)
Similar Words In Tamil And Kannada : தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததா? கன்னடம் தமிழ் மொழியின் சகோதர மொழியா? என பல்வேறு கேள்விகள் கடந்த சில நாட்களாக ட்ரெண்டாகி வருகிறது. இந்த நிலையில், கன்னடத்திலும் தமிழிலும் ஒரே மாதிரியாக இருக்கும் சில வார்த்தைகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
கன்னடம் தமிழில் இருந்து பிறந்ததா?
திராவிட மொழிகளாக விளங்குபவை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகியவை. தென்னிந்தியாவின் முக்கிய மாநிலங்களில் இந்த மொழிகள்தான் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. என்னதான், வடக்கில் இருக்கும் இந்தி மொழி இங்கு ஆதிக்கம் செலுத்த நினைத்தாலும், எதற்கும் அசைந்து கொடுக்காமல் தமிழை கட்டிக்காத்து வருகின்றனர்.
சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன், “கன்னடம் தமிழிலிருந்து பிறந்ததது” என்று கூறியது கடும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. சில மொழி ஆராயச்சியாளர்கள் இவை இரண்டும் மூதாதயர்கள் பேசிய Proto-Dravidian மொழியில் இருந்து வந்தவை என்று கூறுகின்றனர். இன்னும் சிலர், கமல் கூறியது சரிதான் என்கின்றனர். இதற்கிடையில் பலர் கன்னடமும் தமிழும் சகோதர மொழிகள்தான் என்றும் கூறுகின்றனர். இதில் எது உண்மை என்கிற ஆராயச்சி ஒரு புறம் நடந்து வர, சிலர் கன்னடத்தில் இருக்கும் சில வார்த்தைகள் தமிழ் வார்த்தைகள் போல இருப்பதாக கூறி வருகின்றனர். அவை என்ன வார்த்தைகள்? அவற்றிற்கு என்ன அர்த்தம்? இங்கு பார்ப்போம்.
ஒரே மாதிரியான வார்த்தைகள்..
தமிழ் மொழியுடன் ஒத்துப்போகும் சில வார்த்தைகள், திராவிட மொழிகளான மலையாளம் மற்றும் கன்னடத்தில் இருக்கிறது. அந்த வார்த்தைகளை இங்கு பார்ப்போம்.
| தமிழ் | கன்னடம் |
| யார் | யாரு |
| அவை | அவு |
| எந்த | யாவுது |
| என்ன | ஏனு |
| எவ்வளவு | எஸ்டு |
தமிழில் ”யார்” என்று கேட்போம் இல்லையா, கன்னடத்தில் அதையே கொஞ்சம் மாற்றி “யாரு” என்று கேட்க வேண்டும். அதே போல, தமிழில் “அவை” என்பதை கன்னடத்தில் “அவு” என்று கூற வேண்டுமாம். “எந்த” என்பதற்கு கன்னடத்தில் “யாவுது”, என்ன என்பதற்கு “ஏனு” எவ்வளவு என்பதற்கு கன்னடத்தில் “எஸ்டு” என்று வார்த்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
உறவு முறையை குறிப்பிடும் வார்த்தைகள்:
அம்மாவை தமிழில் “தாய்” என்போம், கன்னடத்தில் அதையே “தாயீ” என்கின்றனர். அப்பாவை, “தந்தை” என்கிறோம், கன்னடத்தில் “தண்டே” என்கின்றனர். அண்ணனை இரு மொழிகளிலும் “அண்ணன்” என்கின்றனர். அக்காவிற்கும் அதே போலத்தான். இளைய சகோதரியை தமிழில் தங்கச்சி என்போம் கன்னடத்தில் தங்கி என்கின்றனர். தாயின் சகோதரரை மாமா என்கிறோம், கன்னடத்தில் மாவா என்கின்றனர்.
| தமிழ் | கன்னடம் |
| தாய் | தாயீ |
| தந்தை | தண்டே |
| அண்ணா | அண்ணா |
| தம்பி | தம்மா |
| அக்கா | அக்கா |
| தங்கச்சி | தங்கி |
| மாமா | மாவா |
தூக்கத்திற்கு தமிழில், நித்திரை, கன்னடத்தில் நித்ரே, தினத்திற்கு தினா, தலையை குறிப்பிடுவதற்கு தலே என பல சொற்கள் இப்படி இரு மொழிகளிலும் ஒரே மாதிரி இருக்கின்றன. குழந்தைகளை குறிப்பிட, பிள்ளை என்போம், கன்னடத்தில் மகா அல்லது மக்களு என்கின்றனர். ”கண்” எனும் சொல்லிற்கும் இரு மொழிகளிலும் ஒரே அர்த்தம்தான்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ