ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம்... உடனே e-KYC நடைமுறையை முடிச்சுடுங்க

மத்திய அரசு தற்போது  ரேஷன் அட்டைதாரர்களுக்கு e-KYC நடைமுறையை கட்டாயமாக்கியுள்ளது. e-KYC நடைமுறையை பூர்த்தி செய்யாத ரேஷன் அட்டைகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 10, 2025, 02:42 PM IST
  • ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம் அல்லது ரேஷன் பொருட்கள் பெற முடியாமல் போகலாம்.
  • ரேஷன் விநியோக முறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர e-KYC நடைமுறை அவசியமாகிறது.
  • e-KYC நடைமுறையை நிறைவு செய்வதற்கான கடைசி தேதி.
ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம்... உடனே e-KYC நடைமுறையை முடிச்சுடுங்க

மத்திய அரசின் பொது விநியோகத்திட்டத்தின் (PDS) மூலம், ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, கடலை பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்கள் கிடைக்கின்றன. இந்த சேவையை பெற சில முக்கிய நிபந்தனைகள் உள்ளன. அந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறினால், ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம் அல்லது ரேஷன் பொருட்கள் பெற முடியாமல் போகலாம். 

Add Zee News as a Preferred Source

e-KYC நடைமுறை

மத்திய அரசு தற்போது  ரேஷன் அட்டைதாரர்களுக்கு e-KYC (Electronic Know Your Customer) நடைமுறையை கட்டாயமாக்கியுள்ளது. e-KYC நடைமுறையை பூர்த்தி செய்யாத ரேஷன் அட்டைகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரேஷன் அட்டையில் கிடைக்கு சேவைகள் நிறுத்தப்படும். 

e-KYC ஏன் அவசியம்?

தவறான முறையில் ரேஷன் பொருட்களை வாங்குபவர்களை, அதாவது போலி ரேஷன் அட்டைதாரர்களை, அடையாளம் கண்டு, ரேஷன் விநியோக முறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர e-KYC நடைமுறை அவசியமாகிறது. இதனுடன், தவறான வழிகளில் இலவச ரேஷனைப் பெறுபவர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என்றும், ரேஷனின் கள்ளச் சந்தைப்படுத்தல் நிறுத்தப்படும் என்றும் மத்திய அரசாங்கம் நம்புகிறது.

e-KYC நடைமுறையை நிறைவு செய்வதற்கான கடைசி தேதி

ரேஷன் கார்டின் e-KYC-க்கான கடைசி தேதியை ஜூன் 30 வரை அரசாங்கம் நீட்டித்துள்ளது. இன்னும் e-KYC சரிபார்க்கவில்லை என்றால், உங்கள் கார்டு ரத்து செய்யப்படலாம். இந்த முக்கியமான வேலையை சில நிமிடங்களில் வீட்டில் இருந்த படியே செய்து முடிக்கலாம்.

e-KYC நடைமுறையை நிறைவு செய்வதற்கான வழிமுறைகள்

வீட்டில் அமர்ந்தபடியே உங்கள் தொலைபேசி மூலம் KYC நடைமுறையை நிறைவு செய்யலாம். ரேஷன் கார்டின் e-KYC படிவத்தை எளிய வழிமுறைகளில் எவ்வாறு நிரப்புவது என்பதை இங்கே அறிந்து கொள்ளலாம்.

1. முதலில் உங்கள் தொலைபேசியில் மேரா eKYC விண்ணப்பத்தையும் AadharFaceRD-யையும் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

2.  உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து இருப்பிடத்தை உள்ளிட்டு சரிபார்க்க வேண்டும்.

3. பின்னர் நீங்கள் மேரா eKYC செயலியில் உங்கள் ரேஷன் கார்டில் உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.

4. உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.

5. நீங்கள் அந்த OTP எண்ணை செயலியில் உள்ளிட வேண்டும்.

6. பின்னர் நீங்கள் முகத்தை வெரிஃபை செய்ய வேண்டும். முக ஸ்கேனிங்கிற்கு செல்ஃபி கேமராவைப் பயன்படுத்தி முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டும்.

7. அதன் பிறகு உங்கள் சரிபார்ப்பு நடவடிக்கை நிறைவடையும்.

8. ரேஷன் கார்டில் பெயரிடப்பட்ட ஒவ்வொரு உறுப்பினரையும் நீங்கள் வெரிஃபை செய்ய  வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இல்லையெனில் அவரது பெயர் ரேஷன் கார்டிலிருந்து நீக்கப்படும்.

ஆன்லைனில் சரிபார்க்க இயலாதவர்கள் செய்ய வேண்டியது என்ன

ஆன்லைனில் சரிபார்ப்பு மற்றும் OTP பெறுவதில் சிக்கல் இருந்தால், உங்கள் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் அட்டையுடன் உங்கள் அருகிலுள்ள அரசு ரேஷன் கடைக்குச் செல்லலாம். அங்கு கடைக்காரர் உங்கள் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு எண்ணை உள்ளிட்டு உங்கள் பயோமெட்ரிக்ஸ் தகவல் மூலம் உங்கள் KYC நடைமுறையை நிறைவு செய்வார்.

மேலும் படிக்க | ரேஷன் கார்டு : சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு - தேதியை குறிச்சு வச்சுக்கோங்க..!!

மேலும் படிக்க |  உங்கள் ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்! இனி வீட்டிற்கே தேடி வரும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News