RailOne APP: இந்திய ரயில்வே, அனைத்து அத்தியாவசிய ரயில் சேவைகளையும் ஒரே இடத்தில் இணைக்கும் புத்தம் புதிய RailOne என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய ரயில்வே, அனைத்து அத்தியாவசிய ரயில் சேவைகளையும் ஒரே இடத்தில் இணைக்கும் புத்தம் புதிய மொபைல் செயலியான RailOne செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. ரயில்வே தகவல் அமைப்புகள் மையத்தால் (CRIS) உருவாக்கப்பட்ட இந்த செயலி, நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான பயணிகளுக்கு சிறந்த ரயில் பயண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
RailOne என்றால் என்ன?
RailOne என்பது டிக்கெட் முன்பதிவு, நேரடி ரயில் புதுப்பிப்புகள், உணவு ஆர்டர் செய்தல் மற்றும் புகார் பதிவு போன்ற பல ரயில் சேவைகளை இணைக்கும் ஒன் ஸ்டாப் தீர்வாகும். பல்வேறு செயலிகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பயணிகள் இப்போது எல்லாவற்றிற்கும் RailOne செயலியை பயன்படுத்தலாம். IRCTC Rail Connect, UTSonMobile, Rail Madad, NTES மற்றும் Food on Track ஆகியவற்றின் ஒருங்கிணைத்து ஒரே செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்
அனைத்து வகையான டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்யலாம்
ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு, RailOne செயலியில் உள்ள “Plan My Journey” என்பதை கிளிக் செய்வதன் மூலம் அனைத்து வகையான ரயில்களிலும் மிக எளிதாக முன்பதிவு செய்யலாம்.
உங்கள் முன்பதிவு விபரங்களை காணலாம்
“My Bookings” பிரிவு உங்கள் முழு பயண வரலாற்றையும் காட்டுகிறது..
தனிப்பயனாக்கப்பட்ட சுயவிவரக் கட்டுப்பாடு
“You” தாவலில், பயனர்கள் தங்கள் சுயவிவரத்தை நிர்வகிக்கலாம், கடவுச்சொற்களை மாற்றலாம், பயோமெட்ரிக்ஸை ஆக்டிவேட் செய்யலாம் அல்லது தங்கள் கணக்கை நீக்கலாம். இது R-Wallet ஐ நிரப்பவும் அனுமதிக்கிறது.
நிகழ்நேர ரயில் கண்காணிப்பு
நிகழ்நேர ரயில் நிலை, தாமதங்கள் மற்றும் பிளாட்ஃபார்ம் எண்களைச் சரிபார்க்கவும் இது உதவும். இதன் மூலம் ரயிலின் நிலையை அறிந்து அதற்கு ஏற்அ திட்டமிடலாம்.
உங்கள் ரயில் பெட்டியின் நிலையை அறிந்து கொள்ளலாம்
ரயில் வருவதற்கு முன்பு உங்கள் ரயில் பெட்டியை பிளாட்ஃபார்மில் எந்த இடத்திற்கு சரியாக வரும் கண்டுபிடிக்க Coach Position Finder என்ற அம்சத்தை பயன்படுத்தவும்.
உங்கள் இருக்கையிலிருந்து உணவை ஆர்டர் செய்யலாம்
ரயில்வேயுடன் ஒப்பந்தம் செய்துள்ள உணவு விற்பனையாளர்களிடம் உங்களுக்கு தேவையான உணவை செயலி மூலம் ஆர்டர் செய்யலாம்.
புகார் சமர்பித்தல் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல்
ரயில் மதத் மூலம் புகார்களைச் சமர்ப்பித்து அவற்றின் நிலையைக் கண்காணிக்கவும். ரத்து செய்யப்பட்ட அல்லது தவறவிட்ட ரயில்களுக்கான பணத்தைத் திரும்பப் பெறுவதையும் நீங்கள் தொடங்கலாம் மற்றும் பின்தொடரலாம்.
பன்மொழி பயன்பாடு மற்றும் பாதுகாப்பான செயலி
செயலில் பல இந்திய மொழிகளை ஆதரிக்கிறது மற்றும் பயோமெட்ரிக் அல்லது mPIN உள்நுழைவுடன் R-Wallet வழியாக பாதுகாப்பான முறையில் கட்டணங்களை செலுத்தலாம்.
RailOne செயலியை எவ்வாறு பதிவிறக்குவது?
RailOne-ஐ Android (Google Play Store) மற்றும் iOS (Apple App Store) ஆகியவற்றில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம். நீங்கள் ரயிலில் பயணம் செய்தால், இந்த ஆல்-இன்-ஒன் செயலி உங்கள் புதிய பயணத் துணையாக இருக்கும் என்றால் மிகையில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ