ஆண்களுக்கு வீட்டு வேலை செய்ய பிடிக்காதது ஏன்? சைக்கலாஜிக்கல் காரணம் இதுதான்..

Reasons Why Men Does Not Like Household Chores : நம் சமூகத்தை பொறுத்தவரை, பெரும்பாலான ஆண்கள் வீட்டு வேலை செய்வதே இல்லை. அதற்கு பின்னால் இருக்கும் சைக்கலாஜிக்கல் காரணம் என்ன தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Mar 11, 2025, 03:54 PM IST
  • ஆண்களுக்கு ஏன் வீட்டு வேலை செய்ய பிடிப்பதில்லை..
  • சைக்கலாஜிக்கல் காரணங்கள்..
  • முழு விவரம், இதோ!
ஆண்களுக்கு வீட்டு வேலை செய்ய பிடிக்காதது ஏன்? சைக்கலாஜிக்கல் காரணம் இதுதான்..

Reasons Why Men Does Not Like Household Chores : இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலான கணக்கெடுப்பை எடுத்துக்கொண்டால், வீட்டு வேலைகளை செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களாகவே இருப்பர். உத்தியோகத்தில் எவ்வளவு பெரிய பணியில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, இல்லத்தரசியாக இருந்தாலும் சரி வீட்டு வேலைகளை அவர்கள்தான் செய்ய வேண்டும் என்று அந்த வீட்டு ஆண்கள் எதிர்பார்ப்பது வழக்கம். ஒரு சில பேர், “சரி நான் உனக்கு வீட்டு வேலைகளில் ‘உதவி’ செய்கிறேன்” என்று கூறுவர். ஆனால், சமைப்பதும், துணி துவைப்பதும், பாத்திரம் தேய்ப்பதும் தங்களது கடமை என்பது பெரும்பாலான ஆண்களுக்கு தோனாது. இதற்கு என்ன காரணம்? உளவியல் ரீதியாக ஏன் ஆண்களுக்கு இப்படி தாேன்றுகிறது? இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

டாக்சிக் கலாச்சாரம்:

பெரும்பாலான ஆண்கள், தங்களது இல்லங்களில் வளர்க்கப்படும் போது சில டாக்சிக் கலாச்சாரங்களை கற்றுக்கொண்டே வளர்கின்றனர். அவர்கள் தங்களது தாய்-தந்தை செய்யும் வேலைகளை பார்க்கும் போது, தந்தை வெளி வேலைகளை செய்யும் ஆளாக இருப்பார், தாய் வீட்டில் இருக்கும் வேலைகளை பார்ப்பவராக இருப்பார். இதை பார்த்தே வளரும் அவர்களும், தங்களது மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கணக்கு போட்டுக்கொள்கின்றனர். இதனால்தான், பெண் பார்க்க போகும் போது கூட “உனக்கு சமைக்க தெரியுமா?” என்று அந்த மணப்பெண்ணிடம் இன்னும் கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

ஆணாதிக்க எண்ணம்:

ஒரு சில ஆண்கள், வீட்டு வேலைகளை செய்வதால், தங்களது ஆண்மைக்கு கலங்கம் வந்து விடுமோ என்று நினைக்கின்றனர். “ஒரு ஆண் வீட்டு வேலைகளை செய்வதா?” என்ற எண்ணம் அவர்களுக்கு எந்த வீட்டு வேலையை செய்ய சொன்னாலும் தோன்றும். சமைப்பது உள்ளிட்ட பல வீட்டு வேலைகளை அவர்கள் பெண்களுக்குரியது என்று நினைத்துக்கொள்கின்றனர். இந்த ஆணாதிக்க எண்ணமும் அவர்கள் வீட்டு வேலை செய்யாததற்கு ஒரு காரணம் ஆகும்.

உதவியற்ற தன்மை:

ஒரு ஆண், அவன் சிறு வயதாக இருக்கும் போதில் இருந்து எந்த வீட்டு வேலைகளையும் செய்ய எதிர்பார்க்கப்பட மாட்டான். இந்த நிலை வளர்ந்த பின்பும் தொடரும். இதனால், தன்னை தானே பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை வரும் போது அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதே தெரியாது. 

உடனடி மனநிறைவு இல்லாமை:

ஒரு ஆண், பணம் அல்லது புகழை தேடித்தரும் வேலைகளை செய்கிறான் என்றால் அவனுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைப்பதோடு, அவன் செய்த வேலைக்கு சன்மானமும் கிடைக்கும். ஆனால், வீட்டு வேலைகள் பெரும்பாலான தருணங்களில் கவனிக்கப்படாமல் போகின்றன. இதனால்,  “நான் வீட்டு வேலை செய்தால் எனக்கு என்ன கிடைக்கப்போகிறது?” என்ற எண்ணம் அவர்களை எந்த வேலையையும் செய்ய விடாமல் தடுக்கிறது. இதனால், அப்படிப்பட்ட வேலைகளை செய்தாலும் கூட அவர்களுக்கு மன நிறைவு ஏற்படுவதில்லை.

மனச்சுமை:

வீட்டை நிர்வாகம் செய்ய வேண்டுமென்றால், பல விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதும், யோசிக்க வேண்டியதும் நம் கைகளில் உள்ளது. இதனால் மனச்சுமை அதிகரிக்கும். இந்த சுமைகளை, தனது மனைவியே சுமக்கட்டும் என்று பெரும்பாலான ஆண்கள் நினைத்துக்கொள்கின்றனர். இதனால், இந்த பொறுப்புகள் பெண்களிடம் அவர்களையே அறியாமல் திணிக்கபடுகிறது.

மேலும் படிக்க | ஒரு பெண்ணுக்கு காதல் தீர்ந்து போகும் தருணம்! எது தெரியுமா?

மேலும் படிக்க | பெண்களை ஈசியாக ஈர்க்க கொரிய ஆண்கள் செய்யும் விஷயம்! கத்துக்கோங் பாய்ஸ்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News