ரேஸ் ஓடுவது போல் வேகமாக சாப்பிடுபவரா நீங்கள்? அதன் விளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்!

Side Effects Of Fast Eating : ஒரு சிலருக்கு, அதி வேகமாக சாப்பிடும் பழக்கம் இருக்கும். அப்படி சாப்பிடுவதால் என்ன ஆகிறது தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Jun 19, 2025, 05:42 PM IST
  • வேகமாக சாப்ப்பிடுபவரா நீங்கள்?
  • இதனால் வரும் பிரச்சனைகள்..
  • என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்
ரேஸ் ஓடுவது போல் வேகமாக சாப்பிடுபவரா நீங்கள்? அதன் விளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்!

Side Effects Of Fast Eating : அனைவரும் அமர்ந்து ஒன்றாக சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, ஒரு நபர் மட்டும் கூட்டத்தில் சில வினாடிகளில் சாப்பிட்டு முடிப்பவராக இருப்பார். அவர்களை பார்க்கும் போது பிறருக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அப்படி சாப்பிடுவதால் உடலில் என்னென்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா?

குறுகிய கால பாதிப்புகள்:

அதிகம் சாப்பிடுதல்: உங்கள் மூளையானது, நீங்கள் உணவு சாப்பிட்டதை பதிவு செய்ய, 20 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். எனவே, நீங்கள் அதற்கும் குறைவான நேரத்தில் சாப்பிட்டு முடித்து விட்டால் உங்கள் வயிறு நிரம்பி விட்டது எனும் சிக்னலை மூளை கொடுக்காது. இதனால், நீங்கள் இன்னும் அதிகம் சாப்பிட நேரிடலாம்.

செரிமான கோளாறு:

விரைவாக சாப்பிடுபவர்கள் அதிகம் மென்று சாப்பிடுபவர்களாக இருக்க மாட்டார்கள். இதனால், வயிற்றுக்கு செல்லும் உணவுகள் சரியாக செரிமானம் ஆகாமலேயே சென்று விடுகிறது. இந்த காரணத்தால் செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதோடு, வயிற்று உப்பசம், கேஸ், அசௌகரியம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். 

ஆசிட் ரிஃப்ளக்ஸ்: அதிகப்படியான உணவுகளை உடைத்து சாப்பிடாத போது, வயிற்றில் ஆசிட் ரிஃப்ளக்ஸ் எனும் அமில அழற்சி பிரச்சனை ஏற்படலாம். இதனால், வயிற்றில் சில பிரச்சனைகள் உண்டாகும். 

மூச்சு முட்டுதல்: பல சமயங்களில், வேகமாக சாப்பிடும் போது தொண்டையில் உணவு சிக்கிக்கொள்ளலாம். இதனால், மூச்சு விட முடியாமல் போகலாம். பலர், இப்படி உணவுக்குழாயில் உணவு சிக்கிக்கொள்வதால் இறந்தும் போய் இருக்கின்றனர். எனவே, இதை தவிர்க்க உணவை நன்கு மென்று பின்பு சாப்பிடலாம்.

நீண்ட கால விளைவுகள்:

எடை அதிகரிப்பு: இப்படி, தினமும் சாப்பிடும் உணவை மெல்லாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தால் அது எடை அதிகரிப்புக்கு வழி வகுக்கலாம். இதனால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். எனவே, இதை தவிர்க்க குறைவாக மென்று சாப்பிடலாம். 

வளர்சிதை மாற்றங்கள்:

வேகமாக சாப்பிடுவது இன்சுலின் எதிர்ப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொழுப்பு ஆகியவற்றின் அதிக அபாயத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. இதனால், இளம் வயதிலேயே பல உடல் நலக்கோளாறுகள் ஏற்படலாம். 

எப்படி சாப்பிட வேண்டும்? 

ஒரு வாய் உணவை 20-30 முறை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

ஸ்பூனை உபயோகித்து சாப்பிடும் போது அதனை கீழே வைத்துவிட்டு நன்கு மென்று சாப்பிடுங்கள்.

டிவி, மொபைல் போன் உள்ளிட்டவற்றை சாப்பிடும் போது உபயோகிக்க வேண்டும். இவை நமக்கு கவனச்சிதறலை ஏற்படுத்துவதோடு, முழு மனதாக நம்மை சாப்பிட விடாது.

இப்படி வேகமாக சாப்பிடுவதில், தோராயமாக பெண்களை விட ஆண்கள்தான் முதலிடத்தில் இருக்கின்றனர். காரணம், ஆண்கள் பெண்களை விட அதிக அளவை எடுத்து சாப்பிடுகிறார்கள். அதே போல, குறைவாகவும் ஒரு உணவை மெல்கிறார்கள். அது மட்டும் கிடையாது, ஆண்கள் எப்படி சாப்பிட்டாலும், எவ்வளவு சாப்பிட்டாலும் அதற்கு இந்த சமூகத்தில் கேள்வி கிடையாது. ஆனால், ஒரு பெண் எந்த அளவு சாப்பிடுகிறாள், எவ்வளவு வேகமாக சாப்பிடுகிறாள் என்பதை இந்த சமூகம் பார்த்துக்கொண்டே இருக்கிறது. ஒரு பெண், ஆண் போல் சாப்பிடால் அவளை மரியாதை தெரியாதவள்-இங்கிதம் தெரியாதவள் என்றெல்லாம் கூறிவிடுவர். இந்த சமூக கட்டமைப்பும் இந்த வேறுபாட்டிற்கு ஒரு பெருங்காரணமாக இருக்கிறது. 

மேலும் படிக்க | வெயிட் லாஸ் முதல் வலுவான தசை வரை... புரதச்சத்தை அள்ளி வழங்கும் சூப்பர் சைவ உணவுகள்

மேலும் படிக்க | 2 வாரத்தில் எடை குறைக்க உதவும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News