ரயில் டிக்கெட் முன்பதிவு டிரிக்ஸ் : இப்படி கூட ரயில் டிக்கெட் புக் செய்யலாம்..! டிக்கெட் கன்பார்ம் ஆகும்

Train ticket booking Tips : ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, டிக்கெட் கன்பார்ம் ஆக கிடைக்க வேண்டும் என்றால் ஒரு சூப்பரான டிரிக்ஸ் இருக்கிறது. இதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 5, 2025, 02:14 PM IST
  • ரயில் டிக்கெட் முன்பதிவு டிரிக்ஸ்
  • ரயில் டிக்கெட் கன்பார்ம் ஆகும்
  • இந்த வழிகளை பின்பற்றுங்கள்
ரயில் டிக்கெட் முன்பதிவு டிரிக்ஸ் : இப்படி கூட ரயில் டிக்கெட் புக் செய்யலாம்..! டிக்கெட் கன்பார்ம் ஆகும்

train ticket confirmation tips : ரயில் டிக்கெட் முன்பதிவு என்பது மிகவும் எளிமையாகவிட்டது. அதேநேரத்தில் சீட் கிடைப்பது என்பது மிக மிக கடினமாகிவிட்டது. குறிப்பாக திருவிழா காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய, ஆன்லைனில் டிக்கெட் தேடினால் டிக்கெட் கிடைக்கவே கிடைக்காது. எப்போது பார்த்தாலும் வெயிடிங் லிஸ்ட் தான் இருக்கும். இதனால் சிலர் ரயில் டிக்கெட் கிடைக்காது என தாங்களாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள். டிக்கெட்டும் புக் செய்யாமல் பேருந்து மற்றும் டாக்சிகளில் கூடுதல் பணம் கொடுத்து முட்டி மோதி ஊருக்கு செல்வார்கள். குறிப்பாக தென் தமிழ்நாட்டுக்கு செல்லும் ரயில்களில் சென்னை இருந்து டிக்கெட் முன்பதிவு செய்கிறீர்கள் என்றால் டிக்கெட்டே கிடைக்காது.

Add Zee News as a Preferred Source

ஆனால், ஒரு சிலர் இந்த விஷயத்தில் எப்போதும் புத்திசாலித்தனமாக இருப்பார்கள். அவர்கள் மட்டும் எப்போது டிக்கெட் முன்பதிவு செய்தாலும் அவர்களுக்கு டிக்கெட் கிடைத்துவிடும். என்ன மாயமந்திரம் செய்கிறார்கள் அவர்களுக்கு மட்டும் ரயிலில் எப்போது புக் செய்தாலும் டிக்கெட் கிடைக்கிறது என பல நேரங்களில் யோசித்திருப்பீர்கள். அவர்கள் பின்பற்றும் ஒரு டிரிக்ஸை தான் உங்களுக்கு இங்கே சொல்லப்போகிறோம். இந்த வழிமுறை நிச்சயம் உங்களுக்கு ரயில் டிக்கெட்டை பெற்றுக் கொடுக்கும்.

ரயில் டிக்கெட் எப்போது புக் செய்தாலும் குறிப்பாக மிகவும் டிமாண்ட் இருக்கும் சமயங்களில் டிக்கெட் புக் செய்தால், நீங்கள் புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தை மட்டும் தேர்வு செய்து பார்ப்பீர்கள். இது தான் நீங்கள் வழக்கமாக செய்யக்கூடிய ஒன்றாக இருக்கும். ஆனால் இது தான் நீங்கள் செய்யும் தவறும் கூட. ரயில் டிக்கெட் புக் செய்யும்போது ஒரு வசதி இருக்கிறது. அது என்னவென்றால் நீங்கள் புறப்படும் இடத்தில் ஒரு இடத்தை தேர்வு செய்துவிட்டு, ரயிலில் ஏறும் இடம் என்பதை தேர்வுசெய்யலாம். அதாவது, ரயில் புறப்படும் இடத்துக்கு அடுத்த ரயில்வே ஸ்டேஷனை நீங்கள் ரயிலில் ஏறும் இடமாக தேர்வு செய்து கொள்ளலாம்.

சென்னையில் இருந்து ரயில் புறப்படும் என்றால் நீங்கள் ரயில் டிக்கெட்டை சென்னை மற்றும் சேரும் இடத்தை கொடுத்துவிட வேண்டும். ஆனால் நீங்கள் போர்டிங் ஸ்டேஷனாக தாம்பரத்தை கொடுத்து அங்கு நீங்கள் ஏறிக்கொள்ளலாம். உங்களுக்கு டிக்கெட் கட்டணம் சென்னை டூ சேரும் இடத்துக்கு வசூலிக்கப்படும். இது ஒருபெரிய தொகையாக எல்லாம் இருக்கிறது. இப்படிபுக் செய்யும்போது நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு டிக்கெட் எளிதாக கிடைத்துவிடும். அதேபோல் சென்னை டூ திருநெல்வேலி செல்லும் ரயில் என்றால், நீங்கள் திருச்சியில் இறங்க வேண்டும் என்றாலும், டிக்கெட் புக் செய்யும்போது சென்னை டூ திருநெல்வேலி என முழுவதுமாக புக் செய்து கொள்ளுங்கள். அப்போது உங்களுக்கு ரயில் டிக்கெட் கன்பார்ம் ஆக கிடைக்க வாய்ப்புள்ளது.

இடையில் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இறங்கிக் கொள்ளலாம். அது உங்கள் விருப்பம். வட இந்தியாவில் இருந்து வரும் ரயில் என்றால், சென்னை முன்பாக இருக்கும் ரயில் நிலையத்தைகூட தேர்வு செய்து நீங்கள் புக் செய்து கொள்ளலாம். அப்போது, டிக்கெட் ஈஸியாக கிடைக்கும். அதாவது எப்போது ரயில் டிக்கெட் புக் செய்தாலும் அருகில் இருக்கும் பெரிய ரயில்வே ஸ்டேஷன் அல்லது அதற்கு முன்பாக இருக்கும் ரயில்வே ஸ்டேஷன், அதேபோல் நீங்கள் இறங்கும் ரயில்வே ஸ்டேஷன் அல்லது அதற்கு அடுத்தபடியாக இருக்கும் பெரிய ரயில்வே ஸ்டேஷனை தேர்வு செய்து ரயில் டிக்கெட் புக் செய்யுங்கள். சிறிய தொகை கூடுதலாக செலவாகும் என்றாலும் கன்பார்ம் டிக்கெட் கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. பேருந்துக்கு செலவு செய்யும் பணத்தை விட குறைவாக ரயில் டிக்கெட்டுக்கு செலவு செய்து நீங்கள் சென்று சேரும் இடத்துக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் சென்று சேரலாம். 

மேலும் படிக்க | Rules Change | இந்திய ரயில்வே முக்கிய அப்டேட்! தட்கல் முறையில் அதிரடி மாற்றம்!

மேலும் படிக்க | இனி தட்கல் டிக்கெட் டக்குனு எடுக்கலாம்; எல்லா ரயில் சேவைகளுக்கும் இந்த செயலி போதும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News