பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் (PMIS) கடந்த 2024ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அடுத்த 5 ஆண்டுகளில், இந்த திட்டம் 10 மில்லியன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் 1.25 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் அக்டோபர் 3, 2024 அன்று தொடங்கப்பட்டது.
பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கான மொபைல் செயலி
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்களன்று பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கான மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி, மேலும் பல நிறுவனங்களை திட்டத்தில் சேர வலியுறுத்தினார். இளைஞர்களை இந்தத் திட்டத்தில் சேர ஊக்குவிக்குமாறு எம்.பி.க்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் தெரிவித்தார்.
சுமார் 1.27 லட்சத்துக்கும் அதிகமான இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்
பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் முன்னோடித் திட்டத்தின் முதல் சுற்றில், சுமார் 1.27 லட்சத்துக்கும் அதிகமான இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் நிறுவனங்களால் வழங்கப்பட்டன. மேலும் இந்தத் திட்டத்தின் இரண்டாவது சுற்று இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கியது, இதன் கீழ் சுமார் 327 நிறுவனங்களால் 1.18 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது சுற்றுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆகும். திட்டத்தில் பலன் பெறும் ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் மாதாந்திர நிதி உதவி ரூ.5,000 வழங்கப்படும், கூடுதலாக பயிற்சியில் சேரும் ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் ரூ.6,000 ஒரு முறை மானியம் வழங்கப்படும்.
திட்டத்தில் இணைய தகுதி அளவுகோல்கள்:
1. திட்டத்தில் இணைபவர்கள் 21 முதல் 24 வயது வரையிலான வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.
2. விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் இடைநிலைக் கல்வி (10 ஆம் வகுப்பு தேர்ச்சி), உயர் இடைநிலைக் கல்வி (12 ஆம் வகுப்பு தேர்ச்சி) அல்லது பி.ஏ, பி.எஸ்சி, பி.காம், பிசிஏ, பிபிஏ, பி.ஃபார்மா போன்ற டிப்ளமோ/பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3. முழுநேர வேலைவாய்ப்பு அல்லது முழுநேரக் கல்வி கற்பபவர்கள் விண்ணப்பிக்க இயலாது. ஆன்லைன் அல்லது தொலைதூரக் கல்வித் திட்டங்களில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
திட்டத்தில் கிடைக்கும் காப்பீடு வசதி
பயிற்சியாளர்கள் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா ஆகியவற்றின் கீழ் காப்பீடு செய்யப்படுவார்கள், மத்திய அரசாங்கத்தால் பிரீமியங்கள் செலுத்தப்படும்.
திட்டத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட், தி டைம்ஸ் குரூப், ஐடிசி லிமிடெட் மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள முன்னணி நிறுவனங்களுடன் பணிபுரியும் வாய்ப்பு பயிற்சியாளர்களுக்குக் கிடைக்கும்.
விண்ணப்பிக்கும் முறை
1. அதிகாரப்பூர்வ PM இன்டர்ன்ஷிப் திட்ட வலைத்தளத்தைப் பார்வையிடவும்: pminternship.mca.gov.in.
2. “Register” என்ற இணைப்பைக் கிளிக் செய்து தேவையான தனிப்பட்ட மற்றும் கல்வி விவரங்களை வழங்கவும்.
3. உங்கள் கல்வி பின்னணி, திறன்கள் மற்றும் ஆர்வமுள்ள துறைகளை முன்னிலைப்படுத்தும் ஒரு சுயவிவரத்தை உருவாக்கவும்.
4. கிடைக்கக்கூடிய இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை உலாவவும், இடம், துறை மற்றும் பங்கு போன்ற உங்கள் விருப்பங்களின் அடிப்படையில் ஐந்து இடங்களுக்கு விண்ணப்பிக்கவும்.
5. உங்கள் மின்னஞ்சலை உள்ளிடவும்
இன்டர்ன்ஷிப்பை வெற்றிகரமாக முடித்தவுடன், பங்கேற்பாளர்கள், பயிற்சி வழங்கும் நிறுவனத்திடமிருந்து ஒரு சான்றிதழைப் பெறுவார்கள். இது அவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முறை வலையமைப்பை மேம்படுத்துகிறது. ஏதேனும் கேள்விகள் அல்லது கூடுதல் தகவல்களுக்கு, விண்ணப்பதாரர்கள் பெருநிறுவன விவகார அமைச்சகத்தை 1800 11 6090 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது pminternship@mca.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
இரண்டாம் மூன்றாம் நிலை நகர இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு
திங்களன்று தேசிய தலைநகரில் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்ட செயலியை அறிமுகப்படுத்திய பின்னர், நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தத் திட்டம் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து இளைஞர்களை அழைத்து வந்து, தொழில்துறைக்குத் தேவையான திறன்கள் மற்றும் வேலை கிடைக்கும் தன்மையைப் புரிந்துகொள்ள உதவும் என்று கூறினார்.
அதிக நிறுவனங்கள் இணைய கோரிக்கை
தொழில்துறையின் எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், அந்த இடைவெளியைக் குறைக்கும் வகையில் இந்த திட்டம் உள்ளது என்றும் அவர் கூறினார். இத்திட்டம் குறித்து, தொழில் துறைக்கு எந்த அழுத்தமும் இல்லை என்றும், அதில் எந்த குறுக்கீடும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தத் திட்டம் தேசிய நலனுக்கானது என்று கூறிய சீதாராமன், மேலும் மேலும் நிறுவனங்கள் இதில் இணைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சிறந்த தொழில் வாழ்க்கைக்கான அஸ்திவாரம்
இந்திய தொழில்துறை அதிக ஆர்வத்தில் பங்கேற்க வேண்டும் என்றார் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான இணையமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா. அவர் மேலும் கூறுகையில், இந்த திட்டம் இளைஞர்களுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்கிறது மற்றும் இதனால், இவர்களது தொழில் வாழ்க்கைக்கான அஸ்திவாரம் சிறப்பாக போடப்பட்டு, அவர்கள் வளர்ந்த இந்தியாவிற்கு பங்களிக்க உதவும்.
மேலும் படிக்க | பெண்களுக்கு மாதம் ரூ.7000 பெறலாம் - இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
மேலும் படிக்க | மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்கவேண்டிய சில முக்கிய வேலைகள்... நோட் பண்ணிக்கோங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









