பேஸ்புக் சமூக வலைதளத்தில் உலக தலைவர்களில் பிரதமர் மோடி தான் மிகவும் பிரபலமான தலைவர் என்று ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிக பிரபலமான உலக தலைவர்களை வரிசைப்படுத்த ‘பேஸ்புக்’ நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது. அதில், பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பிடித்து, மிக பிரபலமான உலக தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.


பேஸ்புக்கில், அவரது தனிப்பட்ட பக்கத்துக்கு 4 கோடியே 35 லட்சம் ‘லைக்ஸ்’ கிடைத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு, 2-ம் இடம்தான் கிடைத்துள்ளது. அவரது தனிப்பட்ட பக்கத்துக்கு 2 கோடியே 30 லட்சம் ‘லைக்ஸ்’ கிடைத்துள்ளது.


ஜோர்டான் ராணி ரனியா, பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனாரோ ஆகியோர் 3 மற்றும் 4-வது இடங்களை பிடித்துள்ளனர்.