என்கிற உணர்வை தூண்டும், உங்களை இழக்க கூடாது என்கிற குணமும் தோன்றும்.

மேலும் படிக்க | Tips and Tricks: உங்கள் பேஸ்புக் கணக்கைப் பாதுகாப்பாக இருக்க வேண்டுமா?

மேலும் படிக்க | கடினமான நேர்காணல்களையும் எளிதாக எதிர்கொள்ளலாம்! 7 டிப்ஸை படிங்க...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News