Quick South Indian Breakfast Recipes : காலை அவசர அவசரமாக எழுந்து கிளம்பும் போது, எளிதில் விரைவாக செய்யக்கூடிய சில காலை உணவுகளை இங்கு பார்ப்போம்.

Quick South Indian Breakfast Recipes : காலையில் எழுந்ததில் இருந்து, ஓட்டமாய் ஓட வேண்டிய கட்டாயம் நம் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதிலும், கொஞ்சம் தாமதமாக எழுந்து விட்டோம் என்றால் கண்டிப்பாக காலை உணவை பலர் ஸ்கிப் செய்து விடுவர். இதனால், பின்னாளில் பெரும் பிரச்சனை வரலாம். இது போன்ற சமயங்களில்தான், விரைவில் சமைக்க கூடிய ஏதேனும் உணவு இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். அப்படி, 15 நிமிடங்களுக்குள் செய்யக்கூடிய சில உணவுகளை பற்றி இங்கு பார்ப்போம்.
எலுமிச்சை சாதம்:
இதனை ஆங்கிலத்தில் லெமன் ரைஸ் என்பர். கொஞ்சம் புளிப்பு, கொஞ்சம் காரம் நிறைந்த இந்த உணவு தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளுள் ஒன்றாகும். இதற்கு தேவைப்படுவது எல்லாம், பழைய சாதம் அல்லது புதிதாக வடித்த சாதம், எலுமிச்சை சாறு, கடுகு, எண்ணெய், கரிவேப்பிலை, பச்சை மிளகாய், உளுந்து மற்றும் வேர்க்கடலை ஆகியவைதான். வேண்டுமானால் கொஞ்சமாக புளி சேர்த்து கொள்ளலாம். இந்த கலவையை செய்த பிறகு அதனை எடுத்து, சாதத்தில் கலந்தால் டிஃபன் ரெடி.
ரவை உப்மா:
கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிறையும் உணவுகளுள் ஒன்று ரவை உப்மா. இதை செய்ய முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு பொறிந்த பிறகு, வெங்காயம், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, ரவையை போட்டு மெதுவாக கிளரி தண்ணீர் சுண்டியவுடன் கீழே இறக்க வேண்டும்.
ராகி தோசை:
இதனை செய்ய முதலில் ராகி மாவுடன் அரிசி மாவு, தயிர், வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கலக்கி, மாவாக மாற்றிக்கொள்ளவும். இதனை, தோசையாக ஊற்றி சாப்பிடலாம். இது, இரும்புச்சத்து மற்றும் கால்சியச்சத்து ஆகியவை நிறைந்த பிரேக்-ஃபாஸ்ட் ஆகும்.
பொடி இட்லி:
இந்த பெயரை கேட்கும் போதே பலருக்கு நாவில் எச்சில் ஊறும். இட்லியை செய்த பிறகு அதனை வெட்டி, பின்பு அதன் மேல் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து, இட்லி பொடி சேர்த்து, கடாயில் போட்டு வதக்கி, கூடவே கரிவேப்பிலை சேர்த்துக்கொள்ளலாம். வேண்டுமானால் இவை அனைத்தையும் சேர்க்கும் முன்னர் கடுகு போட்டு அதில் தாளித்து கொள்ளலாம்.
காலை உணவை சாப்பிடாததால் என்ன ஆகும்?
பலர், காலை உணவை சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். இது, உங்கள் உடலுக்கு எனர்ஜி கொடுப்பதை தாண்டி உங்களுக்கு ஊட்டச்சத்து கொடுக்கும் உணவாகவும் அமைகிறது. தென்னிந்திய உணவுகள் பல நீங்கள் விரைவில் செய்து முடிக்க கூடியவையாக இருக்கின்றன. காலையில் உணவை ஸ்கிப் செய்யாமல் இருக்க தோசை மாவை அறைத்து வைத்துக்கொள்ளுதல், வீட்டில் ரவை வைத்துகொள்ளுதல் உள்ளிட்டவை முக்கியம். அப்படியில்லை என்றால், கோதுமை மாவு, மில்லட் மாவு ஆகியவற்றையும் வைத்துக்கொள்ளுங்கள். இரவு வடித்த சாதம் மீதம் இருந்தால், அதை தாளித்து சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால், அதனை தண்ணீர் ஊற்றி வைத்து பழைய சாதமாகவும் சாப்பிடலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ