நமக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசிய சத்துக்களில் ஒன்று புரோட்டீன் என்னும் புரதச்சத்து. உடல் வளர்ச்சி முதல், தசைகள் எலும்புகள் மற்றும் திசுக்களை உருவாக்க புரதச்சத்து அவசியம். அதோடு ஹார்மோன்கள் மற்றும் என்சைங்கள் உற்பத்திக்கும் புரதச்சத்து அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, ஆற்றல் குறையாமல் இருக்கவும் புரதச்சத்து உதவுகிறது.
புரதச்சத்து குறைபாடு ஏற்பட்டால், உடல் சோர்வு தசை பலவீனம், நகங்கள் உடைதல், முடி உதிர்தல், சரும பிரச்சனைகள், அடிக்கடி ஏற்படும் எலும்பு முறிவுகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் அறிகுறிகளை காணலாம். எனவே உணவில் போதுமான அளவு புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். புரதம் நிறைந்த சைவ உணவுகள் என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சோயா தான். அந்த வகையில் புரத குறைபாடு ஏற்படாமல் இருக்க உதவும் மிகச் சிறந்த, சுவையான சோயா கிரேவி தயாரிப்பது எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம்.
புரதச்சத்து நிறைந்த சுவையான சோயா கிரேவி
சோயா கிரேவியை, இங்கே கொடுக்கப்பட்டுள்ள முறையில் தயாரித்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சோயா கிரேவி தயாரிக்க தேவையான பொருட்கள்
ஒரு கப் சோயா அல்லது ஒரு கப் சோயா சங்க்ஸ்
தக்காளி இரண்டு
வெங்காயம் ஒன்று
பூண்டு 4 -5 பல்
இஞ்சி பச்சை மிளகாய் கருவேப்பிலை சிறிதளவு
கரம் மசாலா அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
மல்லித்தூள் ஒரு ஸ்பூன்
துருவிய தேங்காய் அரை கப்
முந்திரி பருப்பு 5
சோம்பு, பட்டை கிராம்பு, ஏலக்காய், நட்சத்திர சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள்.
முதலில் சோயா சங்க்ஸ் ஒரு கப் எடுத்துக் கொண்டு அதனை, சுடுநீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனைப் பிழிந்து எடுத்து தண்ணீரில் சிறிதளவு வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். சோயா பருப்பை உபயோகிக்கிறீர்கள் என்றால், சோயா பருப்பை எட்டு மணி நேரம் ஊற வைத்து, அதன் தண்ணீரை வடித்து விட்டு குக்கரில் போட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை நீக்குவது மிக முக்கியம். சோயா ஊட்டச்சத்து நிறைந்தது என்றாலும். அதில் ஆன்ட்டி நியூட்ரியன்ட்களும் உள்ளன. அவைகளை அழிக்க 8 மணி நேரம் ஊற வைத்து அந்த தண்ணீரை வடித்து விடுவது அவசியம்.
இதற்கிடையில், தேங்காய், மசாலா பொருட்கள், முந்திரி, இஞ்சி பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, சிறிதளவு பட்டை சோம்பு, ஏலக்காய் கிராம்பு ஆகியவற்றை தாளித்து, அதில் பூண்டு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கிய பின், அதில் பொடியாக நறுக்கிய தக்காளியையும், சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் மற்றும் தக்காளி நன்றாக வதங்கியதும், அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள், தனியா தூள் கரம் மசாலா பொடி சேர்த்து நன்றாக வதக்கி, அதில் வேக வைத்த சோயா மற்றும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். பிறர் பிறகு அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து இறக்கினால், சுவையான சோயா கிரேவி தயார். இதனை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட, சுவையையும் ஆரோக்கியத்தையும் ஒரு சேர பெறலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









