தலையில் தினமும் எண்ணெய் வைக்கலாமா? அப்படி வைத்தால் முடி வளருமா?

Reasons Why You Should Not Apply Hair Oil Daily : அனைவரும் தற்போது சந்தித்து வரும் ஒரு பிரச்சனை, முடியுதிர்வு. இதை தடுக்க தலையில் எண்ணெய் வைக்கலாம். ஆனால், அதுவும் எத்தனை நாளுக்கு ஒரு முறை வைக்க வேண்டும் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Mar 3, 2025, 02:04 PM IST
  • தினமும் தலைக்கு எண்ணெய் தேய்க்கலாமா?
  • அப்படி தேய்ப்பதால் என்ன ஆகும்?
  • முடி வளர டிப்ஸ்!
தலையில் தினமும் எண்ணெய் வைக்கலாமா? அப்படி வைத்தால் முடி வளருமா?

Reasons Why You Should Not Apply Hair Oil Daily : இன்றைய இளைஞர்களிலிருந்து வயதானவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் ஒரு விஷயம் முடி உதிர்வு. இதற்கு நம் உணவு பழக்கங்களும், வாழ்வியல் சூழல்களும் காரணமாக இருக்கலாம். சில சமயங்களில் நம்மை சுற்றி இருக்கும் காற்று மாசு கூட இதற்கு காரணமாக ஆகிவிடுகிறது. இவை மட்டுமின்றி மன அழுத்தம், தூக்கமே போன்ற பிரச்சனைகளும் இதற்கு காரணமாக உள்ளன. இதை தவிர்க்க ஒவ்வொரு நாளும் நாம் கவனத்துடன் சில விஷயங்களை கையாள வேண்டி உள்ளது. அப்படி சரியாக முடியை பராமரிக்கவில்லை என்றால் அவை எளிதில் உதிர நேரிடும்.

Add Zee News as a Preferred Source

பலர் முடி வளரவில்லை என்றால் அதற்கு தான் தலையில் எண்ணெய் வைக்காதது தான் காரணம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அது அனைத்து சமயங்களிலும் உண்மையாக இருந்து விடுவதில்லை. நமக்கு பொடுகு தொல்லை வரக்கூட தலையில் எண்ணெய் வைப்பது காரணமாகிவிடும். எனவே எத்தனை நாளுக்கு ஒருமுறை என்னை வைக்க வேண்டும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம். 

வறண்ட முடி கொண்டவர்கள்..

சிலருக்கு முடி அனைவரையும் போல சாஃப்ட்டாக இல்லாமல் வறண்டு போய் இருக்கும். அவர்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தலையில் எண்ணெய் வைக்கலாம். இது வறண்ட கூந்தலை சரி செய்வதோடு, முடி நன்றாக வளரும் உதவும் என கூறப்படுகிறது. 

எத்தனை மணி நேரம் எண்ணெய் வைக்க வேண்டும்?

எண்ணெய் வைத்து சில மணி நேரங்கள் அல்லது ஒரு இரவு கழிந்தால் போதுமானது. அதன் பிறகு தலைக்கு நீங்கள் எப்போதும் போடும் உங்கள் முடிக்கு ஏதுவான ஷாம்புவை வைத்து தலையை அலசலாம். 

எண்ணெய் படிந்த கூந்தலுக்கு..

சிலருக்கு தலையில் எண்ணெய் வைக்காமலேயே கூட எண்ணெய் வைத்தது போல இருக்கும். அப்படிப்பட்ட கேசன் கொண்டவர்கள் ஒரு வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை தலையில் எண்ணெய் வைக்கலாம். தினமும் தலையில் எண்ணெய் வைப்பதால் அழுக்கு படிவதோடு, பொடுகும் அதிகமாகலாம். தலையும் தொட்டுப் பார்க்கும்போது பிசுபிசுப்பாக இருக்கலாம். எனவே அடிக்கடி எண்ணெய் வைப்பதை தவிர்க்கவும்.

எப்படி எண்ணெய் வைக்க வேண்டும்?

முடி வளர எண்ணெய் வைக்க வேண்டும் என நினைத்தால், அதற்கு தனியாக வழிமுறை இருக்கிறது. எண்ணெய் வைக்கும் போது மசாஜ் செய்தவாறு வைக்க வேண்டும். இப்படி உச்சந்தலையில் மசாஜ் செய்தவாறு வாரத்திற்கு 2-3 முறை எண்ணெய் வைக்க வேண்டும்.

மசாஜ் செய்ய லைட் வெயிட்டாக இருக்கும் எண்ணெய்களை பயன்படுத்தவும். தேங்காய் எண்ணெய் அல்லது ஆல்மண்ட் எண்ணெய் இதற்கு சரியான தீர்வாக இருக்கும். முடிக்கும் ஊட்டமளிக்கும்.

யாரெல்லாம் தினமும் எண்ணெய் வைக்க கூடாது? 

எண்ணெய் தலையுடன் இருப்பவர்கள் அடிக்கடி என்னை வைத்தால் பொடுகு வரும். 

தலையில் அதிகமாக வியர்வை விட்டால் தினமும் எண்ணெய் வைப்பது தவிர்க்கவும். 

அதிக காற்று மாசுபடுந்த இடங்களில் இருப்பவர்கள் அடிக்கடி எண்ணெய் வைப்பதை தவிர்க்கவும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பெண்கள் இந்த தினத்தில் தலைக்கு எண்ணெய் வைப்பது வீட்டிற்கு நல்லது இல்லை!

மேலும் படிக்க | இரவு நேரத்தில் முடிக்கு எண்ணெய் தேய்ப்பது நல்லதா? இல்லை கெட்டதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News