PUBG புதிய விளையாட்டுக்கு 1 வாரத்தில் 50 லட்சத்திற்கும் அதிகமானவர் பதிவு செய்திருக்கின்றனர்.  வீடியோ கேம் ஆர்வலர்களுக்கு ஒரு நல்ல செய்தி. PUBG New State வீடியோ கேம் விரைவில் இந்தியாவில் தொடங்கப்படலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடங்குவதற்கு முன்பே, இந்த விளையாட்டு பிரபலமாகிவிட்டது. 7 நாட்களில் கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) 50 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பதிவு செய்திருக்கின்றனர்.  


டெல்லி: இந்தியாவில் PUBG விளையாட்டு தடை செய்யப்பட்ட பின்னர் ஏமாற்றமடைந்தவர்களுக்கு, விரைவில் ஒரு நல்ல செய்தி கிடைக்கப் போகிறது. கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) முன் பதிவு தொடங்கியது, அதன் பிரபலமும் அதிகரித்து வருகிறது. எனவே இந்த விளையாட்டு தொடங்குவதற்கு முன்னரே சமூக ஊடகங்களில் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றுவிட்டது.  


Also Read | பிறந்தவீட்டில் இருந்து வழி அனுப்பும்போது அழுதழுது இறந்த மணப்பெண்


கடந்த மாதம் பிப்ரவரி 25 ஆம் தேதி கிராப்டன் (Krafton) நிறுவனம், PUBG New State விளையாட்டை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் iOS ஸ்டோரில் அறிமுகம் செய்தது. வெறும் 7 நாட்களுக்குள், இந்த வீடியோ கேம் உலகம் முழுவதும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு வாரத்தில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கூகிள் பிளே ஸ்டோரில் பதிவு செய்துள்ளனர், பதிவுகள் இன்னும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.  


PUBG New State புகழ் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இது PUBG விளையாட்டு போல வடிவமைக்கப்பட்டுள்ளதே காரணம் என்றும் தெரிகிறது. சிலர் இதற்கு PUBG Mobile 2 என்ற பெயரையும் தருகிறார்கள். புதிய விளையாட்டைப் பயன்படுத்துவதற்கான ஆர்வம் பதிவிலேயே தெரிவதால், இந்த புதிய விளையாட்டு முன்னணியில் இருக்கும் என்று தெரிகிறது. PUBG காதலர்கள் இந்த விளையாட்டை மிகவும் விரும்புகிறார்கள்.


இந்தியாவில் PUBG New State தொடங்கப்படும்
சமீபத்தில், PUBG New State இந்தி ஆடியோ குறியீடு கோப்பும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணப்பட்டது. இது விரைவில் இந்தியாவில் தொடங்கப்படலாம் என்பதை நிரூபிக்கிறது. தற்போது, கிராப்டன் நிறுவனம் இந்தியா, சீனா மற்றும் வியட்நாம் தவிர மற்ற நாடுகளுக்கான புதிய மாநில விளையாட்டுக்கான பதிவைத் திறந்துள்ளது. 


Also Read | வருங்கால வைப்பு நிதியை திரும்பப் பெற விரும்புகிறீர்களா? வழிமுறைகள் இதோ


சமீபத்தில் வெளிவந்த அறிக்கையின்படி, கிராப்டன் / PUBG மொபைல் கார்ப் (PUBG Mobile Corp) தற்போது PUBG Mobile India ஐ மீண்டும் தொடங்க இந்திய அரசு மற்றும் MEITY அதிகாரிகளுடன் பேசி வருகிறது. இந்திய அரசிடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு, இது இந்தியாவில் தொடங்கப்படும். 


கடந்த ஆண்டு நவம்பரில், PUBG மொபைல் இந்தியா இந்தியாவில் மீண்டும் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது, அதன் பிறகு பயனர்கள் இந்த விளையாட்டை விளையாட ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


ALSO READ: IPL 2021 இந்த நகரங்களில்தான் நடக்கும்: BCCI அறிவிப்பால் கடுப்பான அணிகள்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G