சூரிய கிரகணம் 2025.. இந்தியாவில் எப்போது எந்த இடத்தில் எந்த தேதியில் பார்க்கலாம்?

Surya Grahanam 2025: 2025 ஆம் ஆண்டில் 2 சூரிய கிரகணங்கள் நிகழும். அந்த வகையில் இந்த வருடத்தின் இரண்டாவது சூரிய கிரகணம் வரும் செப்டம்பர் மாதம் நிகழப் போகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 15, 2025, 06:52 PM IST
  • சூரிய கிரகணம் எப்படி ஏற்படுகிறது?
  • 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம்
  • சூரிய கிரகணம் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி
சூரிய கிரகணம் 2025.. இந்தியாவில் எப்போது எந்த இடத்தில் எந்த தேதியில் பார்க்கலாம்?

Surya Grahanam 2025: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் கடந்த மார்ச் 29 ஆம் தேதி, 2025 அன்று நிகழ்ந்தது. அதே நாளில், அதாவது மார்ச் 29 ஆம் தேதி அன்று, சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். இதன் காரணமாக, இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. இருப்பினும், இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை, இப்போது இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் கூடிய விரைவில் நிகழப் போகிறது.

Add Zee News as a Preferred Source

2025 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம்:
2025 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி, 2025 அன்று நிகழப் போகிறது இந்த சூரிய கிரகணம் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி இரவு 11 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 22 ஆம் தேதி அதிகாலை 3.24 மணி வரை நீடிக்கும். இந்த கிரகணத்தின் காலம் 4 மணி நேரம் 24 நிமிடங்கள் இருக்கக்கூடும். இரவில் சூரிய கிரகணம் ஏற்படுவதால், இந்தியாவில் தெரியாது. எனவே, இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணத்தின் சூதக் காலமும் இந்தியாவில் செல்லாது.

அதுமட்டுமின்றி இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் அமெரிக்கா, சமோவா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜி மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் போன்ற பகுதிகளில் மட்டுமே தென்படும்.

சூரிய கிரகணம் எப்படி ஏற்படுகிறது?
கிரகணத்தை பொறுத்தவரையில், மறைக்கும் என்றும், இருள் என்றும் கூறப்படுகிறது. அதாவது கிரகணம் நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படும். சூரிய கிரகணத்தை பொறுத்தவரையில், சூரியன் மறைந்து காணப்படுவதால், இது, சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. கோள்கள் சுற்றிவரும் போது, சூரியனின் ஒளி பூமியின் மீது படாதவாறு, நடுவில் நிலா வந்து மறைத்துக் கொள்ளும். இதனால் சூரிய கதிர்கள் பூமியின் மீது சில மணி நேரங்கள் படாமல் இருக்கும். 

கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை: 

1. தர்ப்பை அல்லது துளசி இலைகளை உணவு மற்றும் தண்ணீரில் போடவும். அதனால் கிரகணத்தின் எதிர்மறை தாக்கம் அதில் ஏற்படாமல் இருக்கும். கிரகணத்திற்குப் பிறகு அவற்றை உட்கொள்ளலாம். 
2. கிரகணத்தின் போது, கடவுள் வழிபாட்டில் அதிகபட்ச நேரத்தை செலவிடுங்கள். 
3. வீட்டின் பூஜை அறை கதவை மூடி வைக்கவும். அப்போது கோவில்களின் கதவுகளும் மூடப்பட்டிருக்கும். 

கிரகணத்தின் போது செய்யக் கூடாதவை: 

1. கிரகணத்தின் போது எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும், எனவே இந்த நேரத்தில் எந்த சுப காரியமும் செய்யக்கூடாது. 
2. கிரகணத்தின் போது பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். 
3. சூரிய கிரகணத்தின் போது, உணவு சமைக்கவோ, காய்கறியை நறுக்குதல் மற்றும் உரித்தல் போன்ற வேலை செய்யவோ, உணவு உண்ணவோ கூடாது. 
4. குறிப்பாக கர்ப்பிணிகள் இந்த நேரத்தில் கத்தி-கத்தரிக்கோல் அல்லது கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது, அவற்றைக் கையில் எடுக்கக்கூடாது. 
5. கிரகணத்தின் போது ஊசியில் நூல் கோர்ப்பது, தையல் வேலை பார்ப்பது போன்றவை கூடாது.

மேலும் படிக்க | கூலிங் கிளாஸ்: பார்வைக்கு ஸ்டைலா? பயனில் சிக்கலா? முழுமையாக தெரிந்துகொள்வோம்!

மேலும் படிக்க | இரண்டாவது சூரிய கிரகணம் 2025.. எங்கெல்லாம் பார்க்கலாம்? இந்தியாவில் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News