Scary Dreams: துர் சொப்பனங்களும் அவற்றின் பலன்களும்..!!

துர் சொப்பனங்கள் அல்லது கெட்ட கனவுகள் வருவதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. துர்சொப்பனங்கள் மனதில் கலக்கத்தை ஏற்படுத்துகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 24, 2021, 07:28 PM IST
  • துர் சொப்பங்கள் சில நிகழ்வுகளின் ஆரம்ப அறிகுறிகளைக் காட்டுகின்றன.
  • உங்களுக்கு ஆபத்து வருவது போன்ற பயங்கரமான கனவுகளின் பலன்கள்.
  • கெட்ட கனவுகளின் சுப மற்றும் அசுப பலன்களை அறிந்து கொள்ளுங்கள்.
Scary Dreams: துர் சொப்பனங்களும் அவற்றின் பலன்களும்..!! title=

புதுடெல்லி: கனவுகளில் பல வகை உண்டு, சில மனதிற்கு மகிழ்ச்சியை கொடுப்பவை.  சில கெட்ட கனவுகள். அவை மனதில் கலக்கத்தை ஏற்படுத்தும். துர் சொப்பனங்கள் அல்லது கெட்ட கனவுகள் வருவதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. துர்சொப்பனங்கள் மனதில் கலக்கத்தை ஏற்படுத்துகிறது.  துர் சொப்பனங்கள் நிச்சயம் கெட்ட பலனைத் தான் கொடுக்கும் என அர்த்தமில்லை. சில கனவுகள் நல்ல பலனையும், சில கெட்ட பலன்களையும் குறிக்கின்றன. இருப்பினும், உங்களைப் பற்றிய சில பயங்கரமான கனவுகளைப் பார்ப்பது உங்களை கவலையடையச் செய்யலாம். உடனே ஏதோ அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் மனம் பதறுகிறது. மிகவும் பயங்கரமான சில கனவுகளின் பலன்களை இன்று நாம் அறிந்து கொள்ளலாம்.

பயங்கரமான கனவுகள் மற்றும் அவற்றின் பலன்கள்: 

ஒரு கனவில் நீங்கள் உயரத்திலிருந்து விழுவதைப் பார்ப்பது: ஒரு கனவில் நீங்கள் ஒரு பெரிய உயரத்திலிருந்து விழுவதைப் பார்ப்பது உங்கள் வருமானம் குறைவதைக் குறிக்கிறது. அதே சமயம், வரவிருக்கும் சவால்களின் அறிகுறியும் கூட.

ALSO READ | கேது பெயர்ச்சி 2022: ‘இந்த’ ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

கனவில் தனது தலை துண்டிக்கப்பட்டதைப் பார்ப்பது: ஒரு கனவில் ஒருவர் தனது தலை துண்டிக்கப்படுவதைக் கண்டால், அது பண வரவைக் குறிக்கிறது. இது தவிர, நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி பெறுவதற்கான அறிகுறியும் ஆகும்.

கனவில் விபத்து ஏற்படுவதைப் பார்ப்பது: கனவில் விபத்து ஏற்படுவதை நீங்கள் கண்டால், அது வரவிருக்கும் சிக்கல்களின் அறிகுறியாகும். அத்தகைய கனவு கண்டால், நீங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கனவில் நீங்கள் தற்கொலை செய்துகொள்வதைப் பார்ப்பது: நீங்கள் தற்கொலை செய்துகொள்வதைப் பார்ப்பது அல்லது உங்கள் கனவில் தூக்கில் தொங்குவதைப் பார்ப்பது என்பது உங்கள் மனதில், நேர்ம்றை எண்ணங்களை ஏற்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாகும்.

கனவில் நீங்கள் இறந்துவிட்டதைக் காண்பது: கனவில் நீங்கள் இறந்துவிட்டதை போலக் காண்பது அதிர்ஷ்டம் வருவதைக் குறிக்கிறது. இதற்கு 2 அர்த்தங்கள் இருக்கலாம். இந்தக் கனவைக் காண்பது உங்களின் பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வந்ததற்கான அறிகுறியாகும். இது தவிர, அத்தகைய கனவு உங்களுக்கு நீண்ட ஆயுள் என்பதையும் குறிக்கிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | பிறந்த கிழமை உங்கள் குணாதிசயத்தை எடுத்து சொல்லும்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News