எப்பேற்பட்ட காதலா இருந்தாலும் இந்த 1 விஷயம் இருந்தா எல்லாம் காலி!! என்ன தெரியுமா?
Relationship Tips To Save Your Love And Marriage Life : பலர், பிரேக்-அப் ஆன பிறகு தங்கள் காதல் தோற்றது ஏன் என்பது குறித்து நினைத்து மண்டையை குழப்பிக்கொள்வர். அதற்கு காரணமாக இருக்கும் 1 விஷயம் குறித்து இங்கு பார்ப்போம்.
Relationship Tips To Save Your Love And Marriage Life : காதல் என்பது, ஒரு உலக மொழியாகும். இந்த மொழி, நாட்டிற்கு நாடு அல்லது ஊருக்கு ஊர் மாறுமே அன்றி, காதல் மொழி என்பது மாறவே மாறாது. மனிதர்கள் அனைவருமே காதலிக்க தகுதியானவர்கள்தான். இந்த காதல் வரும் சுவடே தெரியாது. ஆனால் செல்கையில், மனதை பிய்த்து எடுத்துக்கொண்டு சென்றுவிடும். இது கொடுக்கும் வலியும் ரணமும் மா(ஆ)றாத சுவடாகிப்போய்விடும். ஒரு உறவு, பல ஆண்டுகளை கடந்து ஒரு உறவு அழிந்து போவதற்கு காரணமாக இருப்பது ஒன்றே ஒன்றுதான் என்று கூறுகின்றனர், காதல் வல்லுனர்கள். அது என்ன தெரியுமா?
அந்த காரணம்..
காதலித்த ஒருவர் மேல் நமக்கு வெறுப்புணர்வு உண்டாவதற்கும், ரொம்ப பிடித்த ஒருவரை பிடிக்காமல் போவதற்கும் காரணம் எது தெரியுமா? அவர்கள் மீதுள்ள வெறுப்பை நாம் அப்படியே பிடித்துக்கொண்டிருப்பதுதான். இது காதல் உறவில் மட்டுமல்ல, பெற்றொருக்கும் பிள்ளைக்குமான உறவிலும் இருக்கலாம், உடன் பிறந்தவர்களுடன் இருக்கும் உறவாக இருக்கலாம்.
எந்த உறவாக இருப்பினும், எதிரில் இருக்கும் நபர் செய்த தவறை மறக்காமல் அப்படியே மனதில் வைத்துக்கொண்டு அதை வளர விடுவது நமக்குள் பெரிய வடுக்களை ஏற்படுத்தி விடலாம். இதனால் உங்கள் உறவு உங்களுக்கே கசப்பாக மாறுவதுடன் ஒரு வித வெறுப்புணர்வையும் கிளப்பி விட்டுவிடும். ஒரு சிறு கோபமாக உருவெடுக்கும் இது, பின்னாளில் வெறுப்பாக மாறிவிடும். இது போன்ற எதிர்மறை உணர்வுகள் உங்கள் உறவையே கெடுத்துவிடும்.
பழைய விஷயங்களை மறக்காமல் அதையே பிடித்து வைத்திருக்கும் போது நாமே நம்மை மன ரீதியாக துன்புறுத்திக்கொள்கிறோம் என அர்த்தம். மனிதர்கள் ஒரு உறவில் இருக்கும் போது அந்த உறவில் சண்டையும் சச்சரவுகளும் வருவது இயல்பு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். சண்டை ஏற்படும் போது, இருவரது கருத்தும் ஒத்துப்போகவில்லை என்றால் அதை பேசித்தீர்க்க வேண்டும், அல்லது அந்த கருத்துகள் வேறாக இருந்தாலும் அதற்கு மதிப்பு கொடுத்து விலகிவிட வேண்டும். அப்படி இல்லை என்றால் தேவையற்ற வெறுப்புணர்வுதான் வளரும்.
இதற்கான காரணங்கள்:
கோபம், சோகம், குழப்பம் போன்ற நெகடிவான உணர்வுகள் நம் மனதில் மிக சுலபமாக குடிகொண்டு விடும். இதனால் வெறுப்புணர்வும் வெகு சுலபமாக வந்து விடும். இதனால் நமக்கு மன்னித்து மறக்கும் குணமும் வராமல் போய் விடும்.
இதனால் உறவில் வரும் பாதிப்புகள்!
வெறுப்புணர்வை மனதில் வைத்து வளர்த்து, அது குறித்து பேசாமலே இருந்தால் இது வளர்ந்து அந்த உறவில் பெரிய பாதிப்பினை உண்டாக்கலாம். இப்படி வெறுப்புணர்வை மனதில் வைத்துக்கொள்வதால் கோபமான உணர்வு அடிக்கடி ஏற்படலாம். உங்கள் பார்ட்னர் உங்களுடன் இருக்கும் போது அது உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். பல சமயங்களில் பழையதை நினைத்துக்கொண்டு நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கவே தவறலாம்.
இதை சரிசெய்வது எப்படி?
உங்களுக்குள் இருக்கும் வெறுப்புணர்வை விட்டொழிக்க நீங்கள் மனதளவிலும் உடலளவிலும் உங்களை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். அந்த வெறுப்பு ஏன் வந்தது என்பதை கண்டறிந்து, அதற்கான தீர்வை தேட வேண்டும். எந்த விஷயம் உங்கள் மனதை பாதித்ததோ, அதனை பற்றி தெரிந்து கொண்டு அதனை சரிசெய்ய வேண்டும். உங்கள் பார்ட்னர் மீது என்ன கோபம் அல்லது வெறுப்பு இருந்தாலும் அதனை அவரிடம் தெரிவித்து அது குறித்து பேச வேண்டும்.
மேலும் படிக்க | சரியான காதலை உங்கள் வாழ்கைக்குள் வரவேற்பது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ