Ramadan 2025 Gift Ideas : ரமலான் நோன்பு: 29 முதல் 30 நாட்களுக்கு இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து அதற்கு பின்பு தெரியும் பிறை நாளை ரமலான் தினமாக கொண்டாடுகின்றனர். இந்த 30 நாட்களுக்கு அவர்கள் கட்டுக்கோப்பாக நோன்பு இருந்து குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் உணவு உண்டு, பிற வேளைகளில் தண்ணீர் கூட குடிக்காமல் இருப்பர். அது மட்டுமின்றி மது குடிப்பதையோ, சிகரெட், பீடி புகைப்பதையோ தவிர்ப்பர். மேலும், உடலுறவு வைத்துக் கொள்வதையும் தவிர்ப்பர்
ரம்ஜான் தினம் விரைவில் கொண்டாடப்பட இருக்கிறது. இஸ்லாமியர்களின் இந்த பண்டிகையை இந்துக்களும் சேர்ந்து கொண்டாடுவர். இந்தியாவைப் பொறுத்தவரை, குறிப்பாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்துக்களும் இஸ்லாமியர்களும் நல்ல நட்புறவில் இருக்கின்றனர். தீபாவளி, பொங்கல் பண்டிகை என்றால் பல இனிப்பு பலகாரங்கள் இந்துக்களின் வீட்டிலிருந்து இஸ்லாமியர்களின் வீட்டுக்கு செல்வதும், ரம்ஜான் தினம் வந்தால் பிரியாணி, பிரட் அல்வா உள்ளிட்டதை இந்துக்களின் வீட்டுக்கு செல்வதும் வழக்கம். இப்படி பிரியாணியை மட்டும் வாங்கிக்கொன்டு சும்மா இருந்தால் எப்படி? உங்கள் இஸ்லாமிய நண்பருக்கு ஏதேனும் பரிசு வாங்கி தர வேண்டாமா? உங்கள் பட்ஜெட்டுக்குள் என்னென்ன பரிசுகள் வாங்கி கொடுக்கலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.
பேரிச்சம்பழம்:
ரம்ஜான் மாதத்தில் நோன்பு திறக்கும் வேளையில் இஸ்லாமியர்கள் உட்கொள்ளும் ஒரு முக்கிய உணவு பேரிச்சம்பழமாகும். எனவே இந்த, ரம்ஜான் பண்டிகைக்கு அவர்களுக்கு ஒரு நேச்சுரல் பேரீச்சம் பழ பாக்கெட்டை வாங்கி கொடுக்கலாம். இது அர்த்தமுள்ளதாகவும் உங்கள் பட்ஜெட்டுக்குள் அடங்கும் கிப்டாகவும் இருக்கும்.
தொழுகை செய்யும் மேட்:
பெரும்பாலான இஸ்லாமியர்கள் தொழுகை செய்யவும் தவற மாட்டார்கள். ஐந்து வேளை தொழுகை செய்யும் உங்கள் இஸ்லாமிய நண்பருக்கு ஒரு நல்ல பிரேயர் மேட் வாங்கி கொடுக்கலாம். மிருதுவாகவும், அவர்களுக்கு பிடித்த கலரிலும் அது இருந்தால் இன்னும் ஏற்புடையது. இது அவர்களுக்கு பர்சனலாக பிடித்ததாகவும் இருக்கும்.
குர்ஆன் ஸ்டாண்ட்:
மிகுந்த மத நம்பிக்கை கொண்ட இஸ்லாமிய நண்பராக இருந்தால் அவருக்கு கூடவே எடுத்துச் செல்லும் வகையில் ஒரு சின்ன குர்ஆனை வாங்கி கொடுக்கலாம். அப்படி இல்லை என்றால் ஓதுவதற்கு எளிதாக குர்ஆன் ஸ்டான்ட் வாங்கி கொடுக்கலாம். அவர்களின் மதத்தை பறைசாற்றும் வேறு சில புத்தகங்களையும் வாங்கி தரலாம்.
ரமலான் விளக்கு:
பெரும்பாலானோர் ரமலான் மாதத்தில், Lantern விளக்குகளை பிறருக்கு பரிசாக கொடுப்பர். உங்கள் பட்ஜெட்டுக்குள் வரும் அதற்கேற்றவாறான விளக்குகளை நீங்கள் வாங்கிக் கொடுக்கலாம். மரத்தால் அல்லது இரும்பால் ஆனவை இதற்கு ஏற்புடையதாக இருக்கும். இந்த பரிசை கொடுத்தால் அவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் அமையும்.
ஆடைகள்:
உங்கள் நண்பருக்கு ஆடைகளை பரிசாக வழங்க நினைத்தால் அதையும் தாராளமாக செய்யலாம். அவர்களின் உடல் அளவை தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்ற, அவர்களுக்கு பிடித்த பரிசு பொருளை வாங்கித்தரலாம். இதனால், அவர்கள் அதனை ரமலான் திருநாளிலும் அதனை உடுத்திக்க்கொள்ளலாம்,
மேலும் படிக்க | தீபாவளி கிஃப்ட் ஐடியாக்கள்! பட்ஜெட்டுக்குள் வரும் 5 நல்ல பரிசுகள்!
மேலும் படிக்க | காதலர் தினத்திற்கு என்ன பரிசு கொடுக்கலாம்? ஆச்சர்யப்படுத்த சில ஐடியாகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









