வாழ்க்கையில் எப்போது என்ன விதமான நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும் என்பதை யாராலும் கணித்து சொல்ல முடியாது. எனவே, எல்லோருமே எதிர்பாராத சூழ்நிலைகளை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும். உடல்நலக் காப்பீடு, காப்பீட்டு திட்டங்கள் மற்றும் ஆயுள் காப்பீடு போன்றவை நெருக்கடியான சூழ்நிலைகளில் மிகவும் உதவியாக இருக்கும். இருப்பினும், காப்பீட்டு திட்டங்களின் பிரீமியம், ழை எளிய மக்கள் வாங்க முடியாத அளவில் அதிகமாக உள்ளது.
மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்னும் காப்பீட்டு திட்டம் ஏழை எளியவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இது ஒரு டேர்ம் இன்சூரன்ஸ் திட்டமாகும். இதில் காப்பீடு எடுத்துள்ளவர் மரணம் அடைந்தால் உங்கள் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குகிறது. அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்த திட்டத்தின் பிரீமியம் மிகவும் குறைவாக இருப்பதால், மாதம் ரூ.5000-10,000 சம்பாதிப்பவர்கள் கூட எளிதாக வாங்கலாம். இந்த திட்டம் தொடர்பான சிறப்பு அம்சங்களை அறிந்து கொள்ளலாம்.
மாதம் 36 ரூபாய் பிரீமியத்தில் ரூ.2 லட்சம் காப்பீடு
அரசின் இத்திட்டத்தின் கீழ், காப்பீடு செய்தவர் இறந்தால், அவரது குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. இக்கட்டான காலங்களில் குடும்பத்தின் பல தேவைகளை இந்த உதவியால் நிறைவேற்ற முடியும்.அரசின் இந்த திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் ஆண்டுக்கு ரூ.436 செலுத்தி இந்தத் திட்டத்தில் சேர வேண்டும். அதாவது ஒரு நபர் ஒவ்வொரு மாதமும் ரூ. 36 என்ற அளவில் ப்ரீமியம் செலுத்தினால் போதும் ( 436/12=36.3 ).
PMJJBY திட்டத்தில் யாரெல்லாம் சேரலாம்
18 முதல் 50 வயது வரை உள்ள எவரும் அரசின் இந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை வாங்கலாம். PMJJBY இன்சூரன்ஸ் திட்டத்தின் கவரேஜ் காலம் ஜூன் 1 முதல் மே 31 வரை, அதாவது ஆண்டின் எந்த மாதத்திலும் நீங்கள் அதை வாங்கலாம். ஆனால் மே 31 வரை மட்டுமே கவரேஜைப் பெறுவீர்கள், ஜூன் 1 ஆம் தேதி நீங்கள் அதை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள, உங்களிடம் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது ஆட்டோ டெபிட் முறை நீங்கள் தேர்வு செய்திருந்தால், ஒவ்வொரு ஆண்டும் மே 25 முதல் மே 31 வரை, பாலிசி ப்ரீமியமான ரூ.436 உங்கள் கணக்கிலிருந்து தானாகவே கழிக்கப்படும்.
மருத்துவ பரிசோதனை தேவையில்லை
பாலிசி எடுக்க உங்களுக்கு எந்த வித மருத்துவ பரிசோதனையும் தேவையில்லை. காப்பீட்டு பாலிசியின் ஒப்புதல் கடிதத்தில் சில குறிப்பிட்ட நோய்கள் குறிப்பிடப்பட்டுள்ளன, அந்த நோய்களால் நீங்கள் பாதிக்கப்படவில்லை என்று நீங்கள் எழுதிக் கொடுக்க வேண்டும். நீங்கள் அளித்த தகவல் தவறானது என நிரூபிக்கப்பட்டால், உங்கள் குடும்பத்திற்கு இந்தத் திட்டத்தின் பலன் கிடைக்காது. இது தவிர, இந்த திட்டத்தில் காப்பீட்டு பிரீமியமாக டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு பெறலாம்.
PMJJBY திட்டத்தை எப்படி பயன்படுத்திக் கொள்வது?
டெர்ம் இன்ஷ்யூரென்ஸ் பாலிசியை எடுக்க விரும்பினால், நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலிருந்து அதன் படிவத்தைப் பெறலாம். படிவத்தின் மூலம், பாலிசிக்காக தனது கணக்கிலிருந்து பணத்தைக் கழிக்கத் தயாரா இல்லையா என்பதை கணக்கு வைத்திருப்பவரிடமிருந்து ஒப்புதல் பெறப்படுகிறது. இதற்குப் பிறகு மீதமுள்ள வேலைகளை வங்கியே பார்த்துக் கொள்ளும். இது தவிர, சில வங்கிகள் நெட் பேங்கிங் மூலமாகவும், சில எஸ்எம்எஸ் மூலமாகவும் இந்த பாலிஸியை பெறும் வசதியை வழங்கத் தொடங்கியுள்ளன.
PMJJBY பதிவு விதிமுறைகள்
இந்திய அரசின் இந்த திட்டத்திற்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால், உங்களிடம் ஆதார் அட்டை, அடையாள அட்டை, வங்கி கணக்கு பாஸ்புக், மொபைல் எண் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இருப்பது அவசியம். ஆதார் மூலம் உங்கள் அடையாளம் சரிபார்க்கப்படுவதால், உங்கள் வங்கிக் கணக்கு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். ஒரே ஒரு வங்கிக் கணக்கு மூலம் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனாவின் பலன்களைப் பெறலாம். இந்த பாலிஸியை வேறு எந்தக் கணக்குடனும் இணைக்க முடியாது. பாலிசி எடுத்த 45 நாட்களுக்குப் பிறகுதான் காப்பீட்டுத் திட்டத்தின் பலன் கிடைக்கும். ஆனால், விபத்தில் இறந்தால் 45 நாட்கள் என்ற நிபந்தனை செல்லாது.
நாமினி எவ்வாறு பாலிஸியை க்ளைய்ம் செய்ய முடியும்?
சம்பந்தப்பட்ட நபர் காப்பீடு செய்த வங்கியில் நாமினி க்ளைம் செய்ய வேண்டும். டிஸ்சார்ஜ் ரசீதுடன் இறப்புச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் பிற முக்கிய ஆவணங்களைக் கொடுக்க வேண்டும். விதிகளின்படி விபத்து நடந்த 30 நாட்களுக்குள் க்ளைம் தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | SIP vs PPF: ரூ.10,000 முதலீட்டை ரூ.50 லட்சமாக பெருக்க உதவும் முதலீடு எது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









