காமம் என்பது அவசியம் தான், அதற்காக அநாவசிய செலவு செய்பவர்கள் பலர். இதில் சிலர் தங்களது உயிரையே விலையாக கொடுத்து விடுகின்றனர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலை நாடுகளில் பலர் தங்களது காம பசியை போக்கிக்கொள்ள செக்ஸ் ரோபாட்ஸ் எனப்படும் இயந்திரங்களின் உதவியை நாடி வருகின்றனர். இந்த ரோபாட்கள், தொழில்நுடப் கோளாறு காரணமாக சில சமயங்களில் மனிதர்களையே கொன்று விடும் தன்மை படைத்தது என பிரபல செக்ஸ் ரோபாட் சேகரிப்பாளர் தெரிவித்துள்ளார்.


விரைவான பாய்ச்சலை நோக்கி செல்லும் நபர்கள் பெரும்பாலும் இளம் வயதினராக இருப்பதில்லை, முதியவர்களே என களப்பணி தகவல் தெரிவிக்கின்றது. இணையத்தில் கிடைக்கும் இயந்திரங்களை புகைப்படங்களை கொண்டு வாங்கி தங்கள் பசிக்கு உணவாக்குகின்றனர். காரணம் இந்த பாலியல் பொம்மைகள் மனிதர்களை போல் சண்டையிடுவதில்லை, வாக்குவாதம் செய்வதில்லை, தன்னுடனான உறவை முறித்துக்கொள்வதில்லை. இதன் காரணமாகவே பாலியல் பொம்மைகளின் மீதான காதல் தற்போது அதிகரித்து வருகிறது.


ஆனால் இந்த காதல் முட்டாள்தனது, ஒருநாள் கனவாக மாறும் நிலை கொண்டது என செங்கல் டால்பேங்கர் என்ற புனைப்பெயரில் அறியப்பட்டும் பாலியல் பொம்மை சேகரிப்பாளர் எச்சரிக்கிறார்.


ரியல் போடிக்ஸ் மற்றும் அபிஸ் போன்ற உற்பத்தியாளர்களுக்கான தயாரிப்புகளை பரிசோதிக்கும் பணியில் ஈடுபடும் செக்ஸ்பாட் நிபுணர் செங்கல் டால்பேங்கர், தினம் தினம் புதிய தலைமுறை பாலியல் பொம்மைகளில் குறியீட்டு பிழைகளை ஆய்வு செய்வது தான் இவரது வேலை. 


ரோபோகளுடன் வாழ்ந்து வரும் இவர், இந்த பாலியல் பொம்பைகள் சில தொழில்நுடப் கோளாறு காரணமாக வன்முறையில் ஈடுபடலாம் என எச்சரிக்கின்றார். பாலியல் பொம்மைகள் பெரும்பாலும் இணையதள சேவை மூலமே வாங்கப்படுகின்றன. கடையில் நேரடியாக சென்று வாங்குபர்களும் மற்ற இயந்திரங்களை போல் இந்த பாலியல் பொம்மைகளை பரிசோதித்து வாங்குவதில்லை. இதனால் இந்த பொம்மைகளில் உள்ள பிழைகளையும் நம்மாள் புரிந்துக்கொள்ள இயல்வதில்லை. இந்நிலையில் பயன்பாட்டின் போது இந்த பொம்மைகளுக்குள் ஏற்படும் மாற்றம் தனது இணையாளரின் உயிரையே பறித்துவிடும் வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கின்றார் செங்கல் டால் பேங்கர்.