சுவையான மசாலா டீ ரெடிமிக்ஸ்... வீட்டிலேயே தயாரிக்கலாம்... எளிய ரெசிபி இதோ

டீ தயாரிப்பது பெரிய வேலை இல்லை என்றாலும், ரெடிமிக்ஸ் இருந்தால் சௌகரியமாகத்தான் இருக்கும். சட்டு என்று வெந்நீரில் கலந்து உடனடியாக குடித்து விடலாம். கடையில் வாங்கும் ரெடி மிக்ஸ் விலை அதிகமாக உள்ள நிலையில், வீட்டிலேயே எளிதாக தயாரித்துவிடலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 13, 2025, 02:06 PM IST
  • மசாலா டீ ரெடி மிக்ஸ் தயாரிக்க தேவையான பொருட்கள்
  • கடையில் வாங்கும் ரெடி மிக்ஸ் விலை அதிகமாக உள்ளது.
  • மசாலா டீ ரெடி மிக்ஸ் தயாரிக்கும் முறை.
சுவையான மசாலா டீ ரெடிமிக்ஸ்... வீட்டிலேயே தயாரிக்கலாம்... எளிய ரெசிபி இதோ

சமைக்கும் வேலையை எளிதாக்க பலவகை பிரீமெக்ஸ் அல்லது ரெடிமிக்ஸ் உணவு வகைகள் சந்தைக்கு வந்து விட்டன. இவை, வேலைக்கு செல்பவர்கள், ஹாஸ்டலில் வசிக்கும் மாணவர்கள், பேச்சுலர்கள் என பலருக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றன. அந்த வகையில் இன்று குறைந்த செலவில் மசாலா டீ ரெடி மிக்ஸ் தயாரிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.

டீ தயாரிப்பது பெரிய வேலை இல்லை என்றாலும், ரெடிமிக்ஸ் இருந்தால் சௌகரியமாகத்தான் இருக்கும். சட்டு என்று வெந்நீரில் கலந்து உடனடியாக குடித்து விடலாம். கடையில் வாங்கும் ரெடி மிக்ஸ் விலை அதிகமாக உள்ள நிலையில், வீட்டிலேயே எளிதாக தயாரித்துவிடலாம்.

மசாலா டீ ரெடி மிக்ஸ் தயாரிக்க தேவையான பொருட்கள்

பால் பவுடர் -  1 ½ கப்

டீ தூள் - 3/4 கப்

சர்க்கரை - 3/4 கப்

ஏலக்காய்  - 10 முதல் 12 வரை

இலவங்கப்பட்டை - மூன்று துண்டுகள்

சுக்கு பொடி - ஒரு ஸ்பூன்

கிராம்பு 10 முதல் 12 வரை

மசாலா டீ ரெடி மிக்ஸ் தயாரிக்கும் முறை

மிக்ஸி ஜாரில் முதலில், மசாலாக்களான ஏலக்காய், லவங்க பட்டை, கிராம்பு ஆகியவற்றை சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதில் டீ தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதில் சுக்கு பொடியையும் சேர்க்கவும். பின்னர் இந்த கலவையை மாவு சல்லடையில் சலித்து எடுத்துக் கொள்ளவும். பின் இதனை பால் பவுடருடன் கலக்கவும். இப்போது சுவையான மசாலா டீ ரெடி மிக்ஸ் தயார்.

தயாரித்த இந்த பவுடரை காற்று புகாத பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டால், தேவைப்படும் போது ஒரு ஸ்பூன் எடுத்து, டீ கப்பில் போட்டுக் கொண்டு, நன்கு கொதிக்கும் வெந்நீரை ஊற்றினால், சுவையான மசாலா டீ தயாராகிவிடும். விலை அதிகமான பிராண்டட் ரெடிமிக்ஸ் டீ வாங்க வேண்டியது இல்லை. டீ குடிக்க நினைக்கும் போது, பாலை காய்ச்சி, டீ தூள் சேர்த்து, மசாலா சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்க வேண்டிய அவசியம் இல்லாமல், சட்டு என்று தயார் செய்து குடித்து விடலாம்.

மசாலா டீ தயாரிக்க நாம் சேர்க்கும் மசாலா பொருட்கள் அனைத்துமே, எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது என்பதை மறுக்க இயலாது.

மேலும் படிக்க | கொத்தமல்லி நீண்ட நாட்கள் வாடாமல் அழுகாமல் இருக்க... சில டிப்ஸ்

மேலும் படிக்க |  மூட்டு வலி முதல் முதல் கொலஸ்ட்ரால் வரை... சுவையான பீட்ரூட் ராகி மில்க் ஷேக்... ரெசிபி இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News