)
Reason Why Number 13 Is Bad Luck : ‘யாவரும் நலம்’ திரைப்படத்தில் “இந்த வீடே அமானுஷ்யமானது சார், நம்பர பாருங்க, 13” என்று ஒரு டைலாக் வரும். இது மட்டுமல்ல, 13ஆம் நம்பர் வீடு என்ற பெயரில் பேய் படம் ஒன்று கூட இருக்கிறது. ஆங்கிலத்திலும் இதை வைத்து சில படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. புதிதாக வீடு பார்க்க செல்பவர்கள் கூட, அது 13ஆம் எண் பொருந்திய வீடாக இருந்தால் வேண்டவே வேண்டாம் என்று கூறிவிடுவர். இதனாலேயே பலர் இந்த எண்ணை அதிர்ஷ்டமற்ற எண்ணாகவும் பார்ப்பதுண்டு. இப்படி, 13ஆம் எண் மட்டும் அமானுஷ்யத்துடன் தொடர்பு படுத்து பார்க்கப்படுவது ஏன்?
மத ரீதியான நம்பிக்கைகள்:
கிறிஸ்தவ மதத்தில், குறிப்பாக 13ஆம் எண்ணை அமானுஷ்யம் நிறைந்த எண்ணாகவும் அதிர்ஷ்டம் அற்ற எண்ணாகவும் பார்க்கின்றனர். காரணம், இயேசுவின் கடைசி விருந்து என சொல்லப்படும் Last supper-க்கு சென்றது 13 பேர். அதில், இயேசுவை கொலை செய்த ஜூடஸ் 13வது ஆளாக சென்றடைந்தான்.
இதே போல, நார்ஸ் புராணங்களிலும் தந்திர கடவுளான லோகி, விருந்தில் 13வது ஆளாக கல்ந்து கொண்டான். இவன்தான், அவர்களின் கடவுள் பால்டரின் இறப்பிற்கும் காரணமாக இருந்ததாக குறப்பட்டுள்ளது. இப்படி மத ரீதியான கதைகளினால் 13ஆம் எண் அதிர்ஷ்டமற்றதாக நம்பப்படுகிறது.
எண் கணிதம்:
எண் கணிதத்தின் படியும், 12 என்கிற எண் முழுமை பெற்ற எண்ணாக கருதப்படுகிறது. 12 மாதங்கள், 12 ராசிகள், 12 மணி நேர கடிகாரம், ஒலிம்பஸ்ஸில் 12 கடவுள்கள் என ஆனைத்தும் இதை குறிக்கின்றன. ஆனால், 13ஆம் எண்ணை வைத்து அப்படி எதுவும் இல்லை. 13 என்பது முழுமை எண்ணை தாண்டிச் செல்கிறது, எனவே அது ஒழுங்கற்றதாக, சமநிலையற்றதாக அல்லது "தவறானது" என்று பார்க்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை 13 ஆம் தேதி:
வெள்ளிக்கிழமை + 13 என்ற எண்களின் சேர்க்கை மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று கருதப்படுகிறது. 1907 ஆம் ஆண்டு தாமஸ் W. லாசன் எழுதிய "வெள்ளிக்கிழமை, 13" நாவலுக்குப் பிறகு இந்த மூடநம்பிக்கை இன்னும் பரவலாக மாறியது.
இந்த யோசனை பிரபலமான கலாச்சாரத்தில் சிக்கி, பயத்திற்கும் "ட்ரிஸ்கைடேகாபோபியா" (13 என்ற எண்ணின் பயம்) என்ற பயத்திற்கும் வழிவகுத்தது.
கலாச்சார தவிர்ப்பு:
பல கட்டிடங்கள் 13வது தளத்தைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக 14 என்று பெயரிடுகின்றன. சில விமான நிறுவனங்கள் 13வது வரிசையைத் தவிர்க்கின்றன, மேலும் சில நகரங்களில், 13வது எண் கொண்ட வீட்டைக் காணவே முடியாது. இப்படிப்பட்ட கலாச்சார தவிர்ப்புகளாலும் 13ஆம் எண் மீது ஒரு வித “அதிர்ஷ்டமற்றது” என்கிற நம்பிக்கை பிறக்கிறது.
வரலாற்று நிகழ்வுகள்:
வரலாற்றில் கருப்பு சுவடாக இருக்கும் சில நிகழ்வுகள், 13ஆம் தேதி நடந்ததாக இருக்கின்றன. கான்ஸாசில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு, போர் ஆரம்பித்த சில தேதிகள் என பல 13ஆம் தேதியுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன.
உளவியல் ரீதியான நம்பிக்கை:
இப்படி, ஆரம்பத்தில் இருந்தே பலருக்கு 13 எண்ணின் மீது ஒரு வித பயம் அல்லது அதிர்ஷ்டமற்ற உணர்வு ஏற்படுகிறது.இது பெரும்பாலும் ஒரு சுயநிறைவான நம்பிக்கையாகும் - மக்கள் 13 ஆம் தேதி கெட்ட விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள், அதனால் அவர்கள் அந்த நாளில் நடக்கும் கெட்ட விஷயங்களுக்காக, அந்த எண்ணை குறை கூறுகிறார்கள்.
எண். 13 வீட்டில் இருந்தால் என்ன நடக்கும்?
13ஆம் எண்ணுக்கும் அதிர்ஷ்டமின்மைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும், அதை நம்புபவர்கள் அந்த எண் கொண்ட வீட்டில் தங்கி இருப்பதால் சில பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதற்கு ஆங்கிலத்தில் placebo effect என்ற பெயர் உண்டு. சிலருக்கு இதனால் வாழ்வில் தோல்வி ஏற்படலாம், உணர்ச்சி ரீதியாக ஏதேனும் பிரச்சனை ஏற்படலாம். வாஸ்து முறைப்படி கூட இந்த எண் கொண்ட வீடு எதிர்மறை ஆற்றல்கள் கொண்டதாக இருக்கும் என்று கூறுகின்றனர். ஆனால், இது அனைவருக்கும் பொருந்தக்கூடியது அல்ல.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ