வெயிட் ஏறாமல் இருக்க பூஜா ஹெக்டே செய்வது..கை நிறைய ‘இதை’ சாப்பிடுவாராம்!

Pooja Hegde Weight Loss Tips : பிரபல தென்னிந்திய நடிகை பூஜா ஹெக்டே, வெயிட் ஏறாமல் தனது உடலை பார்த்துக்கொள்கிறார். இதற்காக அவர் செய்யும் விஷயங்கள் என்ன தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : May 2, 2025, 01:20 PM IST
  • பூஜா ஹெக்டே வெயிட் லாஸ் டிப்ஸ்
  • வெயிட் ஏறாமல் இருக்க செய்யும் விஷயம்..
  • ஒரு கைப்பிடி ‘இதை’ சாப்பிடுவாராம்..
வெயிட் ஏறாமல் இருக்க பூஜா ஹெக்டே செய்வது..கை நிறைய ‘இதை’ சாப்பிடுவாராம்!

Pooja Hegde Weight Loss Tips : தமிழில், முகமூடி திரைப்படம் மூலம் அறிகமுகமானவர் பூஜா ஹெக்டே. இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு, இந்தி என சென்று விட்ட இவர் இப்போது இந்திய அளவில் பிரபலமான நாயகியாக வலம் வருகிறார். பூஜாவிற்கு தற்போது 34 வயதாகிறது. திரையுலகிற்கு வருவதற்கு முன்பு மிஸ் யுனிவர்ஸில் ரன்னர் அப் பட்டம் பெற்ற இவர், சில மாதங்கள் மாடல் அழகியாகவும் இருந்தார். அதன் பிறகுதான் இவருக்கு திரையுலகிற்குள் நுழைய வாய்ப்பு கிடைத்தது. 

Add Zee News as a Preferred Source

பூஜாவிடம் ஒரு விஷயத்தை கவனித்திருக்கிறீர்களா? இவர் திரையுலகிற்கு வந்த காலத்தில் இருந்து, இப்போது வரை மெல்லிய உடல் வாகுடன் மட்டுமே காணப்படுகிறார். ஒல்லியாக இருப்பது அவரது மரபணுவிலேயே இருக்கிறது என்றாலும் கூட, அவர் வெயிட் ஏறாமல் பார்த்துக்கொள்வதற்காகவும் சில விஷயங்களை செய்கிறார். அவை என்ன தெரியுமா?

டயட்:

பொதுவாக, அனைவருமே ஹெல்தியான வாழ்க்கைமுறையை பின்பற்ற வேண்டியது அவசியம். அதிலும், எப்போதும் கேமராவிற்கு முன்பு நிற்கும் நடிகர்-நடிகைகள் தங்களது உடலை ஃபிட்டாக அல்லது ஒல்லியாக வைத்துக்கொள்ள வேண்டுமென நினைப்பர். நம்ம ஹீரோயின் பூஜா, பொதுவாகவே உடல் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். இவர், தான் என்ன சாப்பிடுகிறோம் என்பதிலும் கவனத்துடன் இருப்பார். இவரது டயட்டில் புரதம் நிறைந்த உணவுகளும் நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளும் இருக்குமாம். 

காலை உணவு..

வெயிட் ஏறாமல் இருக்க வேண்டுமென்றால், அதற்கு நம் உடலுக்கு எந்த அளவு புரதம் வேண்டுமென தெரிந்து கொண்டு அந்த அளவு மட்டும் சாப்பிட வேண்டும். அதற்காக அவர் காலையில் சாப்பிடுவது, என்ன தெரியுமா? முதலில் எலுமிச்சை கலந்த நீரை குடிப்பாராம். அதன் பின்பாக, புரதம் நிறைந்த காலை உணவை எடுத்துக்கொள்வாராம். இவரது உணவில் பெரும்பாலும், முட்டையின் வெள்ளைக்கரு, அவகேடோ டோஸ்ட் அல்லது ஸ்மூதீஸ் ஆகியவை இருக்குமாம்.

கை நிறைய சாப்பிடுவது..

பூஜா, காலை 11.00 மணியளவில் சில ஹெல்தி ஸ்னாக்ஸையும் எடுத்துக்கொள்கிறார். அதற்காக அவர் ஒரு கைப்பிடி பாதாமை சாப்பிடுவாராம், இது இல்லாத சமயங்களில் வால்நட்ஸ் எடுத்துக்கொள்வார். அப்படியும் இல்லை என்றால் ஒரு கிண்ணம் நிறைய இருக்கும் ஃப்ரெஷ்ஷான பழங்களை சாப்பிடுகிறார்.

மதிய உணவு:

பூஜா, மதிய வேளையில் மெல்லிய புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்கிறார். கிரில் செய்த சிக்கன் அப்படியில்லை என்றால் மீன், பிரவுன் அரிசி, குயினோவா, ஃபைபர் அதிகம் நிறைந்த காய்கறிகள் இவரது டயட்டில் இருக்குமாம்.

மாலை ஸ்னாக்ஸ்:

மாலை வேளையில் பூஜா சில ஹெல்தி ஸ்னாக்ஸை எடுத்துக்கொள்கிறார். அதில் ஆரோக்கிய சூப், டோஃபு, பனீர் ஆகியவை அடங்குமாம். சில சமயங்களில் இது மினி மீல்ஸ் ஆகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

நீர்ச்சத்து:

உடல் எடையை சரியாக மெயிண்டெயின் செய்ய, உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக்கொள்வது அவசியம். இதனை பூஜா ஹெக்டே சரியாக செய்கிறார். இவர், தண்ணீர் அதிகமாக குடிப்பதோடு கிரீன் டீ, பழச்சாறு, டீடாக்ஸ் பானங்கள் ஆகியவற்றை அதிகமாக பருகுகிறாராம்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | விடாப்பிடி தொப்பையை குறைக்க சூப்பர் வழி! இன்ஸ்டா பிரபலத்தின் எளிமையான டிப்ஸ்.

மேலும் படிக்க | படிக்கட்டை கூட ஏற முடியாத பெண்... இப்போ எப்படி இருக்காங்க பாருங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News